Published:Updated:

இது காருக்கானது இல்லை; கார் ஓனர்களுக்கானது!

ஹூண்டாய்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய்

ஆன்லைன் வொர்க்ஷாப்: ஹூண்டாய்

இந்த மாதம் வொர்க்ஷாப் மாதம். ஏகப்பட்ட ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்கள். அனைத்துமே ஆன்லைனில் நடந்தவை. அதில் பலதரப்பட்ட கார் ஓனர்களும் கலந்து கொண்டு உரையாடிய வொர்க்ஷாப் – டிசம்பர் 20–ம் தேதி புன்னைவனம் சங்கரமூர்த்தி நடத்திய கார் சர்வீஸ் பற்றிய வொர்க்ஷாப்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

புன்னைவனம் சங்கரமூர்த்தி ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் சர்வீஸ் துறையின் துணைத் தலைவர் நாடு முழுதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹூண்டாய் சர்வீஸ் மையங்களை நிர்வகிக்கும் பெரிய பொறுப்பில் இருப்பவர். ஹூண்டாய் மட்டுமல்ல; மாருதி, ஃபியட் போன்ற கம்பெனிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி அனுபவத்தைச் சேகரித்தவர்.

புன்னைவனம் சங்கரமூர்த்தி
புன்னைவனம் சங்கரமூர்த்தி

சர்வீஸ் என்றால், ரொம்பவும் டெக்னிக்கலாகப் போகும் என்று நினைத்தால், ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்று திருக்குறளில் தொடங்கி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் புன்னைவனம். ‘நண்பேன்டா’ என்று காரை அரவணைக்க வேண்டும் என்று அவர் சொன்ன டிப்ஸ்கள் அனைத்தும், கார் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஃபாலோ செய்ய வேண்டியவை.

மழை, புயல் நேரங்களில் ஒரு காரை மரத்துக்கு அடியிலோ, தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளிலோ நிறுத்தக் கூடாது என்று பார்க்கிங்கில் ஆரம்பித்து, BS-6 இன்ஜினால் என்ன நன்மை – எப்படி வேலை செய்கிறது... ஆபத்துக் காலங்களில் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்துவது எப்படி… உங்கள் காரில் இருக்கும் வசதிகளைத் தெரிந்து கொள்வது எப்படி… மைலேஜ் செமையாகக் கிடைக்க காரை எப்படி ஓட்ட வேண்டும்… உங்கள் காரை ரீ–சேல் செய்யும்போது அதன் மதிப்பை எப்படி உயர்த்துவது என்பது வரை எக்கச்சக்க டிப்ஸ்கள்.

ஃபேஸ்புக் லைவ் போய்க்கொண்டிருக்கும் போதே, வைப்பர் பிளேடைப் பராமிரக்க என்ன செய்ய வேண்டும்? பெட்ரோல் கார் பெஸ்டா… டீசல் கார் பெஸ்ட்டா? என்று கமென்ட் பாக்ஸில் கேள்விகளும் குவிய ஆரம்பித்து விட்டன.

இது காருக்கானது இல்லை; கார் ஓனர்களுக்கானது!

ஒரு சின்ன உதாரணம்: 4 ஆண்டுகள் ஓடிய இரண்டு பழைய கார்கள். அவற்றை ரீ–சேல் செய்யும்போது முதல் காரின் விலை 3.85,000–க்குப் போகிறது. இரண்டாவது காரின் விலை 3.15,000. அதாவது, ரூ.70,000 வரை விலை வித்தியாசம். முதல் கார் – PMS (Periodic Maintenance Service), இரண்டு தடவை மட்டுமே பாடி ரிப்பேர் செய்யப்பட்ட கண்டிஷன், எக்ஸ்டெண்டட் வாரன்ட்டி, ரோடு சைடு அசிஸ்டென்ஸ் கவரேஜ், நல்ல க்ளட்ச்/டயர் கண்டிஷன் என்று பக்காவாகப் பராமரிக்கப் பட்டிருக்கிறது. இரண்டாவது கார் - அன் ஆத்தரைஸ்டு வொர்க்ஷாப்களில் சர்வீஸ் விடப்பட்டிருக்கிறது. இது ஒன்றே போதும் – விலை குறைய என்று பட்டியலிட்டே போட்டுக் காண்பித்தார்.

ஓகே! அப்படியென்றால், காரை சூப்பராகப் பராமரிப்பதில் மட்டும் இல்லை; நமது டிரைவிங்கிலும் இருக்கிறது சூட்சுமம். அதற்கும் நச்சென்று சில டிப்ஸ்கள். கிராஜுவலான ஆக்ஸிலரேஷன், க்ளட்ச் பயன்பாடு, எரிபொருளை ஒட்ட ஒட்டக் காலி செய்து ஓட்டுவது என்று நாம் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டினார்.

முக்கியமாக DIFS என்று அவர் சொன்ன ஒரு அட்டவணை செம! Driving Behaviour, Instrument Cluster, Fuel Mileage, Seasonal Tips - இதுதான் DIFS. இந்த அட்டவணையை ஒழுங்காகப் பராமரித்தால், ரீ–சேல் மதிப்பில் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய அவசியமில்லை.

அதாவது, இந்த வொர்க்ஷாப்பின் நோக்கம் – இது காருக்கான வொர்க்ஷாப் இல்லை; கார் ஓனர்களுக்கானது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புன்னைவனம் சங்கரமூர்த்தி, கார்களைப் பற்றிச் சொன்ன டிப்ஸ்களை வீடியோவாகப் பார்க்க…

www.facebook.com/MotorVikatan பக்கத்துக்கு வாங்க!