Published:Updated:

ஹூண்டாய் வென்யூ: `மேனுவல் பாதி, ஆட்டோமேட்டிக் மீதி!’ -AMT தெரியும்… அதென்ன iMT?

Hyundai Venue iMT
Hyundai Venue iMT

காரின் வேகத்துக்கு ஏற்ப, கியர்லீவரோடு இணைக்கப்பட்டிருக்கும் சென்ஸார், உங்களுக்கான கியர் இண்டிகேஷனைச் சொல்லிவிடும். இதற்கென இருக்கும் சென்ஸார், ஹைட்ராலிக் ஆக்சுவேட்டர் – இதில்தான் இந்தத் தொழில்நுட்பத்தின் விஷயமே அடங்கியிருக்கிறது.

எதையாவது புதுமைகளைச் செய்துகொண்டே இருப்பதுதான் ஹூண்டாயின் வழக்கம். விலை குறைந்த தனது கார்களில், முதன் முதலில் வெண்டிலேட்டட் சீட்ஸ் கொண்டுவந்து அசத்தியது. I10 நியோஸில் டிரைவருக்கான ரியர்வியூ மானிட்டர் கொண்டுவந்தது. இப்போதும் ஒரு புதுமையோடு களம் இறங்கி இருக்கிறது ஹூண்டாய். தனது சின்னஞ்சிறு வென்யூ காரில் iMT (Intelligent Manual Transmission) ஆட்டோமேட்டிக் ஆப்ஷனைக் கொண்டுவந்துவிட்டது.

iMT (Intelligent Manual Transmission)
iMT (Intelligent Manual Transmission)

லோ பட்ஜெட் கார்களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்கள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இவற்றை AMT (Automated Manual Transmission) என்போம். கியர் போடத் தேவையிருக்காது; க்ளட்ச் பெடலும் இருக்காது. டிராஃபிக்கில் ஓட்ட செமையான ஆப்ஷன், இந்த AMT. ஆல்ட்டோ, செலெரியோ, கிராண்ட் i10 நியோஸ், ஆரா, நெக்ஸான், டியாகோ, பிரெஸ்ஸா, வேகன்-ஆர் என்று லோ பட்ஜெட் கார்களில் இவை உண்டு. இதற்கு அடுத்தபடியாக, கொஞ்சம் காஸ்ட்லியாக வந்தது CVT. பெலினோ, ஹோண்டா சிட்டி, அமேஸ், கொரோலோ போன்ற கார்களில் இவை உண்டு. இதற்கு அடுத்த காஸ்ட்லி மாடல் – DCT, டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ்.

Hyundai Venue
Hyundai Venue

இதைத் தாண்டித்தான் இப்போது ஹூண்டாய் புதிதாக, iMT (Intelligent Manual Transmission) என்றொரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை தனது வென்யூ காரில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஆட்டோமேட்டிக்தானே… இதிலென்ன புதுமை என்கிறீர்களா? இதில்தான் விஷயமே இருக்கிறது. இதில் க்ளட்ச் இருக்காது. பிரேக், ஆக்ஸிலரேட்டர் என இரண்டு பெடல்கள் மட்டும்தான். ஆனால், கியர் லீவர் உண்டு. அதாவது, கியரைப் பொறுத்தவரை நமது முடிவு.

1.0 T-GDi BS-6 பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கொண்ட இந்த iMT வென்யூவில், நாம்தான் கியர் மாற்ற வேண்டும். காரின் வேகத்துக்கு ஏற்ப, கியர்லீவரோடு இணைக்கப்பட்டிருக்கும் சென்ஸார், உங்களுக்கான கியர் இண்டிகேஷனைச் சொல்லிவிடும். இதற்கென இருக்கும் சென்ஸார், ஹைட்ராலிக் ஆக்சுவேட்டர் – இதில்தான் இந்தத் தொழில்நுட்பத்தின் விஷயமே அடங்கியிருக்கிறது. அதாவது, மேனுவல்-ஆட்டோமேட்டிக் என கலந்துகட்டி ஓட்டும் அனுபவம் டிரைவர்களுக்குக் கிடைப்பதற்காக இந்தத் தொழில்நுட்பமாம். பேடில் ஷிஃப்டர்கள் பயன்படுத்தி, கார் ஓட்டுபவர்களுக்கு நிச்சயம் இந்த வென்யூவை ஓட்டப் பிடிக்கும்.

Hyundai Venue
Hyundai Venue

”தினசரிப் பயன்பாட்டை மனதில் வைத்துதான் இந்த iMT நாங்கள் வென்யூவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதை நாங்கள் ‘Future Ready’ எனும் ஸ்ட்ரேட்டஜியின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளோம்” என்கிறார், ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கிம். அதாவது, மேனுவல் பாதி – ஆட்டோமேட்டிக் மீதி. என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதைக்கு, வென்யூவில் அறிமுகப்படுத்தியிருக்கும் ஹூண்டாய், அடுத்து வரும் கார்களிலும் iMT கியர்பாக்ஸைப் பொருத்தலாம்.

அடுத்த கட்டுரைக்கு