Published:Updated:

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வென்யூ IMT Petrol... `அட, புதுசா இருக்கே!'

ஹூண்டாய் வென்யூ IMT Petrol
ஹூண்டாய் வென்யூ IMT Petrol

ஏஎம்டி தெரியும்; டார்க் கன்வெர்ட்டர் தெரியும்; DSG தெரியும். அதென்ன IMT?

கார்களில் ஏதாவது புதுமைகளைப் புகுத்திக் கொண்டே இருப்பதில் ஹூண்டாய்தான் பெஸ்ட். இப்போது கியர்பாக்ஸில் புதுமையைத் தொடங்கி விட்டது ஹூண்டாய். க்ளட்ச் இல்லாத IMT எனும் கியர்பாக்ஸைத் தனது வென்யூ காரில் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய்.

வழக்கமான அதே H பேட்டர்ன் கியர்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஓகே. ஆனால், பக்கத்தில் இருப்பவர்கூட கியர் என்கேஜ் செய்யலாம் என்பது மைனஸ். க்ளட்ச் பெடல் இல்லை. ஓட்டுவதற்குக் கொஞ்சம் பழக வேண்டும். வென்யூவின் டர்போ மாடலில் மட்டும்தான் இந்த IMT கியர்பாக்ஸ் மாடல் கொண்டு வந்துள்ளது ஹூண்டாய்.

ஹூண்டாய் வென்யூ IMT Petrol
ஹூண்டாய் வென்யூ IMT Petrol
ஏஎம்டி தெரியும்; டார்க் கன்வெர்ட்டர் தெரியும்; DSG தெரியும். அதென்ன IMT?
'ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தானே... இதுல என்ன புதுமை இருக்கு' என்கிறீர்களா? ஆட்டோமேட்டிக் போலவே இதில் க்ளட்ச் இருக்காது; ஆனால் கியர் இருக்கும். அதாவது மேனுவல் கியர்பாக்ஸ்... மேனுவலாக நாம்தான் கியர் போட வேண்டும்.

டிரைவர்களுக்கான உடல் உளைச்சலைக் குறைப்பதற்காக இந்த IMT–யைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறது ஹூண்டாய். லாக்டெளன் தளர்வுகள் ஆரம்பித்த ஒரு கடுமையான டிராஃபிக்கில், வென்யூ IMT–யை ஓட்டிப் பார்த்தோம்.

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் கடுமையான டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் வென்யூவைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். இப்போது அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் ஸ்போர்ட்ஸ் எனும் மாடல் வென்யூவில் வந்திருக்கிறது. நமக்கு வந்தது வெள்ளை நிற சாதாரண IMTதான். கார் சிறுசாக இருந்தாலும் டைமண்ட் கட் அலாய் வீல்கள், அகலமான கிரில், சின்ன சன்ரூஃப் என இதன் ரோடு பிரசன்ஸ் அற்புதமாகவே இருக்கிறது.

கார் டிரைவிங்கில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருந்தாலும், வென்யூ IMT–யில் உட்கார்ந்தால், 'அட, புதுசா இருக்கே' என்று ஒரு புன்முறுவல் தானாகப் பூத்துவிடும்.

ஹூண்டாய் வென்யூ IMT Petrol
ஹூண்டாய் வென்யூ IMT Petrol

பொதுவாக, மேனுவல் கார்களில் க்ளட்ச்சை அழுத்தினால்தான் கியர் என்கேஜ்டு ஆகும். இதில் க்ளட்ச்சை மிதிக்காமலே கியர் விழுவதால், பக்கத்தில் சேட்டை பார்ட்டிகள் மற்றும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த IMT–யை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

- முழுமையான ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவத்துடன் ப்ளஸ், மைனஸ்களை மோட்டார் விகடன் இதழில் வாசிக்க > IMT பாதுகாப்பா... ஜாலியா? https://bit.ly/312YGCW

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு