Published:Updated:

கார் பிரேக் பிடிக்கவில்லை! முறையாக பராமரிப்பது எப்படி? | Importance of Brake

Car Brake Maintenance
News
Car Brake Maintenance

Importance of brake and car brake maintenance tips explained in this video

காரில் எது வேலை செய்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பிரேக் வேலை செய்ய வேண்டும். கார் பயணங்களில் நம் உயிரை காப்பதே பிரேக்தான். மிக முக்கியத்துவம் வாய்ந்த கார் பிரேக்கை பராமரிப்பது எப்படி என்பதை விரிவாக விளக்குகிறார் அஸ்வின்ராஜ் வர்மா... Importance of brake and car brake maintenance tips. முழு வீடியோவை பாருங்கள்...

பொதுவாக, மலை இறக்கங்களில் கார் ஓட்டும்போது, நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறு இதுதான். அதாவது, பிரேக் பெடலில் காலை வைத்துக்கொண்டே கார் ஓட்டுவோம். இதனால், பிரேக் டிரம்களும் டிஸ்க் பெடல்களும் சூடாகி, ஜாம் ஆகிவிடும். அதனால், உங்கள் பிரேக் பழுதடைந்ததுபோல் உங்களுக்குத் தெரியும். ஆனால், இது முழுக்க முழுக்க உங்கள் டிரைவிங்கால் ஏற்படும் பிரச்னைதான். கார்களின் தயாரிப்புப் பிரச்னை இல்லை. அப்படி பிரேக் சூடாகும் நேரத்தில், ஏதாவது ஒரு வளைவில் பாதுகாப்பாக காரை நிறுத்திவிட்டு, சூடாக ஒரு டீ/ஸ்நாக்ஸ் அடித்துவிட்டுக் கிளம்புங்கள். எல்லாம் பக்காவாகி விடும்.

மலை இறக்கங்களில் இறங்கும்போது, சிலர் ஜர்ரென 4 அல்லது 5–வது கியர்களில் இறங்குவார்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம்; கார் உங்கள் கன்ட்ரோலில் இருக்காது என்பதைத் தாண்டி, நீங்கள் பிரேக் பிடித்தபடியேதான் ஓட்டிக் கொண்டிருப்பீர்கள். இதனால்தான் இந்த பிரேக் பழுதடையும் பிரச்னை ஏற்படுகிறது. இறக்கங்களில் 2–வது கியரைப் பயன்படுத்துவதுதான் நல்லது. முடிந்தவரை பிரேக்கில் கால் வைத்தபடி ஓட்டுவதைத் தவிர்க்கலாம். ஆனால், கன்ட்ரோல் தேவை. இன்னும் சிலர் எரிபொருளை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று நியூட்ரலிலோ, இன்ஜினை ஆஃப் செய்துவிட்டோ இறங்குவார்கள். இந்த மாதிரி நேரங்களில் உங்கள் காரின் பிரேக், 60%தான் வேலை செய்யும். இது எல்லாவற்றையும்விட பேராபத்து என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz