Published:Updated:

இந்தியா முழுவதும் 17,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் முடிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்தியன் ஆயில் & பாரத் பெட்ரோலியம்
இந்தியன் ஆயில் & பாரத் பெட்ரோலியம்

இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நாடு முழுவதும் புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கின்றன.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியும் விற்பனையும் சீரான அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது. வாகன உற்பத்தியாளர்களும் தொடர்ந்து பெட்ரோல் டீசல் கார்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்குக் காரணம் எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் இருப்பது தான். எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றால், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு நாடு முழுவதும் அதிக அளவிலான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியம்.

EV சார்ஜிங் ஸ்டேஷன்
EV சார்ஜிங் ஸ்டேஷன்

தொடர்ந்து பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவும் பணிகளில் இறங்கியிருக்கின்றன. தற்போது இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் நாடு முழுவதும் புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கின்றன. இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 27,500 பெட்ரோல் மற்றும் டீசல் ஸ்டேஷன்கள் மற்றும் 448 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 10,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கிறது இந்தியன் ஆயில். இந்தத் திட்டத்திற்காக டாடா பவர், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பெல், ஓலா, ஃபோர்டம், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது இந்தியன் ஆயில்.

ஓலா ஸ்கூட்டர் S1 அல்லது S1 Pro…
எதுக்கு மவுசு அதிகம்?
EV சார்ஜிங் ஸ்டேஷன்
EV சார்ஜிங் ஸ்டேஷன்

இந்தியன் ஆயிலைத் தொடர்ந்து பாரத் பெட்ரோலியமும் தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் ஸ்டேஷன்களில் 7,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் முடிவில் இருக்கிறது . இவை மட்டுமின்றி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் நாடு முழுவதும் 5,000 எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கான அனுமதியைக் கடந்த செப்டம்பர் மாதமே கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஹிந்துஸ்தான் பெட்ரோலியமும் டாடா பவர் மற்றும் மேக்னட்டா EV சிஸ்டம் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு