Published:Updated:

ஓய்ந்து கிடக்கும் பைக் ரைடர்களே... உங்கள் நேரத்தைக் கழிக்க உதவும் இந்த கேம்ஸ்! #BikeRiders

Mario
News
Mario ( Google Play Store )

பைக் ரைடர்களைப் பொறுத்தவரை, நெரிசல்மிக்க டிராஃபிக்கில் பைக்கை வளைத்து நெளித்து செல்வது வரை நேர்க்கோட்டில் பைக்கை விரட்டுவது போன்ற விஷயங்களை நிச்சயம் மிஸ் செய்வார்கள். தற்போதைய சூழலில் இதற்கான மாற்றாக, சில கேம்கள் இருக்கின்றன.

கொரோனா... இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மருத்துவத்துறையும் அரசாங்கமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களாகிய நாம், இதன் வீரியத்தைக் கட்டுப்படுத்த ஏதுவாக அவரவர் வீடுகளில் தொடர்ச்சியாக அடைபட்டிருக்கிறோம். இதில் சிலருக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செலவிட அதிக நேரம் கிடைத்திருக்கிறது. ஆனால், பலருக்கு வீட்டிலிருந்து வேலைபார்க்க வேண்டிய சூழலே நீடிக்கிறது. இதில் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாவிட்டால், பலருக்குப் பொழுதைக் கழிப்பது கடினமான விஷயமாகவே இருக்கும். பைக் ரைடர்களைப் பொறுத்தவரை, நெரிசல்மிக்க டிராஃபிக்கில் பைக்கை வளைத்து நெளித்து செல்வது வரை நேர்க்கோட்டில் பைக்கை விரட்டுவது போன்ற விஷயங்களை நிச்சயம் மிஸ் செய்வார்கள். தற்போதைய சூழலில் இதற்கான மாற்றாக, சில கேம்கள் இருக்கின்றன. இவற்றை பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் விளையாட முடியும் என்பதுடன், அவை இலவசமாகவும் கிடைக்கின்றன என்பது ப்ளஸ். எனவே, சாலையில் பைக் ஓட்டமுடியாத காரணத்தால், அதை விர்ச்சுவலாகச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மற்றபடி இன்னும் நேரம் இருந்தால், ஹெல்மெட் - கிளவுஸ் - ரைடிங் ஜாக்கெட் போன்றவற்றை சுத்தம் செய்யலாம். அவ்வப்போது மழை எட்டிப்பார்த்தாலும், உங்கள் பைக்கை நீங்களே துடைப்பதற்கு ஈடாகாது.

Traffic Rider - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 4.5

Traffic Rider
Traffic Rider
Google Play Store

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பைக்கின் த்ராட்டிலைத் திருகி, நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்வது யாருக்குத்தான் பிடிக்காது? இந்தக் கேமில் நீங்கள் மற்ற வாகனங்களுக்கு நெருக்கத்தில் சென்று ஓவர்டேக் செய்யும்போது கிடைக்கும் த்ரில்லை, வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீங்கள் ஓட்டும் பைக்கின் டாப் ஸ்பீடை எட்ட முடியும் என்பதுடன், அதை வளைத்து நெளித்து ஓட்டவும் செய்யலாம். இங்கே ஒருவர் தேர்ந்தெடுக்கப் பலவிதமான பைக்குகள் மற்றும் சாலைகள் இருப்பது ப்ளஸ். மேலும், அவ்வப்போது பைக் வீலிங்கும் செய்யலாம் (முன்வீலைத் தூக்குவது). கேம் லிங்க் இதோ

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

SBK16 - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 4.0

SBK16
SBK16
Google Play Store

ஸ்மார்ட்ஃபோனுக்கான சிறந்த மோட்டார் ஸ்போர்ட் கேம் என இதைத் தாராளமாகச் சொல்லலாம். World Superbike Championship-ன் அனுமதியுடன் தயாரிக்கப்பட்ட கேம் என்பதால், இதில் உண்மையான ரேஸ் டிராக்குகள் மற்றும் ரைடர்கள் உண்டு. எனவே, மொபைலில் அதிரடியான ரேஸ் அனுபவம் கியாரன்ட்டி. ஆனால், இது லேட்டஸ்ட் சீஸன்களைப் (2019/2020) பின்பற்றாதது மட்டுமே நெருடல். இது உங்களுக்குப் பிரச்னை என்றால், MotoGP 19 கேமை நீங்கள் விளையாடலாம். ஆனால், அதில் ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக்கிங்கை மட்டுமே நீங்கள் கட்டுப்படுத்த முடியும். மற்றபடி ஸ்டீயரிங் தானாக இயங்குவதால், இதில் இதர ரைடர்களை ஓவர்டேக் செய்யக்கூடிய ஃபீல் கிடைக்காது. இதனுடன் ஒப்பிடும்போது, SBK16 கேம் நார்மலான கிராஃபிக்ஸ் & Frame Rate-ல் இயங்குவது செம. எனவே, உங்கள் ஸ்மார்ட்ஃபோனின் பேட்டரி & Internal Storage-ஐ, இது குறைவாகவே எடுத்துக் கொள்ளும். தவிர 4 ஜிபி ரேம் இருந்தாலே, இதை Lag இல்லாமல் விளையாட முடியும். கேம் லிங்க் இதோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Trials Frontier - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 4.3

Trials Frontier
Trials Frontier
Google Play Store

இந்த வகையான கேம்களை வடிவமைப்பது கொஞ்சம் எளிது என்பதால், ப்ளே ஸ்டோரில் இதுபோன்ற பல கேம்கள் இருக்கின்றன. ஆனால், எக்ஸ்பீரியன்ஸ் அடிப்படையில் பார்த்தால், Trials Frontier சிறப்பானதாக இருக்கிறது. மேட் மேக்ஸ் படங்களில் என்ன மாதிரியான நிலப்பரப்பு இருந்ததோ, அதுமாதிரிதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை இருக்கும். அதில் இடையிடையே இருக்கும் தடுப்புகளைத் தாண்டுவதுடன், காற்றில் சாகசம் செய்துவிட்டு உங்கள் மேலே விழுபவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதும்தான் இங்கே டாஸ்க். மிகவும் சிம்பிளான கேம் என்பதால், 3ஜிபி ரேம்/32 ஜிபி Internal Storage கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களில்கூட இதை விளையாடலாம். Hill Climb Racing-ன் ஆஃப் ரோடு வெர்ஷன் என Trials Frontier-யைச் சொல்லலாம். கேம் லிங்க் இதோ

Real Moto - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 3.9

Real Moto
Real Moto
Google Play Store

EA Cricket கேம் நினைவிருக்கிறதா? இதில் காப்புரிமை பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, நிஜ கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைக் கொஞ்சம் மாற்றிப் போட்டிருப்பார்கள். S Tendehar, V Seway, D Dhenier, S Gungly ஆகியவை அதற்கான உதாரணம். இதே பாணியில் நிஜ பைக்குகள் - ரேஸிங் சூட் - ஹெல்மெட் - ரேஸ் டிராக்குகள் ஆகியவற்றை டூப்ளிகேட் பெயர்களே இங்கு குறிக்கின்றன. அதன்படி யமஹா, கவாஸாகி, ஹோண்டா, டுகாட்டி, ஏப்ரிலியா ஆகியவை முறையே Yokoma, Grusaki, Redhon, Feyado, Verilia என மாறியிருக்கின்றன. மேலும் ஒருவர் செலக்ட் செய்யக்கூடிய Airerestars (Alpinestars) - Konane (Komine) லெதர் சூட், BERRAI (Arai) - CJH (HJC) ஹெல்மெட், Raguna Raceway Park - Re Mans City - Favourites Mountain ரேஸ் டிராக் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால், கேமிங்கில் இதுபோன்ற டகால்ட்டி வேலைகள் ஏதும் இல்லாமல், நச்சென இருப்பது நைஸ். Real Moto விளையாடும்போது, வைஃபை/டேட்டா கனெக்ட்டிவிட்டி தேவை கிடையாது என்பது பெரிய வரப்பிரசாதம். கேம் லிங்க் இதோ

Dark Rally - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 3.4

Dark Rally
Dark Rally
Google Play Store

வீட்டில் இருக்கின்ற இடத்திலிருந்தே, சர்வதேச புகழ்பெற்ற டக்கார் ராலியில் பங்கேற்கும் அனுபவத்தைப் பெற முடியும் என்பது இதன் சாரம்சம். டக்கார் ராலி - 2017 எடிஷனின் அதிகாரப்பூர்வமான கேம்தான் Dark Rally என்பதால், கேடிஎம் - ஹோண்டா - யமஹா ஆகியோரின் Factory ADV பைக்குகளை இதில் ஓட்ட முடியும். ஆனால், இந்திய நிறுவனங்களான ஹீரோ & டிவிஎஸ் - Sherco ஆகியோரின் தயாரிப்புகள் இங்கே இல்லாதது மைனஸ். இங்கே ஒவ்வொரு ரேஸிலும் மூன்று பேருடன் போட்டி போட வேண்டும் என்பதுடன், 2017 டக்கார் ரேலியின் வழித்தடத்தில் இருந்த நகரங்களின் பெயரே டிராக்குக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைக் தவிர A4R ATV, Peugeot 4X4 Buggy, Toyota Hilux பிக் அப் டிரக், Kamaz ராலி டிரக் போன்ற வாகனங்களையும் ஓட்டலாம். கேம் லிங்க் இதோ

Mario Kart Tour - ப்ளே ஸ்டோர் ரேட்டிங்: 4.0

Mario Kart Your
Mario Kart Your
Google Play Store

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே Editors' Choice இதுதான்! மேலும் இளைஞர்கள் தவிர குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைத்து வயதினருக்குமான கேமாக Mario Kart Tour இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். தவிர, வரலாற்றுச் சிறப்புமிக்க Super Mario Character-களான Mario, Luigi, Wario எனும் பெயர்களில் ரேஸ் ஓட்ட முடிவது சிறப்பு. ரேஸ் டிராக் கலர்ஃபுல்லாக இருப்பதுடன், கேமை விளையாடும் முறையும் எளிதாகவே உள்ளது. ஆனால், இந்த Multiplayer கேமைச் சீராக விளையாட, இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி வேண்டும். கேம் லிங்க் இதோ.