Published:Updated:

உயர்கிறது இன்ஷூரன்ஸ் பிரீமியம்... எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகை உண்டு!

Representational Image
Representational Image

இந்திய காப்பீடு ஒழுங்காற்று ஆணையம் (IRDAI) வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீடு பிரீமியத்தை அதிகரிக்கும்படி கூறியுள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மூன்றாம் நபர் வாகன காப்பீட்டுக்கான பிரீமியத்தில் 15 சதவிகித விலை சலுகையும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு 7.5 சதவிகித சலுகையும் தர வேண்டும் என இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது IRDAI.

மின்சார வாகனம்
மின்சார வாகனம்

ஒருபக்கம் மின்சார வாகனங்களுக்கு பிரீமியம் விலை குறையும்போது, சாதாரண ஐசி இன்ஜின் வாகனங்களின் பிரீமியம் விலை அதிகரிக்கப்போகிறது. 1000cc-க்கு குறைவான இன்ஜின் கொண்ட கார்களுக்கு 110 ரூபாய்; 1000 முதல் 1500cc இன்ஜின் வாகனங்களுக்கு 162 ரூபாய் என இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்தும்படி கூறியுள்ளார்கள். பெரிய இன்ஜின் கொண்ட லக்ஸூரி கார்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் மாற்றம் இல்லை.

சந்தைக்குப் புதுசு! : கைகொடுக்கும் மொபைல் இன்ஷூரன்ஸ்!
விபத்துக் காப்பீடு
விபத்துக் காப்பீடு
vikatan

இதேபோல, இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை 75cc-க்கு குறைவாக இருக்கும் வாகனங்களுக்கு 24 ரூபாய்; 75 முதல் 150cc வாகனங்களுக்கு 17 ரூபாய்; 150 முதல் 350cc வாகனங்களுக்கு இந்த பிரீமியம் 108 ரூபாய் மற்றும் அதற்கு மேலே உள்ள இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு 248 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை ஏற்றங்கள் எப்போது அமலுக்குவரும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த கட்டுரைக்கு