Published:Updated:

ஜீப் காம்பஸின் 7 சீட்டர் வெர்ஷன்... மெரிடியன்

மெரிடியன்
பிரீமியம் ஸ்டோரி
மெரிடியன்

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது, மெரிடியனின் வென்டிலேட்டட் சீட்டில் அமர்ந்து, இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கைப் பிடித்து… இதன் பவர்ஃபுல் டீசல் இன்ஜினில் சண்டிகர் முழுக்க ஒரு ரவுண்டு வந்து கொண்டிருப்பேன்.

ஜீப் காம்பஸின் 7 சீட்டர் வெர்ஷன்... மெரிடியன்

நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது, மெரிடியனின் வென்டிலேட்டட் சீட்டில் அமர்ந்து, இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கைப் பிடித்து… இதன் பவர்ஃபுல் டீசல் இன்ஜினில் சண்டிகர் முழுக்க ஒரு ரவுண்டு வந்து கொண்டிருப்பேன்.

Published:Updated:
மெரிடியன்
பிரீமியம் ஸ்டோரி
மெரிடியன்

ஜீப்புக்கு உண்மையான அர்த்தம் ஆஃப்ரோடிங். நீங்கள் எந்த ஜீப்பை நினைத்தாலும் சரி – ஆஃப்ரோடர்கள் என்றால் அது ஜீப். இது அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனம். காம்பஸ் பார்ப்பதற்கு சாதுவாகத் தெரியலாம்; ஆனால், ஜீப் ஒரு கட்டுமஸ்தான கிண்ணென்ற ஆஃப்ரோடர். காம்பஸில் 5 சீட்டர்தான் இருந்தது. இப்போது காம்பஸையே கொஞ்சம் பெரிதாக்கி, மெரிடியன் என்ற பெயரில் ஒரு 7 சீட்டர் எஸ்யூவியை – அதாவது ஆஃப்ரோடரைக் கொண்டு வந்திருக்கிறது ஜீப். 6 சீட்டர் மாடல் அண்டர் கன்ஸ்ட்ரக்ஷனில் இருக்கிறது என்று தகவல்.

ப்ளாட்ஃபார்ம் மற்றும் டிசைன்

காம்பஸின் அதே ப்ளாட்ஃபார்மில்தான் இதைத் தயார் செய்திருக்கிறது ஜீப். குளோபலாக கமாண்டர் என்றொரு

18 இன்ச் அலாய் வீல்கள்...
18 இன்ச் அலாய் வீல்கள்...

ஜீப் வாகனம் உங்களுக்குப் பிடித்திருந்தால்… இந்த மெரிடியனும் உங்களுக்குப் பிடிக்கும். அப்படியே பல கோணங்களில் கமாண்டர் மாதிரிதான் இருக்கிறது. அதனால், கட்டுமஸ்துக்குக் குறைவே இல்லை. முன் பக்கமிருந்து லாங் ஷாட்டில் பார்த்தால்… ஜீப் காம்பஸ்தான் என்றுதான் நினைக்கத் தோன்றும். அப்படியே பக்கவாட்டில் இதன் ஃப்ரொஃபைலைப் பார்க்கும்போது… அட, பெரிய ஜீப் காம்பஸ் என்று வியக்கத் தோன்றும். காம்பஸின் அந்த 7 செவ்வக வடிவ Rounded Corner கிரில், மெரிடியனில் Bevel வடிவ கிரில் ஆகி இருக்கிறது. இது போட்டோஷாப் டிசைனர்களுக்குத் தெரியும். மற்றபடி இதன் ஷார்ப்பான லைன்கள், ஜீப் செரோக்கியை நினைவுபடுத்துகின்றன. காம்பஸை விட நீள/ அகலங்கள் போன்ற டைமென்ஷன்களில் நன்றாகவே பெரிதாக இருக்கிறது மெரிடியன். கதவுகளும் பெருசு! பெரிய காருக்கு ஏற்ப அந்த குவார்ட்டர் கிளாஸும் பெரிதாகி இருக்கிறது.

காம்பஸை ஒப்பிடும்போது, இதன் ஹெட்லைட்ஸ் கொஞ்சம் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஆக இருக்கின்றன. முன் பக்க பம்பரும் கொஞ்சம் யூனிக்காகவே இருக்கிறது. பின் பக்க டெயில் லைட்ஸும் ஸ்லிம்தான். ஒரு க்ரோம் லைன் இதை காரோடு இணைக்கும் விதம் அழகு! ஆனால், இரண்டுக்குமே 18 இன்ச் வீல் கொடுத்திருப்பதுதான் என்ன கணக்கு என்று புரியவில்லை.

 ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைனில் ஹெட்லைட்ஸ் செம ஸ்டைலிஷ்
ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைனில் ஹெட்லைட்ஸ் செம ஸ்டைலிஷ்

‘‘அந்த விண்ட்ஷீல்டைத் தவிர்த்து, முன் பக்க சீட் ஃப்ரேம், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்… எல்லாமே யூனிக்காக இருக்கும் இந்த மெரிடியனில்!’’ என்கிறார் ரால்ஃப் கில்ஸ். ஜீப்பின் பேரன்ட் நிறுவனமான Stellantis–ன் தலைமை வடிவமைப்பு நிபுணர் இவர். இந்த ஜீப் காம்பஸ் மெரிடியனை டிசைன் செய்தவர் ரால்ஃப் கில்ஸ்.

நீளத்தில் இது காம்பஸைவிட (4,769 மிமீ) இது 364 மிமீ நீளம். அகலத்தில் 41 மிமீ அதிகம். உயரத்தில் 42 மிமீ பெருசு. இதன் பூட் ஸ்பேஸ் 233 – 1,760 லிட்டர். காம்பஸின் பூட் ஸ்பேஸ் 438 லிட்டர். இதன் வீல்பேஸ், காம்பஸைவிட 158 மிமீ அதிகம். போட்டியாளர்களை ஒப்பிடும்போது, மெரிடியனில் குறைவான பூட் ஸ்பேஸ்தான் இருக்கிறது.

உள்ளே…

இன்டீரியரிலும் அப்படியே கமாண்டர் எஸ்யூவி மாதிரிதான் இருக்கிறது ஜீப் மெரிடியன். அதாவது, காம்பஸைத்தான் நினைவுப்படுத்துகிறது. காம்பஸில் ஆல் பிளாக் இன்டீரியரைப் பார்த்திருக்கிறேன். ஸ்போர்ட்டியாக இருக்கும். மெரிடியின் பிளாக் மற்றும் பிரெளன் நிறத்தில் டூயல் டோன் டேஷ்போர்டு, ஸ்போர்ட்டினெஸ்ஸோடு கொஞ்சம் ப்ரீமியம் ஆகவும் இருக்கிறது. Quilted Pattern என்று சொல்லக்கூடிய டிசைன் வேலைப்பாட்டுடன் அந்த பிரெளன் நிற லெதர் சீட்கள்தான் இந்த ப்ரீமியம் ரகத்துக்குக் காரணம்.

வசதிகள்

காம்பஸ் மாதிரியே இதில் ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ கொண்ட 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் செம க்ளாஸியாக இருக்கிறது. அந்த ஸ்போர்ட்டியான 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேட்டட் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய டிரைவர் மற்றும் பயணிகள் சீட், பனோரமிக் சன்ரூஃப் என்று கலக்குகிறது. இதில் 7 காற்றுப்பைகள், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட்/டிசென்ட் கன்ட்ரோல், செலெக்டபிள் டிரைவ் மோடுகள் என்று ஏகப்பட்ட வசதிகள்! மெரிடியனில் பவர்டு டெயில் கேட்டும், Alpine 9 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டமும் காம்பஸில் இல்லாத புதுமை!

 10.25 இன்ச் டச் ஸ்க்ரீனில் எல்லாமே தெரியும்
10.25 இன்ச் டச் ஸ்க்ரீனில் எல்லாமே தெரியும்

6 சீட்டரா… 7 சீட்டரா?

இப்போதைக்கு மெரிடியனில் 7 சீட்டர் வேரியன்ட்டைத்தான் கொண்டு வந்திருக்கிறது ஜீப். இதன் பெஞ்ச் ஸ்டைல் சீட்டிங் பொசிஷன், தனவான்களுக்கு செம சொகுசு தரும்.

இதன் வீல்பேஸ் அகலமாகி இருப்பதால்… இதன் சீட் வசதியும் தாராளமாக இருக்கிறது. உயரமானவர்களுக்கு ஹெட்ரூமும் சரி; கால்களை நீட்டி மடக்கிக் கொள்ள லெக்ரூமும் சரி – எல்லாமே பக்கா!

‘‘6 சீட் வேரியன்ட்டின் சஸ்பென்ஸை உடைக்க விரும்பவில்லை. ஆனால் சர்ப்ரைஸுக்குக் காத்திருங்கள்!’’ என்கிறார், டிசைன் மற்றும் R&D டிசைன் இன்ஜீனியரிங் டீம் தலைவர், பார்த்தாதத்தா.

ஜீப் காம்பஸின் 7 சீட்டர் வெர்ஷன்... மெரிடியன்

இன்ஜின்

எல்லா நிறுவனங்களும் பெட்ரோலில் மட்டும்தான் கார்களைக் கொண்டு வந்து நிறுத்த… ஜீப் டீசலில் மட்டும்தான் இப்போதைக்கு மெரிடியனைக் கொண்டு வந்து காட்டியிருக்கிறது. ஜீப்பின் ஃபேவரைட்டான 2.0லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான் மெரிடியனின் பானெட்டுக்குள் இருக்கிறது. இது மல்ட்டிஜெட் டர்போ டீசல் இன்ஜின் என்பதால் பவர் மற்றும் டார்க்கில் சந்தேகப்பட வேண்டாம். ஹேரியர், சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான். ஆனால், பெரிய எஸ்யூவிக்காக இதன் பவர் மற்றும் டார்க்கில் ட்யூன் செய்திருக்கிறது ஜீப். 170bhp மற்றும் 350 Nm டார்க் கொண்டிருக்கிறது மெரிடியன்.

மேனுவல்/ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர் ஆப்ஷன்களுமே உண்டு. 6 ஸ்பீடு மேனுவலுக்கு என்றால்… ஆட்டோமேட்டிக்கைக் கவனியுங்கள். 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்… வாவ்! ஆஃப்ரோடராச்சே.. அதனால் ஃப்ரன்ட் வீல் மட்டுமல்லாமல், ஆல் வீல் டிரைவ் என இரண்டு லே–அவுட்களிலும் கிடைக்கப் போகிறது மெரிடியன். காம்பஸில் 4வீல் டிரைவுக்கு மட்டும்தான் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும்; ஆனால் மெரிடியனில் FWD மற்றும் AWD என இரண்டு லேஅவுட்களிலும் ஆட்டோமேட்டிக் வருகிறது.

ஆஃப்ரோடராச்சே... மோடுகளைக் கவனியுங்கள்.
ஆஃப்ரோடராச்சே... மோடுகளைக் கவனியுங்கள்.

‘காம்பஸில் பெட்ரோல் இன்ஜின் இருக்கே..’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பெட்ரோல் மெரிடியனும் வரலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. 187 bhp மற்றும் 27NM டார்க்கோடு பெட்ரோல் இன்ஜின் மெரிடியன் வரலாம் என்கிறார்கள். அநேகமாக கமாண்டர் காரில் இருக்கும் T270 எனும் 1.3லிட்டர் டர்போ பெட்ரோல், மெரிடியனில் வந்தாலும் ஆச்சரியமில்லை. 48V மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனோடும் மெரிடியன் கிடைக்கலாம்.

மெரிடியனின் நேரடிப் போட்டியாளர் என்று பார்த்தால்… ஸ்கோடாவின் கோடியாக்கைச் சொல்லலாம். இருந்தாலும், இது டீசலில் மட்டும்தான் வருகிறது என்பதால், லேடர் ஃப்ரேம் எஸ்யூவிகளான டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி கிளாஸ்டர் போன்ற படா எஸ்யூவிகளுக்கும் மெரிடியன் போட்டியாக வரப் போகிறது. அநேகமாக 34 – 36 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் இதை பொசிஷன் செய்யலாம் ஜீப்.

ஜீப் காம்பஸின் 7 சீட்டர் வெர்ஷன்... மெரிடியன்

இதன் டாப் ஸ்பீடு 198 கிமீ; 0–100 கிமீ வேகம் – 10.8 விநாடிகள் என்று க்ளெய்ம் செய்கிறது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது, மெரிடியனின் வென்டிலேட்டட் சீட்டில் அமர்ந்து, இதன் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்கைப் பிடித்து… இதன் பவர்ஃபுல் டீசல் இன்ஜினில் சண்டிகர் முழுக்க ஒரு ரவுண்டு வந்து கொண்டிருப்பேன். அடுத்த இதழில் இந்த ஓட்டுதல் விஷயங்களெல்லாம் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism