Election bannerElection banner
Published:Updated:

Jobs in Motorsports: ரேஸ் ட்ராக்கிலும் உண்டு வேலை வாய்ப்பு! எப்படிப் பயிற்சி பெறுவது?

Motorsports
Motorsports

Motor Vikatan & CRA Motorsports Present 3 days Field Workshop Motorsports

பைக் ரேஸ் ஓட்டும் போதும் கிடைக்கும் மகிழ்ச்சி... அந்த ரேஸ் நடக்கும்போது மைதானத்தில் வேறு வேலைகள் செய்கிறவர்களுக்கும் கிடைக்கும். பைக் ரேஸ் என்று எடுத்துக் கொண்டால், அதில் கலந்து கொள்ளும் ரைடர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், அந்த ரேஸின் `behind the Scene’–ல் எக்கச்சக்கம் பேர் பரபரப்பாக இருப்பார்கள். ‘‘சுமாராக 15 பேர் கலந்து கொள்ளும் ரேஸில் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.’’ என்கிறார் தருண். கோவையில் CRA எனும் பெயரில் ரேஸிங் அகாடமி நடத்தி வரும் ட்ரெய்னர் தருண், ஏகப்பட்ட ரேஸர்களுக்கு வழிகாட்டி. CRA–வில் பயிற்சி எடுத்த சிலர், இன்று பெயர் சொல்லும் அளவுக்கு ரேஸர்களாக ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என பைக் ஆக்ஸிலரேட்டர் முறுக்கிக் கொண்டிருக்கிறார். தருணுடன் இணைந்து மோட்டார் விகடன் நடத்தும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் பற்றிய ஒரு சின்ன டீஸர்தான் இது.

Motorsports
Motorsports

‘‘ரேஸர் ஆவது எப்படி’’ என்பது பற்றியல்ல இந்த வொர்க்ஷாப். ரேஸுக்குப் பின்னால்/முன்னால் நடக்கும் ரேஸிங் போட்டோகிராபி, மார்ஷல் ட்ரெய்னிங், டீம் மேனேஜ்மென்ட் – என்கிற 3 தலைப்புகளில் பயிற்சி நடக்க இருக்கிறது. இதை ஒரு வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் என்று கூடச் சொல்லலாம்.

உங்களுக்கு போட்டோகிராபியில் ஆர்வம் உண்டா? அதற்கும் ரேஸ் ட்ராக்கில் வழி இருக்கிறது. ‘டிப்ளமோ’ முடிச்சேன்; மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சேன்; ரேஸ் நடத்தும் குழுவில் நான் இருக்க வேண்டும் என்று சொன்னால். அதற்கும் பயிற்சி உண்டு. ரேஸிங் துறையில் பகுதி நேர வேலை கிடைத்தால் சூப்பராக இருக்கும் என்று சொல்பவர்களுக்கும் இங்கே மார்ஷல் ட்ரெய்னிங் பயிற்சி உண்டு. இவை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

Motor Vikatan & CRA Motor Sports Present 3days Field Workshop (Racing Photography / Racing - Marshal Training / Racing - Team Management)
Racing Photography
Racing Photography
Racing Photography

Racing Photography: கையில் கேமரா இருந்தால் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கலாம். ‘‘கொஞ்சம் சிரிங்க; தலையை லேசா சாயுங்க’’ என்று அனுமதி கேட்டு எடுக்கும் போட்டோகிராபி வேறு. ரேஸ் ட்ராக்கில் எடுக்கும் போட்டோகிராபி என்பது வேறு. 200 கிமீ வேகத்தில் பறக்கும் வாகனங்களை, எந்த இடத்தில் வைத்து, எப்படி ஜூம் வைத்து, எந்த மாதிரி ஃபிரேம் வைத்து, கேமராவின் ஷட்டர் ஸ்பீடை எவ்வளவு செட் செய்து… எப்படி எடுத்தால்… வெறித்தனமான ஆக்ஷன் ஸ்டில்கள் கிடைக்கும் என்பதைச் சொல்லும் பயிற்சி இது. இதை ஒரு வேலை வாய்ப்பாகவும் செய்யலாம்; பொழுதுபோக்காகவும் செய்யலாம் என்பதுதான் ஸ்பெஷல்.

Marshal Training
Marshal Training
Marshal Training

Marshal Training: ஒரு ரயில் இருக்கிறது. டிரைவர் ஒருவரே கவனமாக இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் உள்ள மார்ஷல்களும் சரியாக சிவப்புக் கொடி காட்டி ரயிலை நிறுத்தி, பச்சைக் கொடி காட்டிப் புறப்பட வைத்தால்தான், நாம் பாதுகாப்பாக ஊர் போய்ச் சேர முடியும். ரேஸிங்கிலும் அப்படித்தான். ரைடர்கள் மட்டுமே சரியாக வாகனம் ஓட்டினால் பாதுகாப்பாக இருக்க முடியாது. ரேஸ் ட்ராக்கில் உள்ள அத்தனை மார்ஷல்களும் விழிப்பாக இருந்தால்தான் ரேஸர்கள் பாதுகாப்பாக பிட் ஸ்டாப்பை அடைய முடியும். ஒவ்வொரு போஸ்ட்டிலும் நிற்கக் கூடிய Post Marshals; சரியாகக் கொடியசைத்து ரேஸைத் துவக்கும் Flag Marshals; ட்ராக்கில் விபத்து நடந்த இடத்தை க்ளியர் செய்யும் Intervention Marshals – இப்படி ஏகப்பட்ட மார்ஷல்கள் உண்டு. ரேஸில் விபத்து நடந்தால், உடனே ரேஸை நிறுத்தி விட மாட்டார்கள். அந்த லேப்புக்கு அடுத்த ரைடர் வருவதற்குள் சட்டென அந்த இடத்தை விபத்தே நடக்காததுபோல் மாற்ற… அந்த Intervention Marshals ரொம்ப முக்கியம் பாஸ்.

(ஒரு வாவ் நியூஸ்: உலகின் மிகப் பெரிய ரேஸான ஃபார்முலா–1 ரேஸில், ஒரு ரேஸ் காரின் 4 டயர்களையும் மாற்ற அந்த மார்ஷல்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? ஒரு சில விநாடிகள் மட்டுமே!)

Team Management
Team Management
Team Management

Team Management: ஒரு ரேஸரின் வெற்றிக்கு அவர் திறமை மட்டுமல்ல; அவர் ஓட்டும் வாகனமும் ரொம்ப முக்கியம். அப்படிப்பட்ட வாகனங்களுக்கு இன்ஜீனியர்கள் ரொம்ப அவசியம். இப்போதெல்லாம் வெறும் மெக்கானிக்கல் பாகங்களைத் தாண்டி எலெக்ட்ரிக்கல்/எலெக்ட்ரானிக் பாகங்களும் இருப்பதால்தான் ட்ராக்கில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்க முடிகிறது. அப்படியென்றால், எல்லா இன்ஜீனியர்களுக்கும் இந்த டீம் மேனேஜ்மென்ட் வாய்ப்பளிக்கக் காத்திருக்கிறது.

‘ஏப்ரல் 2, 3, 4 தேதிகளில் – ரேஸ் ட்ராக்கிலேயே நடக்கும் இந்த வொர்க்ஷாப், ஆர்வம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டும்!
Motorsports Workshop
Motorsports Workshop

Motor Vikatan & CRA Motorsports Present 3 days Field Workshop (Racing Photography / Racing - Marshal Training /Racing - Team Management)

Date: 2, 3 and 4th April 2021

Time: 8 am to 5 pm

Venue: Kari Motor Speedway Racetrack, Coimbatore.

To Register: https://bit.ly/2Q84CaZ

Contact: 7338826999 / 9790990404

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு