Published:Updated:

வெல்கம் 2020... கவாஸாகி நின்ஜா 1000SX BS-6... என்ன ஸ்பெஷல்?

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாக, Z650 பைக்கின் BS-6 வெர்ஷனும் களமிறங்கிவிட்டது. 5.94 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், முன்பைவிட வெறும் 25,000 ரூபாய் மட்டுமே விலை உயர்வைப் பெற்றிருக்கிறது!

கொரோனாவால் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் சில விதிகள் தளர்த்தப்பட்டிருக்கும் சூழலில், BS-6 விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது கவாஸாகி. 10.79 லட்சத்துக்கு வந்திருக்கும் நின்ஜா 1000SX பைக், நான்காம் தலைமுறை நின்ஜா 1000 ஆக பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாக, Z650 பைக்கின் BS-6 வெர்ஷனும் களமிறங்கிவிட்டது. 5.94 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், முன்பைவிட வெறும் 25,000 ரூபாய் மட்டுமே விலை உயர்வைப் பெற்றிருக்கிறது! அதேநேரத்தில், முன்பைவிட 50,000 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் நின்ஜா 1000SX பைக்கில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் வசதிகள்

Ninja 1000SX
Ninja 1000SX
Kawasaki India

புதிதாக இடம்பெற்றிருக்கும் விண்ட் ஸ்க்ரீனை, 4 விதமாக அட்ஜஸ்ட் செய்ய முடிவது ப்ளஸ். மேலும், ரைடர் & பில்லியன் சீட்டுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் குஷனிங்கும் மேம்பட்டிருக்கிறது. பில்லியன் சீட்டின் மேல்பகுதி கொஞ்சம் மேல்நோக்கி இருப்பதால், திடீரென பிரேக் அடித்தாலும் பில்லியன் வழுக்கிக்கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியும் என்கிறது கவாஸாகி. ரைடரின் சீட் நீண்ட நேரப் பயணங்களுக்குத் தகுந்தபடி மாறியிருக்கிறது. பாடி பேனல்களைப் பொறுத்தவரை, Belly Pan & Side Panels ஆகியவை புதிது. மற்றபடி நின்ஜா 1000 பைக்கில் டூயல் போர்ட் இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள் இருந்த நிலையில், நின்ஜா 1000SX பைக்கில் நீளமான ஒற்றை எக்ஸாஸ்ட் பைப் மட்டுமே இருக்கிறது (வலதுபுறத்தில் உண்டு).

இதனால் பைக்கின் எடை 2 கிலோ குறைந்திருக்கிறது (238 கிலோ). இதில் கறுப்பு மற்றும் பச்சை என இரு கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் வசதிகளுடன்கூடிய 4.3 இன்ச் TFT டிஸ்பிளேவில், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி இருப்பது செம. LED லைட்டிங், பிரிட்ஜ்ஸ்டோனின் லேட்டஸ்ட் 17 இன்ச் BATTLAX HYPERSPORT S22 ஸ்போர்ட்ஸ் டயர்கள், எலெக்ட்ரானிக் க்ரூஸ் கன்ட்ரோல், Quick Shifter ஆகியவை நின்ஜா 1000SX பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. 50,000 ரூபாய் விலை உயர்வை, இந்தப் புதிய வசதிகளே நியாயப்படுத்திவிடுகின்றன.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

Ninja 1000SX BS-6
Ninja 1000SX BS-6
Kawasaki India

இதில் இருப்பது, அதே 1,043 சிசி இன்லைன் - 4 சிலிண்டர் இன்ஜின் என்றாலும், அதில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. தற்போது புதிதாக எலெக்ட்ரானிக் த்ராட்டில் வால்வ்கள் (ø38 mm X 4) இருக்கின்றன. இவை 4 ரைடிங் மோடுகள் (Sport, Road, Rain, Rider) உடன் சேரும்போது, த்ராட்டில் ரெஸ்பான்ஸ் முன்பைவிட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், புதிய எக்ஸாஸ்ட் அமைப்புக்கு ஏற்றபடி, இன்டேக் & எக்ஸாஸ்ட் செட்-அப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. Tappet ஏற்படுத்தும் சத்தத்தைக் கட்டுப்படுத்தும்படி, Cam Profile மேம்படுத்தப்பட்டிருக்கிறது. க்ராங்க்‌ஷாஃப்ட்டில் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பேலன்சர் ஷாஃப்ட், இன்ஜின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் என நம்பலாம். இத்தனை மாற்றங்கள் இருந்தாலும், இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் 142bhp பவர் & 11.3kgm டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை. ரைடரின் பாதுகாப்புக்கு KTRC (டிராக்‌ஷன் கன்ட்ரோல்), KCMF (கார்னரிங் சிஸ்டம்), KIBS (ஏபிஎஸ்) இருக்கின்றன. ஆரம்ப கட்ட & மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸை மனதில் வைத்து ட்யூன் செய்யப்பட்டிருக்கும் இந்த இன்ஜினுடைய எக்ஸாஸ்ட் பைப்களின் எண்ணிக்கை பாதியாகிவிட்டாலும், முன்புபோலவே எக்ஸாஸ்ட் சத்தம் ஸ்போர்ட்டியாகவே இருக்கக்கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு