Election bannerElection banner
Published:Updated:

`1 லட்ச ரூபாய் விலை குறைந்த W800..!' - கவாஸாகியின் அதிரடி முடிவு

W800 BS-6
W800 BS-6 ( Kawsaki India )

6.99 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் விலை) வந்திருக்கும் W800, போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்னைவிட 46 ஆயிரம் ரூபாய் மற்றும் போனவில்லி T100 பைக்கைவிட 1.88 லட்சம் குறைவான விலையில் கிடைப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்!

W800... ட்ரையம்ப் போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்/T100 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 7.99 லட்சத்துக்குக் (எக்ஸ்-ஷோரூம் விலை) களமிறங்கியது. ரெட்ரோ டிசைனில் அசத்திய இந்த பைக், அதிக விலை காரணமாக மக்களிடையே போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் தற்போது W800-ன் BS-6 வெர்ஷனை, முன்பைவிட ஒரு லட்ச ரூபாய் குறைவான விலையில் அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது கவாஸாகி.

6.99 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் விலை) வந்திருக்கும் இது, போனவில்லி ஸ்ட்ரீட் ட்வின்னைவிட 46,000 ரூபாய் மற்றும் போனவில்லி T100 பைக்கைவிட 1.88 லட்சம் குறைவான விலையில் கிடைப்பது உண்மையிலேயே ஆச்சர்யம்தான்!

ஜூலையில் இந்த ட்ரையம்ப் பைக்குகளின் விலை கணிசமாக அதிகரிக்கும் என்பதை வைத்துப் பார்த்தால், W800 ஒரு Value For Money பைக் என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் கிடைக்கும் இந்த கவாஸாகியின் கஃபே எடிஷன், நம் நாட்டுக்கும் வந்தால் செமயாக இருக்கும். தாய்லாந்தில் கட்டமைக்கப்படும் W800, இந்தியாவுக்கு CKD முறையில் பாகங்களாக வருகின்றன.

தோற்றம் மற்றும் சிறப்பம்சங்கள்

W800 BS-6
W800 BS-6
Kawasaki India

BS-4 மாடலுக்கும் BS-6 வெர்ஷனுக்கும், டிசைன் மற்றும் வசதிகளில் எந்த வித்தியாசமும் இல்லை. காம்பேக்ட்டான ஃபெண்டர்கள், ஸ்போக் வீல்கள், Fork Gaiters, வட்டமான ஹெட்லைட் - மிரர்கள் - டெயில் லைட், இரட்டை Pea Shooter எக்ஸாஸ்ட் & அனலாக் மீட்டர்கள் எனும் சிம்பிளான மெக்கானிக்கல் பாகங்கள், இது ஒரு ரெட்ரோ தயாரிப்பு என்பதை உணர்த்திவிடுகிறது. ஆனால், W800-யை உற்றுநோக்கும்போது, சில மாடர்ன் அம்சங்கள் ஆங்காங்கே தெரிகின்றன.

க்ரோம் வேலைப்பாடுகள் அற்ற BodyWork, சிறிய LCD டிஸ்பிளே உடனான ஸ்பீடோமீட்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், LED ஹெட்லைட், ஸ்லிப்பர் க்ளட்ச், ஒரு சிலிண்டருக்கும் 4 வால்வுகள் ஆகியவை அதற்கான உதாரணம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 41மி.மீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் ஷாக் அப்சார்பர், ஏர் கூலிங், மெலிதான 18 இன்ச் டயர்கள், தட்டையான சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் & சீட், டபுள் க்ரெடில் சேஸி, 2 பிஸ்டன் கேலிப்பர் என ஒரு கம்யூட்டர் பைக்கில் இருக்கும் அம்சங்களே W800-ல் இடம்பிடித்துள்ளன.

மேலும் Metallic Flat Spark Black/Metallic Matte Graphite Grey எனும் ஒரே கலர்தான். தவிர நம் நாட்டில் கிடைப்பது ஸ்ட்ரீட் எடிஷன் மட்டுமே. 1966 W1 பைக்கைப் பின்பற்றியே W800 வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இதைப் பார்க்கும்போது இன்டர்செப்டர் 650 நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

W800 Cafe
W800 Cafe
Kawasaki India
500 கி.மீ டாப் ஸ்பீடு... கார்பன் ஃபைபர் சேஸி... உலகின் வேகமான கார்கள் இவைதான்!

W800 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

பைக்கில் கவாஸாகி பிராண்டிங்கே குறைவாக இருப்பதால், அசப்பில் 1960-களின் BSA க்ளாஸிக் பைக்குகளை நினைவுபடுத்தும்படி W800 காட்சியளிக்கிறது. இதிலிருக்கும் 2 சிலிண்டர் இன்ஜின், Vertical Twin என அழைக்கப்படுகிறது. அதாவது 360 டிகிரி Firing Order கொண்ட பேரலல் ட்வின் இன்ஜின் என்பதே இதன் விரிவாக்கம். இதனால் இன்ஜினில் இருக்கக்கூடிய 2 பிஸ்டன்களும், ஒரே நேரத்தில் ஒரே திசையில் இயங்குகின்றன. இதுவே வழக்கமான 180 டிகிரி மற்றும் மாடர்ன் 270 டிகிரி Firing Order என்றால், பிஸ்டன்கள் வெவ்வேறு திசையில் இயங்கும்.

Instrument Cluster
Instrument Cluster
Kawasaki India

மற்றபடி பழைய Bevel-Gear Cam Drive செட்-அப்பில் இருக்கும் ஒரே இன்ஜின், அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்! காலம் சென்ற சில டுகாட்டி பைக்குகளில் காணப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், அதிக இன்ஜின் வெப்பத்துக்குப் பெயர்பெற்றது. W800 பைக்குடைய Long Stroke இன்ஜினின் கேஸிங் மேலே இருக்கும் Propeller Shaft... பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளது.

தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம், ஆரம்பகட்ட - மிட்ரேஞ்ச் பர்ஃபாமன்ஸ், அற்புதமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த கவாஸாகி பைக்கில் இருக்கும் 773சிசி இன்ஜின், SOHC மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பைக்கொண்டிருக்கிறது. 52bhp@6,500rpm பவர் - 6.29kgm@4,800rpm டார்க்கையும் வெளிப்படுத்தும் இதில், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு.

ப்ளஸ் - மைனஸ் பாயின்ட்கள்

போனவில்லி T100 விட 20மிமீ குறைவான சீட் உயரம் (770மிமீ) மற்றும் 15மிமீ பெரிய வீல்பேஸ் (1,465மிமீ) இருப்பதால், எளிதான மற்றும் நிலையான ஓட்டுதல் அனுபவம் கியாரன்ட்டி. MRF டயர்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. ஒற்றை டிஸ்க் பிரேக்கே இருந்தாலும் (முன்: 320மிமீ, பின்: 270மிமீ), அவை அளவில் பெரிதாக இருக்கின்றன. மற்றபடி இன்ஜின் திறனைக் கருத்தில் கொண்டால், W800 பைக்கில் ரைடிங் மோடுகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாதது நெருடலே.

Kawasaki Vs Triumph
Kawasaki Vs Triumph
Autocar India

தவிர, லிக்விட் கூலிங், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அகலமான டயர்கள், கூடுதல் கலர்கள் இருந்திருக்கலாமோ? மேலும் Tank Pad, தையல் வேலைப்பாடு உடனான சீட், அலாய் வீல்கள், வைஸர் ஆகியவை ஆக்ஸசரிஸில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் டேக்கோமீட்டர் இருந்தாலும், ஃப்யூல் கேஜ் இல்லாதது பெரிய மைனஸ். ஏனெனில், Tear Drop வடிவ 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், இன்னும் கூடுதல் அளவில் இருந்திருக்கலாம். அதிக எடை (224 கிலோ) மற்றும் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் (130மிமீ), சிலருக்கு அசௌகரியத்தைத் தரலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு