Published:Updated:

`வந்துவிட்டது 2020 கவாஸாகி நின்ஜா 650..!' - என்னென்ன மாறியிருக்கிறது?

கவாஸாகி நின்ஜா 650
கவாஸாகி நின்ஜா 650 ( Kawasaki India )

நின்ஜா 400 மற்றும் ZX-6R ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைப் போலவே, நின்ஜா 650 பைக்கின் முன்பக்கமும் அமைந்திருக்கிறது. ஸ்ப்ளிட் பில்லியன் சீட், முன்பைவிட அகலமாகவும் கூடுதல் குஷனிங் உடனும் கிடைப்பது ப்ளஸ்.

6.24 லட்ச ரூபாய்க்கு (டெல்லி எக்ஸ்-ஷோரூம்), நின்ஜா 650 பைக்கின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கிவிட்டது கவாஸாகி. BS-4 மாடலைவிட 35,000 ரூபாய் அதிக விலையில், இந்த 2020 மாடல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், 56,000 ரூபாய் விலை உயர்வை நின்ஜா 650 பெறக்கூடும் என அந்த நிறுவனம் கூறியது. ஆனால், இந்த நெருக்கடியான நேரத்தில் விற்பனையைப் பெருக்கும் வகையில், விலை ஏற்றத்தை கவாஸாகி கட்டுப்படுத்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

தோற்றம் & வசதிகளில் மாற்றத்தைக் கண்டிருக்கும் இந்த 650சிசி ஸ்போர்ட் டூரருக்கும், `Sugomi’ டிசைன் கொண்ட Z650-க்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஃபுல் ஃபேரிங் இல்லாத காரணத்தால், 5 கிலோ குறைவான எடையில் இந்த நேக்கட் பைக் உள்ளது (191 கிலோ). Z650, Z900, நின்ஜா 650, நின்ஜா 1000 ஆகிய BS-6 பைக்குகளின் புக்கிங்கைத் தொடங்கிவிட்டது கவாஸாகி.

Ninja 650 BS-6
Ninja 650 BS-6
Kawasaki India

நின்ஜா 400 மற்றும் ZX-6R ஆகியவற்றின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைப் போலவே, நின்ஜா 650 பைக்கின் முன்பக்கமும் அமைந்திருக்கிறது. இரட்டை LED ஹெட்லைட்ஸ், புத்தம் புதிய ஃபுல் ஃபேரிங்கில் இடம்பெற்றுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட விண்ட் ஷீல்டு - பக்கவாட்டு ஃபேரிங், நீளமான & ஷார்ப்பான முன்பக்கம் ஆகியவையே அதற்கான உதாரணம். ஸ்ப்ளிட் பில்லியன் சீட், முன்பைவிட அகலமாகவும் கூடுதல் குஷனிங் உடனும் கிடைப்பது ப்ளஸ்.

முன்பு போலவே, நின்ஜா 650 பைக்கின் எடை 196 கிலோ எனுமளவில் உள்ளது. Lime Green / Ebony, Pearl Flat Stardust White / Metallic Flat Spark Black எனும் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே Z650 என்றால், Metallic Spark Black / Lime Green எனும் ஒரே கலர்தான். இவற்றுக்குப் போட்டியாளர்கள் இல்லாவிட்டாலும், USD ஃபோர்க் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் செமையாக இருந்திருக்கும்.

Z650 BS-6
Z650 BS-6
Kawasaki India

இந்த கவாஸாகி பைக்கில் இருப்பது, அதன் BS-4 மாடலில் இருந்த அதே 649சிசி - பேரலல் ட்வின் இன்ஜின்தான். BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளதால், எக்ஸாஸ்ட் மற்றும் ஏர் பாக்ஸில் சில முன்னேற்றங்கள் தெரிகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜின் அதே 68bhp பவரையே வெளிப்படுத்தினாலும், டார்க் 6.4kgm ஆகக் குறைந்திருக்கிறது (BS-4: 6.57kgm).

வசதிகளைப் பொறுத்தவரை, Dunlop Sportmax Roadsport 2 டயர்கள் - 4.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஆகியவை புதிது. மீட்டரில் ப்ளூடூத், ஜிபிஎஸ், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி ஆகியவை உள்ளன. மற்றபடி ட்ரெல்லிஸ் ஃப்ரேம், டூயல் சேனல் ஏபிஎஸ் உடனான டூயல் டிஸ்க் பிரேக்ஸ், டெலிஸ்கோபிக் - மோனோஷாக் சஸ்பென்ஷன், 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள், 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் என அதே டெக்னிக்கல் அம்சங்கள் தொடர்கின்றன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு