Published:Updated:

கியா காரன்ஸ்க்குப் போட்டி! மாருதியின் ஆல்-நியூ XL6 மாறியது என்ன ?

மாருதி சுஸுகி XL6
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸுகி XL6

இப்போது நிலவுகிற மார்க்கெட் சூழ்நிலையில் போட்டியாளர்கள் நிறைய வசதிகளோடு களமிறங்கி உள்ளனர். அதுபோல மாருதி சுஸூகி நிறுவனமும் அப்டேட் செய்வார்களா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நிறைய அட்வான்ஸ்ட் வசதிகளை இந்த காரில் சேர்த்திருக்கிறார்கள்.

கியா காரன்ஸ்க்குப் போட்டி! மாருதியின் ஆல்-நியூ XL6 மாறியது என்ன ?

இப்போது நிலவுகிற மார்க்கெட் சூழ்நிலையில் போட்டியாளர்கள் நிறைய வசதிகளோடு களமிறங்கி உள்ளனர். அதுபோல மாருதி சுஸூகி நிறுவனமும் அப்டேட் செய்வார்களா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில் நிறைய அட்வான்ஸ்ட் வசதிகளை இந்த காரில் சேர்த்திருக்கிறார்கள்.

Published:Updated:
மாருதி சுஸுகி XL6
பிரீமியம் ஸ்டோரி
மாருதி சுஸுகி XL6

மாருதி சுஸுகி XL6 கார் புதுப்பொலிவோடு லாஞ்ச் ஆகியிருக்கிறது. ‘ஓட்டிப் பாருங்க’ என மாருதி நிறுவனம் நம்மை அழைத்திருந்தது. என்னவெல்லாம் மாற்றம் செய்திருக்கிறார்கள் என அறியும் ஆவலில், நாமும் ஒரு ட்ரைவ் சென்று வந்தோம். அந்த காரில் புதிதாக என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன, காரின் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

இப்போது நிலவுகிற மார்க்கெட் சூழ்நிலையில் போட்டியாளர்கள் நிறைய வசதிகளோடு களமிறங்கி உள்ளனர். அதுபோல மாருதி சுஸூகி நிறுவனமும் அப்டேட் செய்வார்களா என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்த மாருதி, நிறைய அட்வான்ஸ்ட் வசதிகளை இந்த காரில் சேர்த்திருக்கிறார்கள்.

வெளிப்பக்கம் மற்றும் டிசைன்

பழைய XL6 க்கும் புதிய XL6 க்கும் அவுட்லுக்கில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதற்காக மாற்றமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. சில விஷயங்களை மாற்றி இருக்கிறார்கள். முன் பக்க கிரில் புதிய டிசைனில் கொடுத்திருக்கிறார்கள். SUV தரத்தை அதிகப்படுத்துவதற்காக என மாருதி சொல்கிறது. பழைய XL6 காரில் இருந்ததுபோல எல்இடி ஹெட்லைட், டிஆர்எல் எல்லாமும் அப்படியே இருக்கின்றன. இண்டிகேட்டர் மட்டும் எல்இடி கிடையாது. அதையும் கொடுத்திருக் கலாம்.

பழசில் இருந்த அதே எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டிஆர்எல்.
பழசில் இருந்த அதே எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் டிஆர்எல்.



பக்கவாட்டு ப்ரொஃபைலில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், அதிகப்படியான எஸ்யூவி லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக டயர் அளவை ஒரு இன்ச் உயர்த்தி இருக்கிறார்கள். மெஷின் கட் அலாய் வீல் டிசைன் அருமை. இது டூயல் டோனில் பார்க்க ஸ்டைலிஷ் ஆக இருக்கிறது. சில்வர் லைனிங் ப்ரீமியம் லுக்.

முன் பக்க மிரரில், பின் பக்க பம்பரில் என்று காரைச் சுற்றி புதிதாய் கேமராக்கள் தென்பட்டன. அட, 360 டிகிரி கேமரா! ஒரு பக்கா பட்ஜெட் மாருதி காரில் 360 டிகிரி கேமராவையெல்லாம் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. பி பில்லரிலும் சி பில்லரிலும் கறுப்பு நிற கோட்டிங் பொருத்தமாக இருந்தது. மூன்று வகையான டூயல் டோன் கலரில் இந்த கார் கிடைக்கிறது. எல்லா நிறத்திற்கும் இந்த பிளாக் ஃபினிஷிங் பொருத்தமாக இருக்கும் என்பதுதான் இதன் ஹைலைட். ஷோல்டர் லைன் கச்சிதமாக இருக்கிறது. டயர்களின் மேற்புறமிருக்கும் கிளாடிங் மட்டும் பார்க்க சற்று பெரிதாக இருக்கிறது. நமக்குக் கொடுக்கப்பட்ட கார் நீல நிறம் என்பதால், கிளாடிங் தனியாகத் தெரியவில்லை. ஆனால் மற்ற நிறங்களில் அது வித்தியாசமாகத் தெரியலாம். இதன் அளவை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

காரின் பின் பக்கம் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஸ்பாய்லர், ஷார்க்ஃபின் ஆன்ட்டெனா, சில்வர் லைன் என ப்ரீமியம் லுக் உடன் கச்சிதமாக இருக்கிறது. முக்கியமான மாற்றம் என்று பார்த்தால்… டெயில் லைட்டைச் சொல்லலாம். சிவப்பு லைட்டுக்குச் சுற்றியிருக்கிற பகுதியை ஸ்மோக் நிறத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஸ்மார்ட் ஹைபிரிட் என்பதால், பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜ் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் மாருதி நிறுவனத்தினர்.

உள்பக்கம்

வழக்கம்போல உள்பக்கம் கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. மிடில் மட்டும் ஸ்டோன் ஃபினிஷ் கிரே லைன் கொடுத்திருக்கிறார்கள். 7 இன்ச் டச் ஸ்க்ரீன், மாருதி கனெக்ட் ஆப் உடன் இணைத்து கொள்ள முடிகிற ஸ்மார்ட்டான வசதி. ஏசி கன்ட்ரோல் வழக்கம்போல பட்டன்கள்தான். 12வோல்ட் பவர் ஸாக்கெட், யுஎஸ்பி ஸாக்கெட் என சார்ஜ் போடுவதற்கான வசதிகள் இருக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பார்ப்பதற்கு டீசென்ட்டாக இருக்கிறது. ஆர்பிஎம் மீட்டரும் ஓடோ மீட்டரும் அனலாக்கில் அமைக்கப் பட்டுள்ளன. நடுவில் டிஜிட்டல் ஸ்ட்ரைப் கொடுத்திருக்கிறார்கள். தேவையான தகவல்களை இதில் பெற முடியும். ஸ்டீயரிங் Module-ல் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி இருந்தது.

ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்கள் உண்டு.
ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல்கள் உண்டு.

ஹைலைட் என்று பார்த்தால், வெண்டி லேட்டட் சீட்கள்தான். டிரைவருக்கும் கோ டிரைவருக்கும் இருந்தன கூல்டு சீட்கள். அதற்கான பட்டன் மூன்று லெவல்களில் மாற்றிக் கொள்கிற வகையில் இருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கார்களில் எந்த கியர் பொசிஷன் என்பதைத் தெரிந்துகொள்ள இண்டிகேஷன் லைட்டிங் இருக்கும். இதில் அது மிஸ்ஸிங். கியர் இண்டிகேஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் தெரிந்தாலும், இங்கும் கொடுத்திருக்கலாம். வாட்டர் பாட்டில் வைக்க இடங்கள், கப் ஹோல்டர், ஆர்ம் ரெஸ்ட் வசதியாக இருக்கின்றன.

அடடே... மாருதி காரில் 360 டிகிரி பார்க்கிங் கேமரா..
அடடே... மாருதி காரில் 360 டிகிரி பார்க்கிங் கேமரா..

சீட் இடவசதி

எர்டிகா மற்றும் XL6 இரண்டுக்கும் பெரிய வித்தியாசமே இந்த நடுவரிசை சீட்கள் என்று சொல்லலாம். இரண்டு கேப்டன் சீட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இடவசதி சூப்பர். இங்கேயும் பவர் சாக்கெட் இருக்கிறது. ஏசி வென்ட் மேல்பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த காரில் சன் ரூஃப் கிடையாது.

கடைசி வரிசை சீட்தான் 7 சீட்டர்களில் கொஞ்சம் டஃப் கொடுக்கும். பொதுவாகவே மூன்றாவது வரிசை அத்தனை வசதியாக அமர முடியாது. இந்த சீட் கொஞ்ச நகர்த்திக் கொள்ள முடிகிறது. ஹெட் ரெஸ்ட் இருப்பது சூப்பர். இங்கும் ஒரு பவர் சாக்கெட். பூட் ஸ்பேஸ் தாராளம். மூன்றாவது சீட்டை மடக்கினால், ஒருவர் படுத்துக் கொள்கிற அளவுக்கு இடம் இருக்கும்.

ஏசி வென்ட்கள் தவிர, கூல்டு சீட்களும் உண்டு. அட, வென்ட்டிலேட்டட் சீட்ஸ்ங்க!
ஏசி வென்ட்கள் தவிர, கூல்டு சீட்களும் உண்டு. அட, வென்ட்டிலேட்டட் சீட்ஸ்ங்க!

இன்ஜின்

கே சீரிஸ் 1.5லிட்டர் டீசல் இன்ஜின், டூயல் vvt இன்ஜின், ஹைபிரிட் டெக்னலாஜி இதில் சேர்த்திருப்பதால் மைலேஜ் நன்றாகவே இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் உட்புற பேட்டரி ஒன்று இருக்கும். லாங் டிரைவ் போகும்போது பெட்ரோலில் ஓடாமல், பேட்டரி பவரில் ஓடும். இதனால் மைலேஜ் நன்றாகவே இருக்கும். மேனுவல் மோடில் 20.97 கிமீ; ஆட்டோமேட்டிக்கில் 20.27 கிமீ மைலேஜ் தரும் என மாருதி க்ளெய்ம் செய்கிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்தான் இந்த XL6–ல் புத்தம் புதுசு. இதில் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொடுத்திருக் கிறார்கள். ஸ்மூத்தாக இயங்குகிறது. உடனடியாக மாறுவதுபோல் தெரியவில்லை. கொஞ்சம் ஸ்லோவாக இயங்குவதுபோல் இருக்கிறது. அதனால், பெப்பியான ஓட்டுநர்களுக்கு இந்த ஆட்டோமேட்டிக் XL6 செட் ஆகுமா என்று தெரியவில்லை. மற்றபடி சஸ்பென்ஷன், பிரேக்கிங் எல்லாம் ஏற்கனவே இருந்ததுதான்.

பாதுகாப்பு

முன்புறம் பக்கவாட்டில் எனச் சேர்த்து மொத்தம் 4 காற்றுப்பைகள். டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோக்ராம், ABS உடன் EBD, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உண்டு XL6–ல். இதையெல்லாம் தாண்டி Global Encap -ல் இது எவ்வளவு ரேட்டிங் வாங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு மாருதி தரப்பில், ‘கூடிய விரைவில் பாரத் என்கேப் வர இருக்கிறது. அதில் ரேட்டிங் பெறுவதற்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்கிறார்கள்.

கியா காரன்ஸ்க்குப் போட்டி! மாருதியின் ஆல்-நியூ XL6  மாறியது என்ன ?

சுஸூகி கனெக்ட் ஆப்

ஆப்பின் மூலமாகவே டீசல் அளவு எவ்வளவு இருக்கிறது, எங்கெல்லாம் போயிருக்கிறோம், எவ்வளவு தூரம், சராசரி வேகம் எவ்வளவு, அதிகபட்ச வேகம், மைலேஜ் எல்லாமே பார்த்துக் கொள்ள முடியும். ஏசி ஸ்டார்ட் செய்வது, ஸ்டாப் செய்வது, எரிபொருள் குறையும்போது நோட்டிஃபிகேஷன் வருவது என பலவற்றைச் சோதித்து கொள்ள முடியும். காருக்கு உள்ளே என்றில்லை; வெளியே இருந்தும் காரின் வசதிகளை இயக்க முடியும். இந்த ஆப்பிலேயே மேப் வசதியும் இருக்கிறது. MapmyIndia உடன் கைகோர்த்து இந்த வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். 40–க்கு மேற்பட்ட வசதிகள் இந்த ஆப்பின் மூலமாக பெற முடியும் என்கிறது மாருதி.

இந்த XL6–ன் விலையை 11.29 லட்சம் தொடங்கி 14.55 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை அமைத்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்ஸ் என்று சொகுசை நோக்கி முன்னேறும் மாருதியை மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்றே தோன்றுகிறது. கியா காரன்ஸுக்கு ஒரு சரியான போட்டி காத்திருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism