Published:Updated:

ஒரு முறை Charge செய்தால் 528 கி.மீ... | Kia EV 6 Walkaround | Motor Vikatan

கியா நிறுவனம் தங்களின் 'Kia EV 6' எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது கியா நிறுவனம், தங்களின் 'Kia EV 6' எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Kia EV 6 77.4kWh பேட்டரி பேக்குடன் இயங்குகிறது. இதில் சிறப்பு என்னவென்றால், இதன் சார்ஜிங் வேகம்தான். இதில் இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. ஒன்று GT லைன் ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றொன்று GT லைன் ஆல் வீல் டிரைவ் (AWD). இந்த கார் 223bhp மற்றும் 350Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது, இதனால் 0 - 100kmph வேகத்தை 7.3 வினாடிகளில் சட்டென்று எட்டிவிடும். மற்றோரு டாப்-ஸ்பெக் மாடலான AWD, 320.5bhp மற்றும் 605Nm டார்க் கொண்டது. இது 0 - 100kmph வேகத்தை வெறும் 5.2 விநாடிகளில் எட்டிவிடுகிறது. இந்த 'Kia EV 6'-ல் Eco, Normal மற்றும் Sport என மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism