Published:Updated:

செல்ட்டோஸ் VS ஹெக்டர்... இந்தப் புதிய எஸ்யூவிகளில் எது பெஸ்ட்?!

Seltos Vs Hector
Seltos Vs Hector ( Midsize SUV's )

இந்த இரண்டும் வெவ்வேறு செக்மென்ட்டைச் சேர்ந்தவை என்றாலும், 5 சீட்கள் - அதிரடியான டிசைன் - அதிகப்படியான சிறப்பம்சங்கள் - புராணங்களிலிருந்து பெறப்பட்ட பெயர்கள் - சில வேரியன்ட்களின் விலைகள் - மிட்சைஸ் எஸ்யூவிகளை வாங்க இருப்பவர்கள் என ஒற்றுமையும் உள்ளது.

கடந்த 9 மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் துறை, நிலையான புதிய வாகன விற்பனை இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், கியா மோட்டார்ஸ் இந்தியா (செல்ட்டோஸ்) மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா (ஹெக்டர்) என இரு புதிய வாகன உற்பத்தியாளர்கள், நம் நாட்டின் போட்டிமிகுந்த கார் சந்தையில் டயர் பதித்திருக்கிறார்கள். இந்த இரண்டும் வெவ்வேறு செக்மென்ட்டைச் சேர்ந்தவை என்றாலும், 5 சீட்கள், அதிரடியான டிசைன், அதிகப்படியான சிறப்பம்சங்கள், புராணங்களிலிருந்து பெறப்பட்ட பெயர்கள், சில வேரியன்ட்களின் விலைகள், மிட்சைஸ் எஸ்யூவிகளை வாங்க இருப்பவர்கள் என ஒற்றுமையும் உள்ளது. எனவே சைஸ், வசதிகள், இன்ஜின், விலை ஆகியவற்றில் கியா மற்றும் எம்ஜி ஆகியவை எப்படி இருக்கின்றன?

கியா செல்ட்டோஸ் - கடந்து வந்துள்ள பாதை

Seltos
Seltos
Kia Motors

கடந்த ஜூன் மாதத்தில் வெளியான செல்ட்டோஸின் புக்கிங் (ரூ.25,000), இந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது. ஒரே நாளில் 6,046 கார்கள் (இதில் கியாவின் இணையதளத்தில் புக் செய்யப்பட்டது 1,628 கார்கள்) செய்யப்பட்டன. ஆகஸ்ட் 22-ம் தேதி இந்த எஸ்யூவி விற்பனைக்கு வரும்போது, இந்தியாவின் 160 நகரங்களில் 265 TouchPoint-களை நிறுவிவிடும் முனைப்புடன் இருக்கிறது. `இந்த எண்ணிக்கை 2021-ம் ஆண்டுக்குள் 350 TouchPoint ஆக அதிகரிக்கப்படும்’ என கியா மோட்டார்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் வரவிருக்கும் 6 டீலர்களும் (கிண்டி, போரூர், அண்ணா சாலை, OMR, அண்ணா நகர், அம்பத்தூர்) அடக்கம்.

8 வேரியன்ட்கள் மற்றும் கலர்கள் 3 இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், 4 விதமான டூயல்டோன் கலர்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது செல்ட்டோஸ். இந்த மாதத்தின் இறுதிக்குள் கார்கள் டீலர்களை வந்தடைந்துவிடும் என்பதுடன், அடுத்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து டெஸ்ட் டிரைவ் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. கிரெட்டா, கிக்ஸ், கேப்ச்சர், எஸ்-கிராஸ், BR-V ஆகிய கார்களுடன் செல்ட்டோஸ் போட்டிபோடும். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கார்களின் உற்பத்தி ஆரம்பமாகி இருந்தாலும், அனந்தபூரில் அமைந்திருக்கும் கியா மோட்டார்ஸின் தொழிற்சாலை, ஜூலை 31 முதலாக அதிகாரப்பூர்வமாகத் தனது உற்பத்தியைத் தொடங்குகிறது. 7,600 கோடி ரூபாய் முதலீட்டில், 23 மில்லியன் சதுர அடியில் தயாராகியிருக்கும் இந்த ஆலை, வருடத்துக்கு 1 லட்சம் கார்களைத் தயாரிக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HUD Unit
HUD Unit
Kia Seltos

எம்ஜி ஹெக்டர் - கடந்திருக்கும் பாதை

Hector
Hector
Mg Motors

கடந்த ஜூன் மாத இறுதியில் அசத்தலான விலையில் அறிமுகமான ஹெக்டர், இதுவரை 28 ஆயிரம் புக்கிங்குகளைக் கடந்துவிட்டது. குஜராத்தில் அமைந்திருக்கும் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில், மாதத்துக்கு 2,000 கார்களை மட்டுமே தயாரிக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. எனவே, கடந்த ஜூலை 19 முதலாகவே, இந்த எஸ்யூவியின் புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதாவது இந்த ஆண்டுக்கு என எம்ஜி மோட்டார் இந்தியா நிர்ணயித்திருந்த இலக்கை அவர்கள் ஏற்கெனவே கடந்துவிட்டார்கள் (புக்கிங் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திலேயே, புக்கிங் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது)!

தவிர கொச்சின் மற்றும் குர்கான் ஆகிய நகரங்களில் மட்டுமே, ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் புக் ஆகியுள்ளன. இதற்கான தீர்வாக, வருகின்ற அக்டோபர் 2019 முதலாக, மாதத்துக்கு 3,000 கார்கள் என்றளவில் தனது ஆலையின் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

எஸ்யூவிகள் என்றாலே டீசல் இன்ஜின்தான் என்ற சூழல் பரவலாக இருக்கும் நிலையில், பெட்ரோல் இன்ஜின் - DCT - Glazing Red கூட்டணிதான் (ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியன்ட்கள்), அதிகப்படியான புக்கிங்குகளைப் பெற்றிருக்கிறது. இதன் வெயிட்டிங் பீரியட், 6-7 மாதம் வரை இருக்கிறது! மற்றபடி மேனுவல் கியர்பாக்ஸுடன் கூடிய டீசல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் மாடல்களின் வெயிட்டிங் பீரியட், முறையே 3 மற்றும் 4 மாதங்கள் என்றளவில் இருக்கிறது. தற்போது BS-4 பாணியில் இயங்கினாலும், ஜனவரி 2020 முதலாக BS-6 மாடல்களின் உற்பத்தி தொடங்கப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது.

எனவே ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக்கில் இருக்கும் ஃபியட்டின் அதே 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்தான் இங்கேயும் இடம்பெறும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஹெக்டரின் டெலிவரிகள் ஆரம்பித்துவிட்டன. கடந்த ஜூலை மாதத்தில் 1,508 பேரை ஹெக்டர் சென்றடைந்திருக்கிறது. சென்னை நந்தனத்தில் எம்ஜியின் டீலர் இருக்கிறது. தற்போதைய சூழலில் 120 TouchPoint-கள் இருக்கும் நிலையில், வரும் செப்டம்பர் 2019-க்குள்ளாக இந்த எண்ணிக்கை 250 TouchPoint ஆக அதிகரிக்கப்படும் எனத் தகவல் வந்துள்ளது.

Seltos Cabin
Seltos Cabin
Kia Motors

இந்த எஸ்யூவிகளின் சைஸ் என்ன?

Seltos GT Line
Seltos GT Line
Kia Motors

மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டின் 'ரூட் தல'-யாக இருக்கும் க்ரெட்டாவைவிட, நீளமாக இருக்கிறது செல்ட்டோஸ் (4,315மிமீ). மேலும், ஹெக்டரைவிட இதன் அகலம் 35மிமீ மட்டுமே குறைவு! தவிர ஹூண்டாயைவிட கியாவின் பூட் ஸ்பேஸ் அதிகமாக உள்ளது (433 லிட்டர்). இதனால் நெரிசல் மிகுந்த சாலைகளில், இந்த எஸ்யூவியை ஓட்டுவது சுலபமாக இருக்கலாம். ஆனால். எதிர்பார்த்தபடியே அளவுகளில் செல்ட்டோஸைவிடப் பெரிதாக (340மிமீ அதிக நீளம் - 140மிமீ அதிக உயரம் - 140மிமீ அதிக வீல்பேஸ்) இருக்கிறது ஹெக்டர். இன்னும் சொல்லப்போனால், டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV 5OO உடன் போட்டிபோடும் விதத்தில் எம்ஜியின் எஸ்யூவி உள்ளது.

Hector Hybrid
Hector Hybrid
MG Motors

இந்த இரு புதிய கார்களின் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் (செல்ட்டோஸ் - 190மிமீ, ஹெக்டர் - 192மிமீ), செல்ட்டோஸைவிட 154 லிட்டர் அதிக பூட் ஸ்பேஸைக் கொண்டிருக்கிறது ஹெக்டர். இந்த இரண்டு எஸ்யூவிகளையும் அருகருகே வைத்துப் பார்க்கும்போது, கியா கச்சிதமான சைஸில் இருப்பதுபோலத் தோன்றுகிறது. இவற்றின் முன்பக்கத்தில் க்ரோம் வேலைப்பாடுகள் அதிகமாக இருப்பது, இந்தியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனலாம். ஆனால் ஹெக்டரின் ஸ்டைலான முன்பக்கத்துடன் ஒப்பிட்டால், 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தமாக இல்லை. இதனுடன் காரின் குறைவான அகலம் சேரும்போது, டிசைன் கொஞ்சம் அடிவாங்கிவிடுகிறது.

கேபின் மற்றும் சிறப்பம்சங்களில் என்ன ஸ்பெஷல்?

செல்ட்டோஸின் கேபினில் அதிக நேரத்தைச் செலவிடவில்லை என்றாலும், அதன் தரத்தை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. டேஷ்போர்டின் டிசைன் நீட்டாக இருப்பதுடன், கன்ட்ரோல்களும் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன. முன்பக்க மற்றும் பின்பக்க இடவசதி என இரண்டுமே மனநிறைவைத் தருகின்றன. ஆனால், இவை ஹெக்டருடன் ஒப்பிடும்போது குறைவுதான்; 'Punching above its weight' என்ற சொலவடை, இந்த எஸ்யூவிக்கு பக்காவாகப் பொருந்துகிறது.

Flat Floor இருப்பதால், எம்ஜியின் நடுவரிசையில் 3 பேர் வசதியாக உட்கார முடியும். ஆனால், செல்ட்டோஸுடன் ஒப்பிட்டால், கேபினில் இடம்பெற்றிருக்கும் சில மெட்டிரியலின் தரம், அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த இரு எஸ்யூவிகளின் டாப் மாடல்களைக் கருத்தில் கொண்டால், சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம். ஆனால், இரண்டுக்கும் இடையே சிற்சில வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்கின்றன; செல்ட்டோஸ் ஒற்றை சன்ரூஃப் கொண்டிருக்க (முன்பக்க இருக்கைகளுக்கு மட்டும்), ஹெக்டரின் Dual Pane சன்ரூஃப், காரின் நடுவரிசை இருக்கை வரை நீள்கிறது.

Seltos Cabin
Seltos Cabin
Kia Motors

அதேபோல, டச் ஸ்க்ரீன் ஏரியாவிலும் இரண்டுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. செல்ட்டோஸில் சென்டர் கன்சோலுக்கு மேலே 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தால், ஹெக்டரின் 10.4 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் - சென்டர் கன்சோலின் முக்கால்வாசி இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. பல வசதிகள் டச் ஸ்க்ரீனிலேயே இருப்பதால் எம்ஜியின் டேஷ்போர்டில் பட்டன்கள் குறைவுதான். இரண்டு எஸ்யூவிகளிலும் 2 முதல் 6 காற்றுப்பைகள், ABS, ESP, டிராக்‌ஷன் கன்ட்ரோல், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்ஸ் எனப் பாதுகாப்பு வசதிகள் ஒன்றுபோல உள்ளன. ஆனால், செல்ட்டோஸின் ஆரம்ப மாடல்களின் பின்பக்கத்தில் டிரம் பிரேக்ஸ்தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஹெக்டரில் இந்தப் பிரச்னை கிடையாது. இரு கார்களின் டச் ஸ்க்ரீனிலும் ஆப்பிள் கார் ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதை எம்ஜி iSmart எனவும், கியா UVO Connect எனவும் அழைக்கிறார்கள். இதன் இன்டர்நெட் தேவைகளுக்காக ஒரு e-Sim மற்றும் ஆப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Hector
Hector

எனவே, காரின் இன்ஜின் - க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை ஆன்/ஆஃப் செய்வது தொடங்கி, கதவுகளின் லாக்கை எடுப்பது/போடுவது மற்றும் காரின் மெக்கானிக்கல் கண்டிஷன் ஆகியவை வரை தெரிந்துகொள்ள முடியும். எம்ஜியில் வாய்ஸ் அசிஸ்ட் இருந்தால் (100 அம்சங்களை இதில் கன்ட்ரோல் செய்யலாம்), கியாவில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) அடிப்படையாகக் கொண்ட வாய்ஸ் கமாண்ட் உள்ளது; ஹெக்டரின் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்தை Infinity தயாரித்திருக்கிறது. Bose நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் செல்ட்டோஸில் இருக்கிறது. 360 டிகிரி Surround கேமரா, முன்/பின் பார்க்கிங் சென்சார்கள், லெதர் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், TPMS, Mood லைட்டிங், தானாக இயங்கும் ஹெட்லைட்ஸ் மற்றும் வைப்பர்கள் ஆகியவை, இரண்டு எஸ்யூவிகளிலும் பொதுவான வசதிகளாகும். கியாவில் முன்பக்க Ventillated சீட்கள் மற்றும் 8 இன்ச் Heads Up டிஸ்பிளே இருந்தால், எம்ஜியில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க இருக்கைகள் ஸ்பெஷல் அம்சங்களாக இருக்கின்றன. மற்றபடி இரு கார்களிலுமே வசதிகளுக்குப் பஞ்சமில்லை என்பதே உண்மை.

பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்கிறதே!

Seltos
Seltos
Kia Motors

செல்ட்டோஸில் உள்ள 1.5 லிட்டர் - 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் இரண்டிலுமே, 115bhp பவர் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொதுவானவை. கூடுதலாக பெட்ரொல் இன்ஜினில் CVT இருந்தால், டீசல் இன்ஜினில் டார்க் கன்வெர்ட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. பர்ஃபாமன்ஸ் பிரியர்களை மனதில்வைத்து, 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனையும் இந்த எஸ்யூவியில் வழங்கியிருக்கிறது கியா. 140bhp பவரை வெளிப்படுத்தும் இந்த 4 சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது. இவையனைத்தும் BS-6 மாசு விதிகளுக்கேற்ப இருப்பது பெரிய ப்ளஸ்.

Seltos
Seltos
Kia Motors

143bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் - 48V ஹைபிரிட் அமைப்புடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் - 170bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் என கியாவுடன் ஒப்பிட்டால், எம்ஜியும் 3 இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. அனைத்து இன்ஜின்களிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உண்டு என்றாலும், வழக்கமான பெட்ரோல் இன்ஜினுக்கு மட்டுமே 6 ஸ்பீடு DCT ஆப்ஷன் இருக்கிறது. செல்ட்டோஸ் போல ஹெக்டரில் டீசல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லாதது மைனஸ். அளவில் பெரிய இன்ஜின்கள் என்பதால், இவை எதிர்பார்த்தபடியே பவர்ஃபுல்லாக இருக்கின்றன.

இந்தப் புதிய பிராண்ட்களின் டீலர் நெட்வொர்க் எப்படி?

Hector Dealers
Hector Dealers
MG Motors

உலகளவில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாக இருப்பினும், இந்தியாவுக்கு கியா மற்றும் எம்ஜி ஆகியவை புதிதுதான். எனவே பலரது கவனத்தை ஈர்க்க, அதிரடியான விலையே இதன் துருப்புச் சீட்டாக இருக்கும். அதே பாணியைப் பின்பற்றி, கவர்ச்சியான அறிமுக இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் (12.18 - 16.88 லட்ச ரூபாய்) வந்திறங்கியிருக்கிறது ஹெக்டர். எனவே இதைப் போலவே, 11-17 லட்ச ரூபாயில் (உத்தேச இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) வருகின்ற ஆகஸ்ட் 22, 2019 அன்று சிறப்பான விலைக்கு செல்ட்டோஸ் எஸ்யூவியை கியா களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Kia Dealers
Kia Dealers
Kia Motors
Bose System
Bose System
Kia Seltos

BS-6 மாசு விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட ஹெக்டர் வரும்போது, நிச்சயம் அதன் விலை தற்போது இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, க்ரெட்டா - கிக்ஸ் - கேப்ச்சர் - எஸ் க்ராஸ் - BR-V - டஸ்ட்டர் - ஹெக்டர் - XUV 500 - காம்பஸ் - ஹேரியர் என இவ்வளவு மிட்சைஸ் எஸ்யூவிகள் கோதாவில் இருந்தாலும், அதில் புதிதாக நுழைந்திருக்கும் செல்ட்டோஸ் மற்றும் ஹெக்டர் ஆகியவை, முன்னே சொன்ன கார்களுக்குக் கடும் சவால் அளிக்கும் என்பதே நிதர்சனம். இவற்றின் டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்/அனுபவம் அமைவதைப் பொறுத்தே, அதன் விற்பனை மற்றும் ரீ-சேல் மதிப்பு நிர்ணயிக்கப்படும் எனத் தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு