Published:Updated:

பட்ஜெட் எஸ்யூவி... கியா சோனெட் காரை வாங்கலாமா... ப்ளஸ், மைனஸ் என்ன? #KiaSonet

கியா சோனெட் காரில் குறைகளே இல்லையா? ப்ளஸ் என்ன… மைனஸ் என்ன? | கியா சோனெட் - எந்த வேரியன்ட் வாங்குவது பெஸ்ட்?

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயின் இன்னொரு பிராண்ட்தான் கியா. 2017-ல் இந்தியாவில் தனியாக கிளை விரித்த கியா மோட்டார்ஸ், ஆந்திராவின் அனந்தபூரில் தொழிற்சாலை தொங்கியது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் முதல் காராக செல்டோஸ் எனும் எஸ்யூவி விற்பனைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் பட்ஜெட் எஸ்யூவியாக சொனெட் எனும் காரை களத்தில் இறக்கியிருக்கிறது.

சென்னையில் ஆன்ரோடு விலையாக சுமார் 8.25 லட்சத்தில் இருந்து தொடங்கி 16 லட்சம் வரை வேரியன்ட்டுக்கு ஏற்ப இந்த காரின் விலைப்பட்டியல் நீள்கிறது. கியா சோனெட்டை வாங்கலாமா, சோனெட்டின் ப்ளஸ், மைனஸ் என்ன?
கியா சோனெட்
கியா சோனெட்
Hill-Start Assist Control
Hill-Start Assist Control
டைமண்ட் கட் அலாய் வீல்கள்
டைமண்ட் கட் அலாய் வீல்கள்

சோனெட்டின் யுஎஸ்பி என்ன?!

அண்ணண் ஹூண்டாயைப்போலவே கியாவும், சிறப்பம்சங்களால் கவர்ந்திழுக்கும் அதேபாணியைத்தான் பின்பற்றுகிறது.

சோனெட்டின் மிகப் பெரிய ப்ளஸ்ஸே – இதன் வசதிகள்தான். டைமண்ட் கட் அலாய் வீல்கள், லெதர் சீட்கள், மூடுக்கு ஏற்ப கேபின் இன்டீரியர் லைட்களை மாற்றிக்கொள்ளும் மூட் லைட் செட்டிங், டோர்களுக்கும் லெதர் வேலைப்பாடுகள், பின் பக்கம் வாஷர் அண்ட் வைப்பர், ஏர் ப்யூரிஃபையர், சன்ரூஃப், கனெக்ட்டட் கார் டெக்னாலஜி கொண்ட நேவிகேஷன் சிஸ்டம் என ஏகப்பட்ட வசதிகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.

வென்ட்டிலேட்டட் சீட்கள்
வென்ட்டிலேட்டட் சீட்கள்
10.25 இன்ச் டச் ஸ்க்ரீன்
10.25 இன்ச் டச் ஸ்க்ரீன்
ஏர் ப்யூரிஃபையர்
ஏர் ப்யூரிஃபையர்

இன்னும் பல வசதிகள் செக்மென்ட் ஃபர்ஸ்ட்… 4.2 இன்ச் MID ஸ்க்ரீன், BOSE நிறுவனத்தின் சப் ஊஃபர் செட்அப் கொண்ட 7 ஸ்பீக்கர் சிஸ்டம், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம் (இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலேயே டயர்களின் ப்ரஷரை செக் செய்து கொள்ளலாம்), ஒயர்லெஸ் போன் சார்ஜிங் என சிறப்பம்சங்கள் ஏராளம்.

சோனெட்டின் ப்ளஸ், மைனஸ் என்ன?!

1. சின்ன கார் வரையறைக்குள் வருவதால் சோனெட்டின் நீளம் 3,995 மிமீ. முன் பக்க சீட்களில் செம சொகுசாக இருக்கும் சோனெட், பின் சீட்டில்தான் சொதப்புகிறது. இதில் இரண்டு பேர் மட்டும்தான் வசதியாக உட்காரமுடியும். கொஞ்சம் உயரமானவர்கள் என்றால், கால்களை நீட்டி மடக்கி உட்காரமுடியாது. இதன் வீல்பேஸ் 2,500 மிமீ என்றாலும், பின் சீட் இடவசதியில் கியா எப்படிச் சொதப்பியது?

கேபின் இன்டீரியர்
கேபின் இன்டீரியர்
ISOFIX மவுன்டட் சீட்கள்
ISOFIX மவுன்டட் சீட்கள்

2. முதல் மூன்று வேரியன்ட்களான HTE, HTK, HTK+ என முதல் ஆரம்ப மூன்று வேரியன்ட்களில் மட்டும்தான் 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியன்ட்டை வாங்க முடியும்.

3. டர்போ பெட்ரோல் இன்ஜின் வாங்கினால், மேனுவல் இல்லை. IMT, 7DCT என ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்கள்தான் டர்போ பெட்ரோலில் உண்டு. மேனுவல் டர்போ ஆப்ஷன் இல்லை. அதேபோல், பாதுகாப்புக்காக GTX+ வேரியன்ட் வாங்கினால், ஆட்டோமேட்டிக் டீசலை மிஸ் செய்ய வேண்டியிருக்கும். மேனுவல் மட்டும்தான்.

7DCT ஆட்டோமேட்டிக்
7DCT ஆட்டோமேட்டிக்
4.2 இன்ச் MID ஸ்க்ரீன்
4.2 இன்ச் MID ஸ்க்ரீன்
கனெக்ட்டட் கார்
கனெக்ட்டட் கார்

4. வென்யூவில் இருக்கும் IMT கியர்பாக்ஸ், சோனெட்டிலும் வந்துவிட்டது. `க்ளட்ச் இல்லை; கியர் இருக்கு’ எனும் புதுமையான டெக்னாலஜிதான் என்றாலும், வென்யூ IMT–யே இன்னும் பலரது நன்மதிப்பைப் பெறவில்லை. காரணம், இதை ஓட்ட நிறையப் பழக வேண்டும்; கியர்பாக்ஸை, டிரைவரைத் தாண்டி மற்றவர்களும் கன்ட்ரோல் செய்யலாம் என்பது இதன் மைனஸ்.

5. வென்யூவைவிட சோனெட்டின் எக்ஸ் ஷோரூம் விலையில் 50,000 முதல் 80,000 வரை அதிகமாக இருக்கிறது என்பது ஒரு சின்னக் குறை. ஆனாலும், அதை ஓரளவு வசதிகளில் சரிக்கட்டிவிடுகிறது கியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்த வேரியன்ட் வாங்கலாம்?

பாதுகாப்புதான் முக்கியம் என்றால், நீங்கள் GTX+ வேரியன்ட் வாங்கலாம். இதுவே வசதிகள்தான் வேண்டும் என்றால், HTX+ மாடலுக்குப் போகலாம். ‛காசு கம்மியா இருக்கு’ என்பவர்கள், HTE, HTK, HTK+ போன்ற 5 ஸ்பீடு மேனுவல் 1.2 லி பெட்ரோல் வேரியன்ட்களை வாங்கலாம். ஆனால், இதில் சில வசதிகளைத் துறக்க வேண்டியிருக்கும். அதேபோல் டீசலில் ஆட்டோமேட்டிக் வேண்டும், பெரிதாக வசதிகள் வேணாம் என்பவர்கள், HTK+ வேரியன்ட்டுக்குப் போகலாம்.

மைலேஜ்தான் முக்கியம் என்றால் HTE, HTK, HTK+, HTX, HTX+ என்று டீசல் மேனுவல் வேரியன்ட்களுக்குப் போய்விடலாம். ஏனென்றால், இதன் அராய் மைலேஜ் 24.1 கிமீட்டராம். இதுவே டீசல் ஆட்டோமேட்டிக் என்றால் 19 கிமீ. பெட்ரோல் மேனுவல் என்றாலும் ஆட்டோமேட்டிக் என்றாலும் 18-க்குக் கீழேதான்!

ஆன்ரோடு விலை சுமார் 8.25 லட்சத்தில் இருந்து 16 லட்சம் வரை
ஆன்ரோடு விலை சுமார் 8.25 லட்சத்தில் இருந்து 16 லட்சம் வரை
பின்பக்க இடவசதி அதிகம் வேண்டாம் என்பவர்கள் கியா சோனெட்டை டெஸ்ட் டிரைவ் செய்துபார்க்கலாம். ஏகப்பட்ட சிறப்பம்சங்களோடு, பார்ப்பதற்கான ஸ்டைலான காராகவும் இருக்கிறது சோனெட்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு