Published:Updated:

ஒரு சூப்பர் காரை நீங்களே வடிவமைக்கலாம்... எங்கே, எப்படி?! #CareerTips

Harshvardana Design | கார் டிசைன்
Harshvardana Design | கார் டிசைன்

மோட்டார் விகடனும் AYA டிசைன் அகாடமியும் இணைந்து நடத்தும் வொர்க்ஷாப்பில்தான் இது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

‘‘ஒரு மாணவனின் பாடப்புத்தகத்தைப் பார்த்திருப்பீர்கள்; என்றைக்காவது அவனின் ரஃப் நோட்டைத் திறந்து பார்த்திருக்கிறீர்களா?’’ என்று ஒரு திரைப்படத்தில் பெற்றோரைப் பார்த்து ஒரு வசனம் வரும். நிஜம்தான்; பாடப் புத்தகத்தைவிட ரஃப் நோட்டின் கிறுக்கல்களில்தான் ஒரு மாணவனின் கரியர் ஒளிந்திருக்கும்.

அவர்களுக்கு எதில் ஆர்வம்; என்ன திறமை உண்டு; என்ன லட்சியம் என்பது ரஃப் நோட்டில்தான் தெரியும். அப்படி நிறைய மாணவர்களின் ரஃப் நோட்டைத் திறந்து பார்த்தால், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதிலும் கார் டிசைனில் நிறைய மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பது லேட்டஸ்ட்டாகத்தான் தெரிய வந்திருக்கிறது. மோட்டார் விகடனும், AYA டிசைன் அகாடமியும் இணைந்து நடத்தும் வொர்க்ஷாப்பின் மூலம் பல இளம் திறமையாளர்கள் வெளியே வந்திருக்கிறார்கள்.

Sharon Ramalingam
Sharon Ramalingam

‘‘என் பையன் ரஃப் நோட் மட்டுமில்லை; பேப்பர், சுவர் எது கிடைச்சாலும் கார் வரைய ஆரம்பிச்சிடுவான். அவனுக்கு இந்த வொர்க்ஷாப் சூப்பர் வாய்ப்பு!’’ என்று ஒரு தந்தை புளகாங்கிதப்படுகிறார்.

‘‘என் பொண்ணு ஒன்பதாவது படிக்கிறாங்க. சின்ன வயசுல இருந்தே எந்த கார், எந்த கம்பெனினு கரெக்ட்டா சொல்லிடுவா. இப்போ அவளோட ஆர்வம் பன்மடங்காகி இருக்கு!’’ என்கிறார் ஒரு அம்மா.

‘‘என் தம்பி இப்போதான் ஸ்கெட்ச் பிடிக்கவே ஆரம்பிச்சான். அதுக்குள்ள எந்த ரெஃபரென்ஸும் எடுக்காம ஃபோர்டு மஸ்டாங் காரை என்னமா வரையுறான்?’’ என்று ஆச்சரியப்படுகிறார் ஓர் அண்ணன்.

அப்படி என்ன வொர்க்ஷாப் இது..?

ஒரு கார் சாலையில் ஓடுவதை, பார்க்கிங்கில் நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த காருக்கு உயிர் இருக்கிறது; அது எதை இன்ஸ்பிரேஷனாக எடுத்து டிசைன் செய்யப்பட்டது; எப்படித் தயாராகிறது; ஒரு கார் உருவாவதற்கு முதல் படி என்ன; கான்செப்ட் கார் என்றால் என்ன; கார் டிசைனை எந்த மென்பொருள் பயன்படுத்தி வரைய வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு எல்லோருக்கும் இருக்குமா... ஒரு கார் ஸ்கெட்ச் ஆவதில் தொடங்கி, சாலையில் எப்படி ஓடுகிறது என்பது வரை எல்லா விஷயங்களையும் அப் டு டேட்டாகச் சொல்வதுதான் இந்த வொர்க்ஷாப்.

Harshvardana
Harshvardana
Harshvardana Designs
Harshvardana Designs

மாணவர்களுக்கு கார் டிசைன் பற்றிய தெளிவு; டிசைன் படிப்பு பற்றிய வழிகாட்டுதல் கிடைக்க வேண்டுமென்றால், இதைச் சொல்லித் தரும் ஆசிரியர் எப்படி அனுபவசாலியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அனுபவசாலிதான் சத்தியசீலன். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் சீஃப் டிசைன் தலைவர். விரைவில் விற்பனைக்கு வரப்போகும் படா தோஸ்த் எனும் எல்சிவி, இவர் டிசைன் குழுவின் மூலம் உதித்ததுதான். இது தவிர, சாலையில் நீங்கள் பார்க்கும் ஏகப்பட்ட ட்ரக்குகளும், பஸ்களும், கமர்ஷியல் வாகனங்களும் சத்தியசீலனின் கைவண்ணத்தில் உருவானவை. பேட்மேனை இன்ஸ்பிரேஷனாக எடுத்துச் செய்த டிவிஎஸ் கிங் ஆட்டோ, இட்லிப்பானையை இன்ஸ்பிரேஷனாக எடுத்து டிசைன் செய்த ஒரு நிஸான் காரின் இன்டீரியர் என்று இவர் பாடம் நடத்தினால் அங்கே அவ்வளவு உத்வேகம் பிறக்கும்.

இதுவரை பலதரப்பட்ட செஷன்கள் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டன. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இப்போது டிசைன் துறையில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொண்ட கோவில்பட்டியைச் சேர்ந்த ஷரோன் ராமலிங்கம் எனும் மாணவர், இப்போது லண்டனில் உள்ள RCA காலேஜில் படித்துக் கொண்டே எம்ஜி நிறுவனத்துக்காக ஸ்டைஃபண்டுடன் இன்டர்ன்ஷிப் செய்து முடித்திருக்கிறார். ‘‘எம்ஜிக்காக என்ன கார் டிசைன் பண்ணீங்க’’ என்றால், ‘‘அது கான்ஃபிடென்ஷியல் சார். இப்போ சைனா கிளம்பிட்டிருக்கேன். எம்ஜி–க்காகத்தான்’’ என்கிறார் ஷரோன்.

இது தவிர, கோவையைச் சேர்ந்த அஸ்வின் எனும் மாணவர், பி–டெக் முடித்துவிட்டு, இப்போது டிரான்ஸ்போர்ட்டேஷன் டிசைன் துறையில் நுழையக் காத்திருக்கிறார். ‘‘ஏற்கெனவே கார் இன்டீரியர் டிசைனில் எனக்கு ஆர்வம் அதிகம். ஈரோட்டில் ஒரு கம்பெனியில் ஒர்க் பண்ணிட்டிருந்தேன். அடிப்படையிலேயே நான் ஸ்கெட்ச்சிங் நல்லா பண்ணுவேன். இந்த வொர்க்ஷாப் மூலமா டிசைன் துறையில் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு. இப்போ அடுத்து டிரான்ஸ்போர்ட்டேஷன் துறையில் M.Des. (Master of Design), National Institute of Design இன்ஸ்டிட்யூட்டில் பண்ணப் போறேன். இதுக்கான என்ட்ரன்ஸுக்குத்தான் ரெடி ஆகிட்டிருக்கேன். எப்படியும் அட்மிஷன் வாங்கிடுவேன். என்னோட காரை ரோட்டில் இறக்காம விடமாட்டேன்!’ என்கிறார்.

Ashwin
Ashwin
Ashwin Designs
Ashwin Designs

ஹர்ஷவர்தனா எனும் மாணவச் செல்வம், வொர்க்ஷாப்பில் கலந்து கொண்டுவிட்டு பயங்கரத் தெளிவோடு பேசுகிறார். ‘‘எனக்கு கார் வரையறதுன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்பப் பிடிக்கும். என்னோட ஃபீல்டு டிசைன்னுதான் முடிவு பண்ணிட்டேன். இப்போதான் AYA அகாடமியில் சேர்ந்திருக்கேன். இப்போ ஒரு டிசைன் புரொஜெக்ட் பண்ணிட்டிருக்கேன். இந்த புரொஜெக்ட்டில் நான் நல்ல போர்ட்ஃபோலியோ ரெடி பண்ணிட்டா, இத்தாலியில் இருக்கிற IED (Istituto Europeo di Design) காலேஜில் சேர்றதுக்கான ஸ்காலர்ஷிப் கிடைச்சிடும். அதுக்குத்தான் இந்த புரொஜெக்ட். சத்தியசீலன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும்!’’ என்கிறார் ஹர்ஷ்.

இன்ஜீனியரிங் படிக்கும் மாணவி ஒருவர், ‘‘டிசைன் துறையில் இப்படி ஒரு சான்ஸ் இருக்குனு இந்த வொர்க்ஷாப் மூலமாதான் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்று ஸ்கெட்ச்சும் பேப்பருமாக கார் வரைய ஆரம்பித்திருக்கிறார்.

எல்லாம் ஓகே! மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த வொர்க்ஷாப்பா?

ஏகப்பட்ட குடும்பத் தலைவர்கள், பெண்கள், பிசினஸ் புள்ளிகளையும் இங்கே பார்க்க முடிகிறது. கோவையில் ஜீப் கட்டுமானத் தொழிலில் இருக்கும் ஷனாஸ், ‘‘இந்த வொர்க்ஷாப்பில் கார் சம்பந்தமா நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். நானும் ஒரு கார் டிசைனர்தான். நாங்க ஜீப் பில்டிங், ரீ–மாடலிங் பண்றோம். எங்களுடைய வொர்க்கிங் ஸ்டைலுக்கும் இந்த வொர்க்ஷாப்பில் கத்துக்கிட்டதுக்கும் நிறைய வித்தியாசம். சத்தியசீலன் சார் சொல்றது என்னன்னா, முதல்ல டிசைன், அப்புறம் க்ளே மாடலிங்... அப்புறம்தான் கான்செப்ட் – புரொடக்ஷன். நாங்க நேரடியா தயாரிப்பில் இறங்கிடுவோம். நாங்க ஏற்கெனவே இருக்கிற வாகனங்களை ரெடி பண்றோம்ங்கிறதால இந்த வித்தியாசம்னு நினைக்கிறேன். இதுபோக, மாணவர்களுக்கு தியரிடிக்கல் நாலெட்ஜ் மட்டும் போதாது; பிராக்டிக்கல் அறிவும் வேணும். அதுக்கு என்னோட வொர்க்ஷாப்பைத் தர நான் ரெடி! கார் டிசைன் பிராக்டிக்கலில் ஆர்வமா இருக்கிற மாணவர்கள் என்கிட்ட வரலாம்!’’ என்று ஒரு வழியையும் காட்டினார்.

Shanaas
Shanaas

ஆன்லைன் வகுப்பு என்பதால் – துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதற்காக, இந்த செப்டம்பர் மாதம் 12, 13, 19, 20 தேதிகளில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இந்த கார் டிசைன் வொர்க்ஷாப்பை நடத்த இருக்கிறது மோட்டார் விகடன்.

Date: 12th, 13th & 19th, 20th September 2020

Time: 10 am to 12 Noon India (IST).

For more details visit: bit.ly/MVCarDesign

மாணவர்கள் ரஃப் நோட்டைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது; அவர்கள் கரியர் அதில் ஒளிந்து கிடக்கும் என்பதை மறவாதீர்கள் பெற்றோர்களே!
அடுத்த கட்டுரைக்கு