Published:Updated:

3.3 விநாடிகளில் 100கி.மீ... சென்னையில் லம்போர்கினி Huracan Evo RWD ஸ்போர்ட்ஸ் கார்!

Huracan Evo RWD
Huracan Evo RWD ( Lamborghini )

ஃபெராரி F8 Tributo, ஆஸ்டன் மார்ட்டின் Vantage, மெர்சிடீஸ் AMG GT-R ஆகிய ஸ்போர்ட்ஸ் கார்களுடன் போட்டியிடுகிறது, லம்போர்கினி Huracan Evo RWD.

ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்ட Huracan Evo RWD ஸ்போர்ட்ஸ் காரை, 3.22 கோடி ரூபாய்க்குக் களமிறக்கியுள்ளது, லம்போர்கினி (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை). சென்னையில் காட்சிப்படுத்தப்பட்ட இது, ஆல் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்ட Huracan Evo (3.73 கோடி ரூபாய்), Huracan Evo ஸ்பைடர் (4.1 கோடி ரூபாய்) ஆகிய கார்களுடன் நம் நாட்டில் விற்பனையாகும் எனத் தெரிகிறது. மற்ற Huracan மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள அதே 5.2 லிட்டர் Naturally Aspirated V10 பெட்ரோல் இன்ஜின் (டர்போ சார்ஜர் கிடையாது).

Huracan Evo RWD
Huracan Evo RWD
Lamborghini

இங்கே, 610bhp@8,000rpm பவர் - 56kgm@6,500rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது, Huracan Evo AWD விட 30bhp பவர் - 4kgm டார்க் குறைவு என்றாலும், 0 - 100கி.மீ வேகத்தை வெறும் 3.3 விநாடிகளிலேயே இந்த கார் எட்டிவிடுகிறது! அதிகபட்சமாக 325கி.மீ வேகம் வரை செல்லும் Huracan Evo RWD, 2 வீல் டிரைவ் அமைப்பைக் கொண்ட ஃபெராரி F8 Tributo, ஆஸ்டன் மார்ட்டின் Vantage, மெர்சிடீஸ் AMG GT-R ஆகிய ஸ்போர்ட்ஸ் கார்களுடன் போட்டியிடுகிறது. Passive ஷாக் அப்சார்பர் உடனான Double Wishbone சஸ்பென்ஷன் உண்டு.

Huracan Evo RWD
Huracan Evo RWD
Lamborghini

முன்பக்கத்தில் Splitter, ஏர் இன்டேக் - பின்பக்கத்தில் Diffuser ஆகியவை புதிது. 19 இன்ச் அலாய் வீல்களில், Pirelli P Zero டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. 20 இன்ச் அலாய் வீல்கள் ஆப்ஷனல்; கேபினில் ஆப்பிள் கார் ப்ளே உடனான 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன், சென்டர் கன்சோலை அலங்கரிக்கிறது. இதற்கு மேட்சிங்காக டிஜிட்டல் மீட்டர் இடம்பெற்றுள்ளது. ஆப்ஷனலாக நிறைய அம்சங்கள் கிடைப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மற்றபடி 2 வீல் டிரைவ் செட்-அப் காரணமாக, Huracan Evo AWD விட 33 கிலோ குறைவான எடையில் இருக்கிறது Huracan Evo RWD (1,389 கிலோ).

Huracan Evo RWD
Huracan Evo RWD
Lamborghini

எனவே 610bhp பவரைச் சீராகச் செலுத்தவும் - காரின் கையாளுமையை முன்னேற்றவும், மேம்படுத்தப்பட்ட பர்ஃபாமன்ஸ் டிராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (P-TCS) - டைனமிக் ஸ்டீயரிங் சிஸ்டம் வசதியை இந்த ஸ்போர்ட்ஸ் காரில் சேர்த்துள்ளது, லம்போர்கினி. இதில் Strada, Sport, Corsa ஆகிய டிரைவிங் மோடுகள் இருப்பது செம. தவிர 40:60 வகையில் Weight Distributiion இருப்பதால், இந்த லம்போர்கினியில் Drift அடிப்பது எளிது; அந்த இன்ஜின் சத்தம், டிசைன்.... வேற லெவல் மக்களே!

அடுத்த கட்டுரைக்கு