Published:Updated:

"கிராஃபிக் டிசைனராக படிப்பெல்லாம் தேவையில்லை!"- மோட்டார் விகடன் ஒர்க்ஷாப்பில் கலந்துகொள்வது எப்படி?

நீங்கள் கிராஃபிக் டிசைனர் ஆவதற்கு உங்களுக்கு டிகிரியோ, பட்டப்படிப்போ எதுவும் தேவையில்லை என்பதுதான் ஸ்பெஷல். அப்படி உருவான கிராஃபிக் டிசைனர்கள் இங்கு எக்கச்சக்கம் உண்டு.

‘‘இந்த பேன்ட்டுக்கு இந்த கலர் ஷர்ட் போட்டால்தான் மேட்ச்சா இருக்கும்; இந்த டாப்ஸுக்கு இந்த கலர் செட் ஆகாது!’’ எனும் டிரெஸ்ஸிங் சென்ஸ் உங்கள் மகனிடமோ/மகளிடமோ இருந்தால், அவர்களுக்குள் நிச்சயம் ஒரு கிராஃபிக் டிசைனர் ஒளிந்திருப்பார். அதாவது, வண்ணங்களில்/அதன் பொருத்தங்களில் ஆரம்பிக்கிறது ஒரு கிராஃபிக் டிசைனரின் ஆர்வம்.

கிராஃபிக் டிசைன் என்றால், அது ஏதோ பெரிய கிராஃபிக்ஸ் வேலை என்று பலர் பம்முகிறார்கள். கிராஃபிக் டிசைன் என்பது ஒரு திருமணப் பத்திரிகைக்கும் தேவை; பிறந்த நாள் இன்விடேஷனுக்கும் தேவை; இறந்த நாள் போஸ்ட்டருக்கும் தேவை.
Event Details
Event Details

Photoshop, CorelDraw, 3D Max, Maya என்று சாஃப்ட்வேர்கள் இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியம் என்பது உண்மைதான். ஆனால், இதைக் கற்றுக்கொள்வது பெரிய கம்பசூத்திரம் இல்லை என்பதைச் சொல்லத்தான் மோட்டார் விகடனும் AYA அகாடமியும் சேர்ந்து ஒரு ஒர்க்ஷாப்பை நடத்த இருக்கிறது. இதை நடத்த இருப்பவர், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை டிசைனர் சத்தியசீலன்.

நாம் சாலையில் பார்க்கும் பல ட்ரக்குகள், பஸ்கள், டிவிஎஸ் பைக்குகள், டாடா கார்கள் என்று பலவற்றை டிசைன் செய்தவர் சத்தியசீலன். ஏற்கெனவே கார் டிசைன் ஆன்லைன் ஒர்க்ஷாப்பை நடத்திவரும் சத்தியசீலன், டிசைனுக்கென்றே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர்.

Designers
Designers

‘‘வெறும் எழுத்திலும்கூட இருக்கும் இந்த கிராஃபிக் டிசைன். இதை டைப்போகிராஃபி என்பார்கள். ஓர் ஓவியத்தையே எழுத்தாக வடித்திருப்பது நம் தமிழ்மொழியில்தான். என்னைக் கேட்டால் நாம் பேப்பரில் தமிழ் எழுத்துக்களை எழுதுகிறோமே… அதுகூட ஒரு கிராஃபிக் டிசைன். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அட்ராக்ஷனைக் கொண்டுவருவதுதான் கிராஃபிக் டிசைன்.

உதாரணத்துக்கு, என்னைக் கவர்ந்த ஒரு டிசைனைச் சொல்கிறேன். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படம் ரிலீஸான நேரம்… அதற்கு விளம்பர போர்டு ஒன்றை மவுன்ட் ரோட்டில் வைத்திருந்தார்கள். அது கிட்டத்தட்ட 40 அடிக்கும் மேல் நீள சைன்போர்டு. அதில் வலதுபக்க ஓரமாக ஒரு 2 அடியில் வெறும் ‘பாய்ஸ்’ என்ற எழுத்து… அதன் கீழே ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மட்டும் இருந்தது. வேறெதுவும் இல்லை; அந்த எழுத்து போக மீதம் சுமார் 38 அடிக்கு எல்லாமே வெள்ளை நிறம். பார்ப்பதற்கே நச்சென இருந்தது. கசகசவென படங்கள் இல்லை; கண்ணைப் பறிக்கும் வண்ணங்கள் இல்லை; இதில் பெரிய க்ரியேட்டிவிட்டியும் இல்லை. அந்த டிசைன் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ‘ஷங்கர் காசை வேஸ்ட் பண்ணிட்டாரு’ என்று விமர்சனங்களும் எழுந்தன. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், க்ரியேட்டிவிட்டி எல்லா இடத்திலும் தேவையில்லை என்பதுதான் க்ரியேட்டிவிட்டி. அட்ராக்ஷனாகவும் இருக்கலாம்; விமர்சனங்களையும் எழுப்பலாம் எனும்படியாக இருந்தது அது!’’ என்றார் சத்தியசீலன்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

இந்த ஒர்க்ஷாப்பில் சாஃப்ட்வேர் யுக்திகள் தவிர்த்து – வண்ணங்கள் (Colour), பெர்செப்ஷன் (Perception), கன்ட்டூர் (Contour), ஸ்பேஸ் (Space) என்று பல விஷயங்களைச் சொல்லித் தர இருக்கிறார் சத்தியசீலன். ‘‘ஆகாயம் வரைஞ்சு காட்டு என்று ஒரு குழந்தையிடம் சொன்னால்… சட்டென நீல நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்தானே! அதுபோல்தான் கலர்களுக்குப் பல குணாதிசயங்கள் உண்டு!’’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது... பெர்செப்ஷன் எனும் பார்வை... கன்ட்டூர் எனும் பாப்–ஆர்ட்... லோகோ டிசைனிங் முதல் காமிக்ஸ் டிராயிங், சினிமா போஸ்டர் டிசைன் வரை எப்படிக் கவர்ச்சியாக டிசைன் செய்வது… ஒரு சவுண்ட் எஃபெக்ட்டை ஆர்ட்டில் கொண்டு வருவது எப்படி… இப்படிப் பல விஷயங்களை இந்த ஒர்க்ஷாப்பில் கற்றுக்கொள்ளலாம்.

விஷயம் என்னவென்றால், நீங்கள் கிராஃபிக் டிசைனர் ஆவதற்கு உங்களுக்கு டிகிரியோ, பட்டப்படிப்போ எதுவும் தேவையில்லை என்பதுதான் ஸ்பெஷல். அப்படி உருவான கிராஃபிக் டிசைனர்கள் இங்கு எக்கச்சக்கம் உண்டு. அதில் உங்கள் குழந்தைகளும் இருக்கலாம்; நீங்களும் இருக்கலாம்.

Online introductory workshop
Online introductory workshop

Motor Vikatan & AYA Academy jointly present...

Secrets of graphics design and logo creation.

Online Introductory Workshop. (English)

Date: 15th Aug

Time: 05.00 pm - 07.00 pm

To register, visit: https://bit.ly/3wFbwEd

For queries, call: 7338826999, 9790990404
#MotorVikatan | #GraphicDesign

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு