Published:Updated:

"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"

"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"
பிரீமியம் ஸ்டோரி
"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"

படங்கள்: ரமேஷ் பாலாஜி

"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"

படங்கள்: ரமேஷ் பாலாஜி

Published:Updated:
"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"
பிரீமியம் ஸ்டோரி
"எங்க டீலர்ஷிப்பை ஷோரூம்னு சொல்லாதீங்க!"

சொகுசு கார் நிறுவனமான லெக்ஸஸ், ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்கு நெருங்கிய சொந்தம்! டொயோட்டாவில் இருந்து லெக்ஸஸுக்கு வந்திருப்பவர் நவின் சோனி. லெக்ஸஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான இவர், தங்கள் நிறுவனத்தின் 6-வது ஷோரூமைத் திறந்து வைப்பதற்காக சென்னை வந்திருந்தார். ஷோரூமின் விதானம் துவங்கி சுவர்கள்வரை காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள். `இதென்ன கார் ஷோருமா! பட்டுப் புடவை ஷோரூமா’ என்று வியப்போடு கேட்டபோது, அவர் தனக்குப் பக்கத்தில் இருந்த லெக்ஸஸ் ஷோரூம் உரிமையாளர் லங்கா லிங்கத்தைப் பார்த்து அர்த்தம் பொதிந்த ஒரு புன்னகையை உதிர்த்தார்.

‘`லெக்ஸஸ் எந்த ஊரில் கெஸ்ட் எக்பீரியன்ஸ் சென்டர் திறந்தாலும், (ஷோரூம் என்று சொல்லக்கூடாதாம்!) அந்த ஊரின் பாரம்பரியப்படித்தான் அதற்கு உள்ளலங்காரம் செய்வோம்!’’ என்று நவின் சொல்லி நிறுத்த, லங்கா லிங்கம் தொடர்ந்தார். ``தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவை நெசவாளர்கள். அதேபோல ஜப்பானில் கைவினைக் கலைஞர்கள் நிறைந்த ஒரு பகுதி என்றால் அது அந்நாட்டில் இருக்கும் `கொய்ட்டோ’ என்கிற பகுதி. இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் இந்த இரண்டு கைவினைக் கலைஞர்களின் தாக்கத்தையும் பார்க்க முடியும்!” என்று ஷோரூமைச் சுற்றிக் காட்டினார். ஷோரூம் நெடுகிலும் பட்டுப்புடவை நெய்யப்படும் கைத்தறிகளில் காணப்படும் பட்டுநூல்கள் விதவிதமான வடிவங்களில் இருந்தன. அதேபோல சுவருக்கோ தரைக்கோ டைல்ஸ் போடாமல், பாரம்பரிய முறைப்படி பூசியும் பூசாமல் இருக்கும் ஃபினிஷோடு விட்டிருந்தார்கள்.

இதை `ஷோரூம்’ என்று சொல்லாமல் `கெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் மையம்’ என்று சொல்வதற்குக் காரணம் - இங்கு வாடிக்கையாளர்கள் எப்படியும் வருவார்கள். ஆனால், அவர்களைத் தாண்டி இருக்கும் எங்கள் நீண்ட நாள் வாடிக்கையாளர்கள், `இந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தேன். பிசினஸ் விஷயமாக நண்பர் ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது. அதுதான் இங்கே வரச் சொல்லிவிட்டேன்’ என்று இங்கே நண்பரோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டே பிசினஸ் பேசிவிட்டுச் செல்லலாம். இது ஒரு வகையில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்!’’ என்றார்.விஐபி இன்டர்வியூ: நவின் சோனி, லெக்ஸஸ் மேலாண் இயக்குநர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism