Published:Updated:

`வழக்கம் போல இந்த முறையும் SUV தான் கெத்து!' #AutoExpo2020 Day-1 ரிப்போர்ட்

#AutoExpo2020 Day-1 ரிப்போர்ட்
Live Update
#AutoExpo2020 Day-1 ரிப்போர்ட்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போவின் லைவ் அப்டேட்ஸ்க்கு இணைந்திருங்கள்!

06 Feb 2020 2 PM

Day 2 லைவ் அப்டேடஸ்க்கு கீழுள்ள கட்டுரைக்கு செல்லுங்கள்!

05 Feb 2020 7 PM

Tata Hexa Safari Edition

Tata Hexa Safari Edition
Tata Hexa Safari Edition

டெல்லி ஆட்டோ எக்ஸ்போக்களில் பல்வேறு கான்செப்ட்கள் மற்றும் புதிய தயாரிப்புகளைத் தாண்டி, ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றும் ஸ்பெஷல் எடிஷன்களும் கவனத்தைக் கவரும் விதமாக அமைந்திருக்கும். இம்முறை அப்படி வந்திருப்பதுதான், டாடாவின் ஹெக்ஸா சஃபாரி எடிஷன். பெயருக்கேற்றபடி, உற்பத்தியில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கும் சஃபாரி ஸ்டார்மை நினைவுகூறும் விதத்தில் இந்த எஸ்யூவி வெளிவந்துள்ளது. எனவே BS-6 டீசல் இன்ஜின், ஹெக்ஸாவில் இடம்பெறுவது இதனால் உறுதியாகிவிட்டது. இந்த எஸ்யூவியின் 4 வீல் டிரைவ் மாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் சஃபாரி எடிஷன், டூயல் டோன் ஃபினிஷுடன் ஈர்க்கிறது. கேபினில் சஃபாரி பேட்ஜிங் இருப்பதுடன், புதிய சீட் கவர்கள் அழகாக உள்ளன. வழக்கமான மாடலைவிட இது எவ்வளவு அதிக விலையில் வரும் என்பதில் தெளிவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
05 Feb 2020 7 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Volkswagen T-Roc

Volkswagen T-Roc
Volkswagen T-Roc

இந்தியாவில் எஸ்யூவிகள் ட்ரெண்டிங்கில் இருப்பதை லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கும் ஃபோக்ஸ்வாகன், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வரிசையாக எஸ்யூவிகளைக் காட்சிபடுத்திக் கொண்டிருக்கிறது. Taigun-யைத் தொடர்ந்து, T-Roc தற்போது வெளிவந்திருக்கிறது. CBU முறையில் முழு காராக இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த மிட்சைஸ் எஸ்யூவியின் புக்கிங், இன்று முதல் தொடங்கிவிட்டது! விலை உத்தேசமாக 23 லட்ச ரூபாய் இருக்கலாம்; ஃபோக்ஸ்வாகனின் பிரசத்திபெற்ற MOB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் T-Roc, டிகுவானுக்கு முந்தைய மாடலாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. பெரிய வீல் ஆர்ச், சரியும் பின்பக்க விண்ட் ஸ்க்ரீன், அகலமான விண்டோ லைன், Contrast ரூஃப் என ஒரு எஸ்யூவிக்குத் தேவையான அம்சங்கள் இதில் இருப்பது பெரிய ப்ளஸ். நம் ஊர்ச் சாலைகளுக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றில் மாற்றமிருக்கலாம். தற்போது விற்பனையில் இருக்கும் க்ரெட்டாவைப் போலவே, 4.2 மீட்டரில் இருக்கிறது T-Roc. கேபினில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், In Car கனெக்ட்டிவிட்டி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் என அதிக வசதிகள் உள்ளன. பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், ABS, EBD, ரியர் பார்க்கிங் கேமரா, லேன் அசிஸ்ட், Blind Spot Monitor ஆகியவை இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். 150bhp பவர் மற்றும் 34kgm டார்க்கைத் தரக்கூடிய 1.5 லிட்டர் TSI - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி T-Roc எஸ்யூவியில் இருக்கிறது.

05 Feb 2020 2 PM

டர்போ கிராண்ட் i10, இப்படித்தான் இருக்கும்!

டர்போ கிராண்ட் i10
டர்போ கிராண்ட் i10
டர்போ கிராண்ட் i10
டர்போ கிராண்ட் i10

வென்யூ மற்றும் ஆராவைத் தொடர்ந்து, கிராண்ட் i10 நியோஸிலும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (T-GDi)

இன்ஜினைப் பொருத்தியுள்ளது ஹூண்டாய். இது ஆராவைப் போலவே 100bhp பவர் - 17.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருந்தாலும், வென்யூ போல ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இங்கே கிடையாது. இது பவர்ஃபுல் மாடல் என்பதை உணர்த்தும் விதமாக, கிரில் மற்றும் டெயில்கேட்டில் சிவப்பு நிற டர்போ பேட்ஜிங் இருக்கிறது; மேலும் ரூஃப், கிரில், கேபின் ஆகியவை, கறுப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. ஆரா போலவே நியோஸின் இன்டீரியரிலும் சிவப்பு நிற வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஸ்போர்ட்ஸ் எனும் ஒரே வேரியன்ட்டில்தான் நியோஸின் டர்போ பெட்ரோல் மாடல் வாங்கமுடியும் எனத் தகவல் வந்துள்ளது.

05 Feb 2020 12 PM

பெயருக்கு ஏற்றபடி, ஃபன்னான கார்தான் இந்த Funster!

Funster
Funster
Funster
Funster

ஒவ்வொரு முறை ஆட்டோ எக்ஸ்போவிலும், கெத்தான கான்செப்ட் ஒன்றைக் காட்சிபடுத்துவது மஹிந்திராவின் வழக்கம். அதனை உறுதிபடுத்தும் விதமாக, இம்முறை ஃபன்ஸ்டர் (Funster) எனும் Convertible எலெக்ட்ரிக் கான்செப்ட்டை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா. 4 வீல் டிரைவ் அமைப்பில் இது முழு நேரமும் இயங்கும் என்பது செம! எனவே 0 - 100கிமீ வேகத்தை வெறும் 5 விநாடிகளிலேயே ஃபன்ஸ்டர் எட்டும் என்பதுடன், அதிகபட்சமாக 200கிமீ வேகம் வரை செல்கிறது! டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் (313 bhp)- 59.1kWh லித்தியம் ஐயன் பேட்டரி Pack இருப்பதால், சிங்கிள் சார்ஜில் 520கிமீ தூரம் செல்லகூடிய திறனைக் கொண்டிருக்கிறது இந்த Convertible எலெக்ட்ரிக் கார்.பெயருக்கு ஏற்றபடி, ஃபன்னான கார்தான் இந்த Funster!

05 Feb 2020 12 PM

இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்: மஹிந்திராவின் eKUV1OO

மஹிந்திராவின் eKUV1OO
மஹிந்திராவின் eKUV1OO
மஹிந்திராவின் eKUV1OO
மஹிந்திராவின் eKUV1OO

கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட்டாக இருந்த eKUV1OO காரை, இம்முறை தடாலடியாக அறிமுகப்படுத்திவிட்டது மஹிந்திரா. 'இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்' என்ற பெருமையுடன் களமிறங்கியிருக்கும் இந்த எலெக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவியில் இருப்பது, 54bhp பவர் மற்றும் 12kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார். சிங்கிள் சார்ஜில் 147கிமீ செல்லக்கூடிய eKUV1OO-ன் லித்தியம் ஐயன் பேட்டரிகளை, 5 மணிநேரம் 45 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஏற்றிவிடலாம். இதுவே ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது, 80% பேட்டரியை 55 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிவிடமுடிகிறது! லித்தியம் ஐயன் பேட்டரி Pack-க்கு லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருப்பது செம. FAME II மானியம் போக, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 8.25 லட்சத்துக்கு வெளிவந்திருக்கிறது, மஹிந்திராவின் eKUV1OO.

05 Feb 2020 11 AM

சுஸூகி ஜிக்ஸர் 155 BS-6!

Suzuki Gixxer
Suzuki Gixxer
Suzuki Gixxer
Suzuki Gixxer

BS-6 சுஸூகி ஜிக்ஸர் 150, முன்பைவிட 0.5bhp குறைவான பவரையும், 0.02kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது; முன்பைவிட ஒரு கிலோ எடையும் அதிகம்!ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகளைப் போலவே, பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் மோட்டோ ஜிபி எடிஷனைக் களமிறக்கும் முடிவில் சுஸூகி இருப்பதுபோலத் தோன்றுகிறது. அதற்கேற்ப MotoGP கலர் & கிராஃபிக்ஸுடன் கூடிய ஸ்கூட்டரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்க்கமுடிந்தது.

இந்த மாதத்தின் இறுதியில் விலை அறிவிக்கப்படும்.
பர்க்மேன் ஸ்ட்ரீட்
பர்க்மேன் ஸ்ட்ரீட்

இந்தியாவில் தான் விற்பனை செய்யும் வாகனங்களின் BS-6 வெர்ஷன்களை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது சுஸூகி இந்தியா. பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரைப் பொறுத்தவரை, அது முன்பைவிட 0.02kgm குறைவான டார்க்கைத் தருகிறது. பவரில் மாற்றமில்லாவிட்டாலும், ஸ்கூட்டரின் எடை 2 கிலோ அதிகரித்துவிட்டது (110 கிலோ). பெட்ரோல் டேங்க்கின் அளவும் 100மில்லி குறைந்துவிட்டது (5.5 லிட்டர்). ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகளைப் போலவே, பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் மோட்டோ ஜிபி எடிஷனைக் களமிறக்கும் முடிவில் சுஸூகி இருப்பதுபோலத் தோன்றுகிறது. அதற்கேற்ப MotoGP கலர் & கிராஃபிக்ஸுடன் கூடிய ஸ்கூட்டரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்க்கமுடிந்தது.

Nexo FCEV

Nexo FCEV
Nexo FCEV

உலகெங்கும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல்/டீசல் அல்லாத கார்களும் பரவலாக வரத்தொடங்கிவிட்டன! எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து, FCEV எனப்படும் Fuel Cell Electric Vehicles, அடுத்த பேசுபொருளாக இருக்கும் எனத் தோன்றுகிறது. எனவே இதற்கான வரவேற்பு இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, தனது Nexo FCEV காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிக்கு வைத்திருக்கிறது ஹூண்டாய். ஒருவேளை இந்த மிட்சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவு இங்கே அறிமுகமானால், ஃப்யூல் செல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் காராக நெக்ஸோ இருக்கும்! கார் இயங்குவதற்குத் தேவையான ஹைட்ரஜன், 3 டேங்க்குகளாக உள்ளன (156.6 லிட்டர்கள்). இதை முழுமையாக நிரப்புவதற்கு, 5 நிமிடங்களே போதுமானது; WLTP-படி, இவை காரை 666கிமீ தூரம் இயக்கும் எனத் தெரிகிறது. நம் நாட்டில் டெல்லியில் மட்டுமே ஹைட்ரஜன் பங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. 161bhp பவர் மற்றும் 39.5kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட நெக்ஸோ, 0 - 100கிமீ வேகத்தை வெறும் 9.2 விநாடிகளிலேயே எட்டிவிடும்! Autonomous மற்றும் ரிமோட் பார்க்கிங் வசதிகள் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம்.

05 Feb 2020 11 AM

மஹிந்திரா ஈவென்ட் தொடங்கியது!

mStallion (G20 - TGDI) 2.0 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் - டர்போ பெட்ரோல் இன்ஜின்!

mStallion
mStallion

1,997சிசி, 4 சிலிண்டர்: 190bhp பவர், 38kgm டார்க்;

6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

மஹிந்திராவின் முற்றிலும் புதிய தார் (W501), XUV 5OO (W601), ஸ்கார்ப்பியோ (Z101) தவிர, ஃபோர்டு நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியிலும் இந்த இன்ஜின் பொருத்தப்படும்!

mStallion
mStallion

தான் புதிதாக அறிமுகப்படுத்திய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion (T-GDI) இன்ஜினுக்கு அருகிலேயே, புதிய 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion (T-GDI) இன்ஜின்களையும் காட்சிக்கு வைத்திருந்தது மஹிந்திரா. இதில் 1.2 லிட்டர் இன்ஜின் 130bhp பவர் மற்றும் 23kgm டார்க்கைத் தந்தால், 1.5 லிட்டர் இன்ஜின் 163bhp பவர் மற்றும் 28kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இவை எல்லாமே சிறிய Bore கொண்ட Long ஸ்ட்ரோக் இன்ஜின்கள் என்பதால், அளவில் இவை காம்பேக்ட்டாக இருக்கும். மேலும் டீசல் இன்ஜின்களில் இருக்கும் Low End Torque, பெட்ரோல் இன்ஜின்களுக்கே உரித்தான Refinement, சிறப்பான பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜைத் தரக்கூடிய T-GDi தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்த இன்ஜின்களைத் தயாரித்துள்ளது மஹிந்திரா. இவை லேட்டஸ்ட் என்பதால், BS-6 மற்றும் CAFE விதிகளுக்கேற்ப அவை செயல்படும்.

05 Feb 2020 10 AM

கியா சொனெட்

போட்டிமிகுந்த மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் செல்ட்டோஸ் வழியே நுழைந்து, கியா மோட்டார்ஸ் வெற்றிவாகை சூடியது தெரிந்ததே. தற்போது அதைவிட பரபரப்பான காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறங்குவதை உறுதிப்படுத்தும் விதமாக, சொனெட் (Sonet) எனும் கான்செப்ட்டை இந்த நிறுவனம் காட்சிபடுத்தியிருக்கிறது. QYi என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்டிருந்த இது, வென்யூவின் பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படும்.

Kia Sonet prices
Kia Sonet prices

இருப்பினும் தோற்றத்தில் முற்றிலும் வேறு மாதிரியான காராக சொனெட்டை மாற்றியுள்ளது கியா. இவர்களின் பிரத்யேகமான Tiger Nose கிரில், வழக்கமான பொசிஷனிங்கில் இருக்கும் ஹெட்லைட்ஸ் - பனி விளக்குகள் காம்போ, அகலமான ஏர் டேம் ஆகியவை இதனை உறுதிபடுத்துகின்றன. அலாய் வீல்கள், கதவு பில்லர்கள், வீல் ஆர்ச், ரூஃப், Shark Fin Antenna, மிரர்கள், பம்பர்கள் ஆகிய இடங்களில் டூயல் டோன் ஃபினிஷ் இடம்பெற்றிருப்பது அழகு. பின்பக்கத்தில் இருக்கும் LED டெயில் லைட்களை, LED பட்டை ஒன்றினைக்கிறது. C-பில்லரில் இருக்கக்கூடிய டிசைன் அம்சங்கள் ஸ்டைலாக உள்ளன. சொனெட்டில் வென்யூவைப் போலவே சிறப்பம்சங்கள், இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், விலை இருக்கலாம்.

ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான்
ஹூண்டாய் டூஸான்

நீண்ட காத்திருப்புக்கான தீர்வாக, டூஸான் ஃபேஸ்லிஃப்ட்டை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்டிவிட்டது ஹூண்டாய். எதிர்பார்த்தபடியே BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் இருப்பதுடன், காரின் தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிகிறது. GL Option, GLS எனும் இரு வேரியன்ட்களில் வரப்போகும் டூஸான் ஃபேஸ்லிஃப்ட்டில் பெரிய Cascading கிரில், புதிய பம்பர்கள் & அலாய் வீல்கள், LED ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ் ஆகியவை வெளிப்புற மாற்றங்கள்; புதிய டேஷ்போர்ட்டில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம் (BlueLink கனெக்ட்டிவிட்டி உண்டு), Free Standing முறையில் வீற்றிருக்கிறது. மேலும் புதிய ஏசி வென்ட்கள், மேம்படுத்தப்பட்ட சென்டர் கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங், பனரோமிக் சன்ரூஃப், 8 Way எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட் உடனான சீட் ஆகியவை கேபினை இன்னும் அழகாக்கியுள்ளன. 2.0 லிட்டர் BS-6 பெட்ரோல் இன்ஜின் 150bhp பவர்/19.2kgm டார்க் தந்தால், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 182bhp பவர்/40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருந்தால், டீசல் மாடலில் புதிய 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதெபோல, டாப் வேரியன்ட்டான GLS-ல் டீசல் AWD கிடைக்கும். ஜீப் காம்பஸ், ஹோண்டா CR-V ஆகிய கார்களுடன் போட்டிபோடுகிறது டூஸான் ஃபேஸ்லிஃப்ட்

05 Feb 2020 6 PM

Tata sierra electric SUV concept

Tata sierra electric suv concept
Tata sierra electric suv concept

தற்போதைய டாடா மோட்டார்ஸ், 1990-களில் TELCO என்ற பெயரில் இயங்கிவந்தது. அப்போது கமர்ஷியல் வாகனங்களுக்குப் பெயர்போன இந்த நிறுவனம், பாசஞ்சர் வாகனப் பிரிவில் இறங்கும் முடிவில் தீவிரமாக இருந்தது. அதற்கான முயற்சியாக வெளிவந்ததுதான் சியரா எஸ்யூவி! இது காலத்தைத் தாண்டிய படைப்பாக இருந்ததால் (அதன் டிசைனே சாட்சி), எதிர்பார்த்த வெற்றியை சியராவால் அப்போது ருசிக்க முடியவில்லை. இருப்பினும் கார் ஆர்வலர்களின் பலநாள் கனவுக்கான விடையாக, எலெக்ட்ரிக் அவதாரத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறது இந்த எஸ்யூவி! முந்தைய மாடலைப் போலவே 3 கதவுகள், பின்பக்க கண்ணாடிகள், இரண்டாவது வரிசை பெஞ்ச் சீட் ஆகியவற்றை இதிலும் பார்க்கமுடிகிறது. ஆனால் இடதுபுறத்தில் இருக்கும் கதவு, ஸ்லைடிங் பாணியில் இயங்குகிறது. மேலும் முன்பக்க பயணிகள் இருக்கையை, அப்படியே பின்பக்கம் திருப்பிக் கொள்ளமுடியும் என்பது ஹைடெக் ரகம்! அல்ட்ராஸ் போலவே ALFA பிளாட்ஃபார்மில் தயாராகப்போகும் சியரா எலெக்ட்ரிக் எஸ்யூவி, 4,150மிமீ நீளம் - 1,820மிமீ அகலம், 1,675மிமீ உயரம், 2,450மிமீ வீல்பேஸ் ஆகிய அளவுகளைக் கொண்டிருக்கிறது.

05 Feb 2020 12 PM

Renault Zoe EV

`வழக்கம் போல இந்த முறையும் SUV தான் கெத்து!' #AutoExpo2020 Day-1 ரிப்போர்ட்

வழக்கமான கார்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் சத்தமில்லாமலும் Zero Emission உடனும் இயங்கும். அதைப் போலவே, Zoe EV காரை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருக்கிறது ரெனோ. இதில் நம் நாட்டுக்கேற்றபடி மாற்றங்களை செய்வதற்கு ஏதுவாக, இந்த நிறுவனம் Zoe EV-யை டெஸ்ட் செய்து வருவது தெரிந்ததே. LED லைட்ஸ், பெரிய ரெனோ லோகோ என வெளிப்புறம் ஸ்மார்ட்டாகக் காட்சியளிக்கிறது. கேபினில் உள்ள 9.3 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், பலரது லைக்குகளைப் பெறலாம். இதற்கு மேட்சிங்காக டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உண்டு; 134bhp பவர் மற்றும் 24.5kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார் - 52kWh லித்தியம் ஐயன் பேட்டரி Pack கூட்டணியைக் கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் காரின் எடை 1.5 எடை! இருப்பினும் WLTP-படி, சிங்கிள் சார்ஜில் 395கிமீ தூரம் செல்லக்கூடிய திறனைக் கொண்டுள்ளது Zoe EV. 50kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், 70% பேட்டரி சார்ஜை வெறும் 55 நிமிடங்களில் செய்துவிடமுடியும்!

டாடா கிராவிடாஸ்

டாடா கிராவிடாஸ்
டாடா கிராவிடாஸ்

ஜெனிவா மோட்டார் ஷோ 2019-யைத் தொடர்ந்து, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் 7 சீட் ஹேரியரை எஸ்யூவியைக் காட்சிபடுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். கிராவிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இது, மூன்றாவது வரிசை இருக்கையைக் கொண்டிருக்கிறது. இதனால் ஹேரியரை விட கிராவிடாஸ் நீளமாகவும் உயரமாகவும் இருந்தாலும், இரண்டுக்குமே வீல்பேஸ் ஒன்றுதான். மற்றபடி நடுவரிசை இருக்கையை அப்படியே One Touch Flip & Fold செய்யமுடியும் என்பது ப்ளஸ். முன்பக்கத்திலிருந்து பார்த்தால், அப்படியே ஹேரியர் போலவே இருக்கிறது கிராவிடாஸ். பின்பக்கத்தில் டெயில் லைட், டெயில் கேட், பின்பக்க பம்பர் வித்தியாசமாக இருக்கிறது. மேலும் கேபினும் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கூட BS-6 ஹேரியரின் ஜெராக்ஸ்தான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதிலும் 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஆப்ஷனலாகக் கூட வழங்கப்படவில்லை.

05 Feb 2020 9 AM

டிரைபரில் 5 ஸ்பீடு மேனுவல் கூட, இப்போ AMT வந்தாச்சு!

'4 மீட்டருக்குட்பட்ட 7/8 சீட்டர்' என்ற வித்தியாசமான ஐடியாவில் உருவான ட்ரைபர், இதுவரை 28,000-க்கும் அதிகமான கார்கள் விற்பனையாகிவிட்டது! எனவே மக்கள் வரவேற்பைத் தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாக, AMT ஆப்ஷனை அதில் சேர்த்துவிட்டது ரெனோ; டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த மாடலில், சில வித்தியாசங்களைப் பார்க்கமுடிகிறது. ரூஃப் ரெயில், பம்பர்கள் ஆகியவை நீல நிறத்தில் உள்ளன. மேலும் கேபினிலும் நீல நிற வேலைப்பாடுகள் தொடர்கின்றன. இதில் வேறு தோற்றத்தில் அலாய் வீல்கள் மற்றும் சில்வர் நிறத்தில் ரூஃப் - மிரர்கள் இருந்ததுடன், கூடுதலாக Shark Fin Antenna இடம்பெற்றிருந்தது. இதில் 72bhp பவரைத் தரும் 1.0 லிட்டர் BS-6 பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் மீட்டர், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் என வசதிகள் அப்படியே தொடர்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலைவிட 50,000 ரூபாய் அதிக விலையில் AMT வெர்ஷன் இந்த ஆண்டில் வரலாம்.

05 Feb 2020 8 AM

ரெனோ K-ZE

ரெனோ K-ZE
ரெனோ K-ZE

தனது க்விட் காரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் K-ZE காரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிபடுத்தியுள்ளது ரெனோ. CMF-A பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் இந்த எலெக்ட்ரிக் கார், பின்னாளில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் எனத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட க்விட் ஃபேஸ்லிஃப்ட் போலவே K-ZE காட்சியளிக்கிறது. இதன் கிரில் வித்தியாசமாக இருப்பதுடன், கூடுதலாக TPMS வசதி சேர்ந்திருக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் டயர் பதிக்கப்போகும் இந்த எலெக்ட்ரிக் காரில் இருப்பது, 44bhp பவர் மற்றும் 12.5kgm டார்க்கைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டார் - 26.8kWh லித்தியம் ஐயன் பேட்டரி Pack. சீனாவில் இதே டெக்னிக்கல் விபரங்களுடன்தான் இந்த கார் கிடைக்கிறது. சிங்கிள் சார்ஜில் 271கிமீ தூரம் செல்லக்கூடிய K-ZE (NEDC-படி, 4 மணிநேரத்திலேயே ஃபுல் சார்ஜ் ஆகிவிடும்! ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு.

The Futuro-e!

Maruti Suzuki Starts Things With E-SUV Coupe Concept, The Futuro-e!

இந்தியாவில் நீண்ட நாள்களாகவே எஸ்யூவிகள் ட்ரெண்டிங்கில் இருப்பது தெரிந்ததே. எனவே அதனை மீண்டும் உரக்கச் சொல்லும் வகையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ம், மாருதி சுஸூகியின் எஸ்யூவி கூபே கான்செப்ட்டின் அறிமுகத்துடனேயே தொடங்கியது! Futuro-e எனப் பெயரிடப்பட்டுள்ள இதை Design Study என அந்த நிறுவனம் கூறினாலும், போட்டிமிகுந்த மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில் மாருதி சுஸூகி நுழையவிருப்பது இதனால் உறுதியாகியுள்ளது. ‘an Indian car with global sensibilities' எனும் சொல்லுக்கேற்ப, மாருதி சுஸூகியின் மற்ற எந்த தயாரிப்புகளைப் போலவும் இல்லாமல் புதுமையான டிசைனில் ஈர்க்கிறது Futuro-e. தடிமனான C-பில்லர், சரிவடையும் ரூஃப், ஸ்லிம்மான கண்ணாடிகள், அகலமான முன்பக்கம், ஷார்ப்பான பின்பக்கம் அதற்கான உதாரணம். பெயருக்கேற்றபடியே இதில் எலெக்ட்ரிக் செட்-அப் தவிர ஹைபிரிட், டீசல் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.

03 Feb 2020 9 PM

யார் உள்ளே? யார் வெளியே?

முன்பு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போக்களில், தங்கள் அரங்குகளை அமைப்பதற்கான தொகை மிகவும் அதிகமாக இருந்ததால், பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதில் பங்கேற்காமல் விலகியிருந்தன. ஆனால் இப்போது சூழல் ரொம்பவே மாறிவிட்டது! குறைந்துவரும் வாகன விற்பனை, BS-6 விதிகளுக்கேற்ப வாகனங்களை மேம்படுத்துதல், எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அது சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவது எனப் பல்வேறு சிக்கல்களை இந்திய ஆட்டோமொபைல் துறை ஒருசேர சந்தித்து வருகிறது.

Great Wall Motors
Great Wall Motors

நிலைமை இவ்வாறாக இருந்தாலும், இம்முறை சீனாவைச் சேர்ந்த Great Wall Motors மற்றும் FAW குழுமம் ஆகியோர், நம் நாட்டில் முதன்முறையாகத் தமது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த முடிவெடுத்திருக்கிறது (கடந்த முறை கொரியாவின் `கியா மோட்டார்ஸ்' கலக்கி எடுத்தது ஞாபகம் இருக்குல!). எனவே, யாரெல்லாம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் உள்ளே/வெளியே என்பதை இனி பார்ப்போம்.

டூ-வீலர்கள் - உள்ளே:

சுஸூகி மோட்டார்சைக்கிள்ஸ், பியாஜியோ Group (ஏப்ரிலியா, வெஸ்பா), Moto Guzzi, Okinawa Scooters, Segway, Devot Motors E-Bike, Eeve Electric Scooters, Hero Electric,.... அவ்ளோதான் பாஸ்! இப்படி பிரபலமான டூ-வீலர் நிறுவனங்களே வராததால், எதிர்பார்த்தபடியே புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை அலங்கரிக்க உள்ளார்கள்.

டூ-வீலர்கள் - வெளியே:

ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீல்டு, டிவிஎஸ், ஜாவா/மஹிந்திரா, ஏத்தர் எனர்ஜி, கவாஸாகி, யமஹா, ஹோண்டா, பிஎம்டபிள்யூ Motorrad, ட்ரையம்ப், ஹார்லி டேவிட்சன், டுகாட்டி. Motoroyale Group.

கார்கள் - வெளியே:

பிஎம்டபிள்யூ, ஹோண்டா, ஆடி, ஜாகுவார், லேண்ட்ரோவர், வால்வோ, லெக்ஸஸ், Peugeot - Citroen, ஃபோர்டு, FCA Group (ஜீப், ஃபியட்), டொயோட்டா, நிஸான், டட்ஸன்

கார்கள் - உள்ளே:

Great Wall Motors, FAW Group, மெர்சிடீஸ் பென்ஸ், மாருதி சுஸூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனோ, கியா மோட்டார்ஸ், MG Motors, ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா, ஃபோர்ஸ் மோட்டார்ஸ்.

03 Feb 2020 9 PM

XUV500 அடுத்த வெர்ஷன்... ஆட்டோ எக்ஸ்போவில் வருகிறது மஹிந்திரா ஃபன்ஸ்டர் கான்செப்ட் எஸ்யூவி!

 இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய கார்களில் ஒன்று மஹிந்திராவின் ஃபன்ஸ்டர் கான்செப்ட். இதன் டீசர் வீடியோவை மஹிந்திரா நிறுவனம் தனது வலைதளங்களில் வெளியிட்டுள்ளது

03 Feb 2020 3 PM

ஆட்டோ எக்ஸ்போ 2020!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போ' (Auto Expo) கடந்த 2016, 2018–ம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும், கிரேட்டர் நொய்டாவில் (Greater Noida) இருக்கும் India Expo Mart-ல் நடைபெற உள்ளது. இந்த 15–வது ஆட்டோ ஷோவில் BS-6 விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்ட வாகனங்களும், எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிக அளவில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

ஆட்டோ எக்ஸ்போ
ஆட்டோ எக்ஸ்போ

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகமாகப் போகும் கார், பைக், ஸ்கூட்டர்கள் அல்லாது கான்செப்ட் வாகனங்களும் ஆட்டோமொபைல் ஆர்வலர்களைக் கவரும். இந்த ஆட்டோ எக்ஸ்போவில் என்னனென்ன கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அறிமுகம் ஆகின்றன என்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்!