Published:Updated:

டிரைவிங் லைசென்ஸ் எல்எல்ஆர், ரின்யூவல்… ஆன்லைனில் நடப்பதால் லஞ்சம் குறைஞ்சிடுச்சு! ஆனால்..?

RTO Office

"இப்படியே போனால் இது தனியார்மயமாகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் ஆர்டிஓ எனும் அலுவலகத்துக்கே வேலை இல்லாமல் ஆகும் சூழ்நிலை வந்தாலும் வரும்!" என்கிறார் ஒரு போக்குவரத்து சமூக ஆர்வலர்.

டிரைவிங் லைசென்ஸ் எல்எல்ஆர், ரின்யூவல்… ஆன்லைனில் நடப்பதால் லஞ்சம் குறைஞ்சிடுச்சு! ஆனால்..?

"இப்படியே போனால் இது தனியார்மயமாகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் ஆர்டிஓ எனும் அலுவலகத்துக்கே வேலை இல்லாமல் ஆகும் சூழ்நிலை வந்தாலும் வரும்!" என்கிறார் ஒரு போக்குவரத்து சமூக ஆர்வலர்.

Published:Updated:
RTO Office

பெர்சனலாக ஒரு விஷயம். நமது வாசகர் ஒருவர் 'இந்தியன்’ தாத்தா கமல் மாதிரி ரொம்ப நேர்மையானவர். ரொம்ப நாளைக்கு முன்பு தனது மனைவிக்கு லைசென்ஸ் எடுப்பதற்காக, டிரைவிங் ஸ்கூலை நாடாமல், நேரடியாக ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்று LLR பதிவு செய்யச் சென்றிருக்கிறார். அலுவலக செக்யூரிட்டியில் ஆரம்பித்து, ஃபைல் நகர்த்தும் ப்யூன் முதற்கொண்டு, பச்சை மை அதிகாரிகள் வரை ஆளாளுக்குப் பணம் கேட்க... 'இன்னும் எத்தனை பேர்தாண்டா கேட்பீங்க’ என்று 'சிவாஜி’ ரஜினி மாதிரி நொந்துபோனவர், கடுப்பாகி லைசென்ஸே வேண்டாமென்று மனைவியைத் திரும்ப அழைத்து வந்திருக்கிறார்.

ஆனால், இப்போது அவரிடமிருந்து அழைப்பு. "வெறும் 200 ரூபாயில என் மனைவிக்கு LLR அப்ளை பண்ணிட்டேன் சார்" என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். நிஜம்தான்! இவரைப்போல் ஆன்லைனில் சுமார் 17,495 பேர் எல்எல்ஆர் அப்ளை செய்திருக்கிறார்கள். இது போன ஏப்ரல் 12–ம் தேதியிலிருந்து இந்த மாதம் 5–ம் தேதி வரையான புள்ளிவிவரம். இதுவே ரின்யூவலுக்கு 621 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். முகவரி மாற்றத்துக்காக அப்ளை செய்தவர்களின் எண்ணிக்கை 319 பேர்.
RTO Office
RTO Office

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இது நல்ல விஷயம்தானே’ என்பதெல்லாம் உண்மை. ஆனால், நிஜத்தில் கடுப்பில் இருப்பவர்கள், சில ஆர்டிஓ மற்றும் சப்ரிஜிஸ்டர் ஊழியர்கள்தான். சென்னையில் உள்ள ஒரு ஆர்டிஓ அலுவலகத்துக்கு நைஸாக ஒரு விசிட் அடித்ததில் ஒரு ஊழியர் இப்படிப் புலம்பியே விட்டார். "எங்க சார்… இதை வெச்சு மாசத்துக்கு ஒரு அமெளன்ட் பார்த்துக்கிட்டிருந்தோம். அதுக்கும் வழியில்லாமப் போச்சு!" என்றார் ஒருவர். ஆண்டுக்கணக்காக போக்குவரத்து மற்றும் சப்ரிஜிஸ்டார் அலுவலகங்கள்தான் லஞ்சத்தின் ஊற்றிடமாக இருந்து வந்தது. அடிக்கடி ரெய்டு நடந்தாலும், மக்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சிலர் சிக்குவது தொடரத்தான் செய்தது.

அதிகாரிகள் என்றில்லை; ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சம்பந்தமில்லாத சிலரும் இதில் பணம் பார்க்கிறார்கள் என்பதும் கொடுமை. டிரைவிங் ஸ்கூல் உதவி இல்லாமல், முதன்முதலில் தனியாகப் போய் லைசென்ஸ் எடுப்பவர்கள் கொஞ்சம் பதற்றமாகவே இருப்பார்கள்தானே! ‘எக்ஸாம் நடக்கும்; அதில் பாஸானால்தான் லைசென்ஸ்’ என்று ஒரு பரீட்சை பயத்திலேயே இருப்பார்கள்! ஆனால், அதில் கேட்கப்படும் கேள்விகள் – ‘சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தால் போகணுமா… நிற்கணுமா’ என்பது மாதிரிதான் இருக்கும். அந்தக் கேள்விகளையெல்லாம் அப்ளை செய்ய வருபவர்களிடம் லீக்–அவுட் செய்தும் சிலர் சம்பாதிக்கிறார்கள் என்பதெல்லாம் உச்சபட்சம். லைசென்ஸ் என்று மட்டுமில்லை; ரின்யூவல் – முகவரி மாற்றம் எல்லாவற்றுக்குமே யார் யாருக்கோ ஒரு தொகை அழ வேண்டும்.

இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை. எல்லாமே Contactless ஆக ஆன்லைனிலேயே அப்ளை செய்து கொள்வதால்… பணம் பார்க்கிறவர்கள் சோகமாகவே இருக்கிறார்கள்.
Parivahan Site
Parivahan Site

https://parivahan.gov.in/parivahan/ எனும் வலைதளத்துக்குப் போனால்… எல்எல்ஆர், ரின்யூவல், முகவரி மாற்றம் என்று எல்லாவற்றுக்குமே ஆப்ஷன்கள் இருக்கின்றன. உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வருவதைத் தொடர்ந்து, நீங்கள் ஆன்லைனிலேயே பரீட்சை எழுதி 60 மார்க் எடுத்தால்… 90 நாள்களுக்குள் ஆர்டிஓ அலுவலகம் போய் நேரடியாக உங்கள் லைசென்ஸைக் கையெழுத்துப் போட்டு வாங்கி வரலாம். அதிகபட்சமாக 100 ரூபாயிலிருந்து ஹெவி வெஹிக்கிள் லைசென்ஸ் வரை 1,000 ரூபாய்க்குள்ளாகவே வேலை சுளுவாக முடிந்து விடுகிறது.

ஆனால், இந்த கான்டேக்ட்லெஸ் சர்வீஸில் சில சமூக ஆர்வலர்களும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. "இது சிக்கலைத்தான் ஏற்படுத்தப் போகிறது. இப்படியே போனால் இது தனியார்மயமாகவும் வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் ஆர்டிஓ எனும் அலுவலகத்துக்கே வேலை இல்லாமல் ஆகும் சூழ்நிலை வந்தாலும் வரும்! லஞ்சத்தைத் தடுக்க வேண்டுமென்றால், அதற்கான முயற்சிகளை மட்டும் எடுக்கலாமே! இது ஆபத்துதான்!" என்கிறார் ஒரு போக்குவரத்து சமூக ஆர்வலர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism