Published:Updated:

நடிகர் மகேஷ்பாபுவின் புதிய எலெக்ட்ரிக் கார்: அதன் விலை, சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

மகேஷ்பாபு புதிய காருடன்

இந்தியாவில் அதிஉயர்ந்த சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரை கிரிக்கெட்டர் விராட் கோலி இதே மாடலில் கார் ஒன்றை வைத்துள்ளார்.

நடிகர் மகேஷ்பாபுவின் புதிய எலெக்ட்ரிக் கார்: அதன் விலை, சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

இந்தியாவில் அதிஉயர்ந்த சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரை கிரிக்கெட்டர் விராட் கோலி இதே மாடலில் கார் ஒன்றை வைத்துள்ளார்.

Published:Updated:
மகேஷ்பாபு புதிய காருடன்

ஹீரோக்களுக்கும் கார்களுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எப்போதும் டாப் கியரில் தான் இருக்கும். இதற்கு நம்ம ஊர் நடிகர் விஜயில் தொடங்கி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு வரை விதிவிலக்கல்ல. ஏற்கனவே விலை உயர்ந்த கார்களாக அணிவகுத்து நிற்கும் மகேஷ் பாபுவின் கேரேஜில் புதிதாக இணைய இருப்பது கொஞ்சம் வித்தியாசமான கார். ஆடி ஈ-ட்ரான் எலக்ட்ரிக் SUV தான் அந்த கார். இந்தியாவில் அதிஉயர்ந்த சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.19 கோடி. இந்த காரில் என்னென்ன சிறப்பம்சங்கள் என பார்ப்போம்!

ஆடி E- Tron மூன்று ட்ரிம்களில் கிடைக்கிறது. 50, 55 மற்றும் 55 ஸ்போர்ட்டிபேக். மகேஷ் பாபு வாங்கியிருப்பது டாப் மாடல். 95kwh சக்தி கொண்ட இதன் பேட்டரி 402 hp அளவிற்கு ஆற்றலை வழங்குகிறது. இந்த கார் 0-ல் இருந்து 100 kmph வேகத்தை அடைய 5.7 நொடிகள் போதுமானது.

எட்டு airbags, ஒளிரக்கூடிய சீட் பெல்ட், முன் புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார், 360 டிகிரி அளவுக்கு பார்க்க கூடியது என இதன் வசதிகள் நீண்டு கொண்டே செல்லும்.

காரின் உட்புற தோற்றம்
காரின் உட்புற தோற்றம்

Head up display, 12 இன்ச் ஆடி விர்ஸுவல் காக்பிட், 16 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 3டி சரன்டவுடட் சவுண்ட், panoramic glass sunroof மற்றும் Audi Connect app வசதிகள் கொண்ட இந்த கார் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் Benz EQC, Jaguar I pace மற்றும் BMW ix எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது.

இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள், all-wheel-drive layout என அசத்தும் இந்த காருக்கு 50 kw சார்ஜரில் சார்ஜ் போட்டால் 2 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் ஏறிவிடும். 11kw AC சார்ஜர் என்றால் 8.5 மணிநேரம் சார்ஜ் ஏற்ற வேண்டி இருக்கும். ஒரு முறை சார்ஜ் போட்டால் நீங்கள் சென்னையில் இருந்து மதுரைக்கோ அல்லது கோயம்புத்தூருக்கோ சென்று விட முடியும். இதன் ரேஞ்ச் 484 கிமீ வரை என ஆடி தரப்பில் சொல்லப்படுகிறது. சாலைக்கு ஏற்றாற் மாதிரி காரின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதன் Matrix Headlight கிட்டதட்ட ஒரு கி.மீ. வரை வெளிச்சம் பாய்ச்ச கூடியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரிக்கெட்டர் விராட் கோலி இதே மாடலில் கார் ஒன்றை வைத்துள்ளார். இதனை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மகேஷ் பாபு, “தூய்மையான பசுமையான நீடித்த எதிர்காலத்தை இந்த உலகிற்கு கொண்டு வருவதற்காக" Audi Experience என்கிற ஹேஷ்டாக் உடன் சமூக வலைத்தள பக்கதில் காரோடு நிற்கும் படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

Matrix Headlight
Matrix Headlight

கார் பிரியரான மகேஷ் பாபுவிடம் ஏற்கனவே Mercedes-Benz GLS 350d, BMW 7-Series sedan, Mercedes-Benz GL Class, Land Rover Range Rover Vogue and a Toyota Land Cruiser உள்ளிட்ட உயர்ரக கார்கள் உள்ளன.

இப்போது அதிகரித்து வரும் எலக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் இன்னும் பலரையும் இதன் பக்கம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism