Published:Updated:

XUV500 அடுத்த வெர்ஷன்... ஆட்டோ எக்ஸ்போவில் வருகிறது மஹிந்திரா ஃபன்ஸ்டர் கான்செப்ட் எஸ்யூவி!

மஹிந்திரா ஃபன்ஸ்டர் (Funster)
மஹிந்திரா ஃபன்ஸ்டர் (Funster)

ஆட்டோ எக்ஸ்போவல் மஹிந்திரா காட்சிப்படுத்தப்போகும் கார்களில் ஒன்றான ஃபன்ஸ்டர் கான்செப்ட் மாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாள்களில் கார்காலம் ஆரம்பிக்கப்போகிறது. 2020 ஆட்டோ எக்ஸ்போவைதான் கார்காலம் என்கிறோம். பைக் நிறுவனங்கள் இந்த எக்ஸ்போவில் அதிகளவில் கலந்துகொள்ளவில்லை என்பதால் 80 சதவிகிதம் கார்களும், எலெக்டரிக் வாகனங்களும்தான் இருக்கப்போகின்றன.

இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய கார்களில் ஒன்று மஹிந்திராவின் ஃபன்ஸ்டர் கான்செப்ட்.

அடுத்த தலைமுறை XUV500 காரை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவிதான் இந்த ஃபன்ஸ்டர் கான்செப்ட். இதன் டீசர் வீடியோவை மஹிந்திரா நிறுவனம் தனது வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த XUV300 போலவே தட்டையான முன்பக்க டிசைனோடு இருக்கிறது ஃபன்ஸ்டர். கட்டுமஸ்தான முன்பக்க பம்பர், பக்கவாட்டில் நேரான, தடிமனான ஷோல்டர் லைன், கீழே இறங்குவதைப் போல இருக்கும் டெயில் லைட் இவை எல்லாமே இது XUV500 என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

XUV500 இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஃபன்ஸ்டர் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்ட கார் விற்பனைக்கு வருவதற்கு நிச்சயம் 2 ஆண்டுகள் ஆகும். 5 சீட் மற்றும் 7 சீட் மாடல்களில் இது விற்பனைக்கு வரலாம். இந்த ஃபன்ஸ்டர் மாடலோடு மஹிந்திரா நிறைய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை காட்சிப்படுத்தப்போவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் கார் மட்டுமில்லை, புது ஸ்கார்ப்பியோவும் இங்கே காட்சிக்கு வைக்கப்படலாம்.

அடுத்த கட்டுரைக்கு