62.7 லட்ச ரூபாய்க்கு வந்திருக்கும் மெர்சிடீஸ் பென்ஸ் CLC Coupe பேஸ்லிஃப்ட்டில் என்ன ஸ்பெஷல்?

புதிய டயமண்ட் Pattern கிரில் மற்றும் அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் என GLC Coupe ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் தெரிகின்றன.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் AMG GT 63 S 4-Door Coupe, V-Class Marco Polo Camper Van ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, 2020-ம் ஆண்டை மெர்சிடீஸ் பென்ஸ் அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக, GLC Coupe-வின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது.

இதுவரை, ஒரே AMG GLC43 4MATIC வேரியன்ட்டில் மட்டுமே இதை நம் நாட்டில் வாங்க முடியும் என்ற சூழல் நிலவினாலும், GLC 300 பெட்ரோல் (62.70 லட்ச ரூபாய்) - GLC 300d (63.70 லட்ச ரூபாய்) எனும் இரு வேரியன்ட்களில் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்துள்ளது (விலைகள் அனைத்தும் இந்திய எக்ஸ்-ஷோரூம்). இது, மெர்சிடீஸ் பென்ஸின் தொழிற்சாலையிலேயே அசெம்பிள் செய்யப்படுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். BMW X4, போர்ஷே Macan-க்குப் போட்டியாக வந்திருக்கும் GLC Coupe ஃபேஸ்லிஃப்ட்டில் என்னென்ன ஸ்பெஷல்?

புதிய டயமண்ட் Pattern கிரில் மற்றும் அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள், LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் என GLC Coupe ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் தெரிகின்றன. கேபினில் MBUX உடனான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் மீட்டர், `Hey Mercedes’ வாய்ஸ் கமாண்ட், பெரிய Central டச்பேடு, மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்சரி எனப் புதிய வசதிகள் எட்டிப்பார்க்கின்றன. GLC 300 மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 258bhp பவர் - 37kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இதுவே GLC 300d மாடல் என்றால், அதிலிருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 245bhp பவர் - 50kgm டார்க்கைத் தருகிறது. இந்த 4 சிலிண்டர் BS-6 இன்ஜின்கள், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4MATIC சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 0 - 100கிமீ வேகத்தை GLC 300 மாடல் 6.3 விநாடிகளிலும், GLC 300d மாடல் 6.6 விநாடிகளிலும் எட்டிப்பிடிக்கின்றன.