Published:Updated:

கார்களில் கிருமிகளை ஒழிக்க புதிய முறை! -மலேசியாவில் இருந்து வருகிறது செராஃபியூஷன் தொழில்நுட்பம்

கார் கிருமிநாசினி
கார் கிருமிநாசினி

மெடிக்லின் எனும் நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை காரில் பயன்படுத்தப்போகிறார்கள்.

எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் காரின் கேபினில் இருக்கும் நோய்க் கிருமிகளை ஒழிக்க மலேசியாவைச் சேர்ந்த மெட்கின் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதை செராஃபியூஷன் தொழில்நுட்பம் என்கிறார்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை எல்லாம் காற்றில் அதிகப்படியாக இருக்கும் பாசிட்டிவ் அயன் மூலமாகவே சுவாசிக்கும். செராஃபியூஷன் தொழில்நுட்பம் என்பது நெகட்டிவ் ஆக்ஸிஜன் அணுக்களை வெளியிட்டு, காற்றை ஸ்டெர்லைஸ் செய்து, ஓசோன் வாயுவை வெளியிட்டு காற்றைச் சுத்தப்படுத்தும் முறை. இதற்கு இந்த நிறுவனம் காப்புரிமை வாங்கியுள்ளது.

எம்ஜி ஹெக்டர்
எம்ஜி ஹெக்டர்

இந்தத் தொழில்நுட்பத்தைத் தற்போது, தன் கார்களுக்கு கொண்டுவரும் முடிவில் இருக்கிறது MG மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். இதற்கான மெட்க்லின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது எம்ஜி. இனி வரப்போகும் ஹெக்டர் மற்றும் ZS EV மாடல்களில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது இந்நிறுவனம். இதை ஹீட்டர், வென்ட்டிலேட்டர் மற்றும் ஏசி சிஸ்டத்தின் மூலமாகவே செயல்படுத்த வைப்பதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுவருகிறார்கள்.

எம்ஜி மோட்டார்ஸ் சமீபத்தில்தான் Disinfectant and deliver என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. தற்போது காத்திருப்பில் இருக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த லாக் டெளன் முடிந்ததும் உடனடியாக கார்களை கிருமிநாசினி கொண்டு சரியான முறையில் சுத்தப்படுத்தி டெலிவரி செய்வதே இதன் குறிக்கோள். இதற்காக எம்ஜி டீலர்ஷிப்பில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளது. சர்வீஸ் சென்டரை எப்படி நோய்த்தொற்று இல்லாமல் வைத்துக்கொள்வது என்பது பற்றியும் தற்போது டீலர்களுக்கு அறிவுரை கொடுத்து வருகிறது இந்த நிறுவனம்.

அடுத்த கட்டுரைக்கு