Election bannerElection banner
Published:Updated:

1000 கோடி முதலீடு... எம்ஜி கார் நிறுவனத்தின் பிளான் என்ன?!

Morris Garages Factory
Morris Garages Factory

2,500 பேர் பணிபுரியும் குஜராத்தில் உள்ள தனது ஹலோல் கார் தொழிற்சாலையில், ஆண்டுக்கு 75,000 முதல் 80,000 கார்கள் வரை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது எம்ஜி. இப்போது கூடுதலாக 1,000 கோடி வரை முதலீடு செய்து, உற்பத்தி எண்ணிக்கையைப் பெருக்கும் யோசனையில் இருக்கிறது.

சீனாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான SAIC-ன் குழும நிறுவனமாகச் செயல்பட்டு வரும் எம்ஜி – முதலில் இந்தியாவுக்குள் நுழைந்தபோது, ‘சைனா புராடக்ட்டா… இந்தியாவுல எடுபடுமானு தெரியலையே’ என்று வழக்கம்போல் கிண்டல் கமென்ட்டுகள்தான் அதிகம் வந்தன. அதிலும் சீன ஆப்களை இந்தியாவில் தடை செய்ததற்குப் பிறகு, கியா, எம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு ஆபத்து அதிகமாகி விடுமோ என்றுதான் கணித்திருந்தார்கள். ஆனால், ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் இப்போது மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டர் ஆகிவிட்டது எம்ஜி. Morris Garages எனும் பெயர் கொண்ட எம்ஜி, 1924-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரிட்டன் நிறுவனம். அடிப்படையில் UK ஆக இருந்தாலும், நடப்பில் சீன நிறுவனமான SAICதான் எம்ஜியின் பேரன்ட் கம்பெனி. இந்தியாவில் முதன் முதலில் இன்டர்நெட் காரான ஹெக்டரைக் கொண்டு வந்து ஒரு ட்ரெண்ட் செய்துவிட்டது எம்ஜி. அதற்குப் பிறகுதான், மற்ற கார்களில் கனெக்ட்டட் வசதி வர ஆரம்பித்தது.

MG Cars
MG Cars

எம்ஜியில் இருந்து இப்போது ஹெக்டர், ஹெக்டர் ப்ளஸ் (6 சீட்டர், 7 சீட்டர்), கிளாஸ்டர், இதுபோக ZS EV எனும் எலெக்ட்ரிக் எஸ்யூவி என்று நான்கே நான்கு கார்கள்தான் விற்பனையில் இருக்கின்றன. நான்குமே எஸ்யூவிகள்தான். இப்போது புதிதாய் எம்ஜியில் இருந்து ஒரு மிட் சைஸ் எஸ்யூவியோ அல்லது ஒரு காம்பேக்ட் எஸ்யூவியோ இந்த ஆண்டு வரவிருக்கிறது. 2,500 பேர் பணிபுரியும் குஜராத்தில் உள்ள தனது ஹலோல் கார் தொழிற்சாலையில், ஆண்டுக்கு 75,000 முதல் 80,000 கார்கள் வரை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது எம்ஜி. இப்போது கூடுதலாக 1,000 கோடி வரை முதலீடு செய்து, உற்பத்தி எண்ணிக்கையைப் பெருக்கும் யோசனையில் இருக்கிறது.

‘‘ஹலோல் தொழிற்சாலை கார் உற்பத்திக்காக ஏற்கெனவே 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறோம். இப்போது மேலும் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளோம். இதனால், ஓர் ஆண்டுக்கு ஹலோல் தொழிற்சாலையில் இருந்து 1 லட்சம் கார்கள் வரை உற்பத்தி செய்யப்படும். இது உற்பத்திக்கு மட்டுமில்லை; சில உதிரிபாகங்களை லோக்கலைஸ் செய்யவும்தான்’’ என்கிறார் எம்ஜி இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா.

ஒரு கார், விற்பனையில் வெற்றி பெறுவதற்கு லோக்கலைஸேஷன்தான் மிகவும் முக்கியம். அதாவது, பாகங்களை முடிந்தளவு இறக்குமதி செய்து CBU (Completely Build Unit) முறையில் தயாரிக்காமல், CKD (Completely Knocked Down) முறையில் ஒரு கார் தயாரிக்கப்பட்டால், ஏகப்பட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, ஒரு காரின் விலை கணிசமாகக் குறையும். இன்டர்நெட் கார்களான எம்ஜி கார்களின் ஸ்பெஷலே, அதன் எலெக்ட்ரானிக் யூனிட்தான். முக்கியமாக எலெக்ட்ரானிக் பாகங்களை லோக்கலைஸ் செய்வதால், இனி எம்ஜி கார்களின் விலையும் குறையும் வாய்ப்பும் உண்டு.

MG Hector 2021
MG Hector 2021
chinaface

ஏற்கெனவே ஹெக்டரின் ஃபேஸ்லிஃப்ட்டான 7 சீட்டர் வெர்ஷனை, 13.34 லட்சம் எனும் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது எம்ஜி. 2021 மாடல் ஹெக்டரின் ஆரம்ப விலை 12.89 லட்சம்தான் இருக்கும். இதில் 60–க்கும் மேற்பட்ட கனெக்ட்டட் வசதிகள், 25–க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் என்று கலக்க இருக்கிறது 2021 ஹெக்டர். இந்தியா மட்டுமில்லை; நேபாளம், பூட்டான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற Right Hand Drive மார்க்கெட் நாடுகளையும் ஒரு கை பார்க்க இருக்கிறதாம் எம்ஜி.

கார் விலை குறையுறதை விடுங்க; இந்த 1000 கோடி ரூபாய் முதலீட்டால், ஹலோல் தொழிற்சாலை மற்றும் குர்காவுனில் உள்ள எம்ஜியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக 1,000 பேருக்கு வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது என்பதுதான் நல்ல செய்தி.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு