Published:Updated:

மோட்டார் கிளினிக்

3 Point Seat Belt
பிரீமியம் ஸ்டோரி
3 Point Seat Belt

கேள்வி-பதில்

மோட்டார் கிளினிக்

கேள்வி-பதில்

Published:Updated:
3 Point Seat Belt
பிரீமியம் ஸ்டோரி
3 Point Seat Belt
3 Point Seat Belt
3 Point Seat Belt

என் குழந்தையோடு சேர்த்து, 5 பேர் கொண்ட அழகான குடும்பம் என்னுடையது. கார் வாங்கலாம் என்றிருக்கிறேன். நான் இதுவரை பார்க்கும் கார்கள் எல்லாமே, பின் பக்கம் 2 பாயின்ட் சீட் பெல்ட் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. எனக்குப் பாதுகாப்புதான் மிக முக்கியம். 3 பாயின்ட் சீட் பெல்ட் கொண்ட கார்களை எனக்கு ரெக்கமண்ட் செய்யுங்களேன்! அப்படி இல்லையென்றால், ஆஃப்டர் மார்க்கெட்டில் இதை ஃபிட் செய்து கொள்ளலாமா?

- வருணன், சென்னை.

உங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புஉணர்வுக்கு ஒரு சல்யூட். குழப்பம் வரக்கூடாது என்பதால், 3 பாயின்ட் சீட் பெல்ட் எப்படி இருக்கும் என்பதை இந்தச் சந்தப்பத்தில் சொல்லியாக வேண்டும். உதாரணத்துக்கு, 3 பாயின்ட்களில்… அதாவது இரண்டு மவுன்ட்டிங் பாயின்ட்கள் கதவுப் பகுதியில் இருக்கும். இன்னொரு பாயின்ட்… நீங்கள் மேனுவலாக பகிள் செய்யும் பாயின்ட். இதைத்தான் 3 பாயின்ட் என்கிறோம். நமது நெஞ்சுப் பகுதி, இடுப்புப் பகுதி, தோள்பட்டை – இந்த மூன்றையும் காப்பதுதான் 3 பாயின்ட் சீட் பெல்ட்டின் முக்கிய அம்சம்.

கார்களில் பின் சீட்டில் நடுப்பயணிக்கு இருப்பதுதான் சாதாரண சீட் பெல்ட். இது நடுப்பயணியின் இடுப்பை மட்டும்தான் லாக் செய்யும். கதவுகளுக்குப் பக்கத்தில் அமரும் பயணிகளுக்குத்தான் 3 பாயின்ட் சீட் பெல்ட் கொடுக்க முடியும். நடுப்பயணிக்கு விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்குக் கொடுப்படுவதைப் போல 2 பாயின்ட் சீல்ட் பெல்ட்தான் கொடுக்க முடியும்.

ஆஃப்டர் மார்க்கெட்டில் 3 பாயின்ட் சீட் பெல்ட் போடுவது சாத்தியமில்லாத ஒன்று. வேண்டுமானால், நடுப்பக்கப் பயணிக்கு ஹெட்ரெஸ்ட் இருப்பதுபோல் நீங்கள் கார்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது மோதலின்போது, நம் தலை பின்னால் போகாமல் பார்த்துக் கொள்ளும்.

யமஹா FZ25
யமஹா FZ25

எனக்கு 200சிசி பைக் வாங்க வேண்டும் என்கிற ஐடியா உள்ளது. இது வரை ஸ்கூட்டர்களையே ஓட்டி போர் அடித்து விட்டது. லெட்ஸ், டிவிஎஸ் ஜெஸ்ட், என்டார்க் – இவைதான் நான் ஓட்டிய ஸ்கூட்டர்கள். பைக்குக்கு மாற இருக்கிறேன். எனது உயரம் 5.5 அடி, என் வயது 38. எனக்கு நேக்கட் பைக்குகள் மீது ஒரு கண் உண்டு. பஜாஜின் NS200, யமஹா FZ25 - இல்லையென்றால் Xபல்ஸ் 200 – இவை மூன்றும் ஐடியாவில் இருக்கின்றன. சரியான தேர்வைச் சொல்லுங்கள்!

– சரவணராஜ், ராணிப்பேட்டை.

யமஹா பைக்குகள் எப்போதுமே இன்ஜின் ரிஃபைன்மென்ட்டுக்குப் பெயர் பெற்றவை. ஓட்டுவதற்கும் வசதியாக இருக்கும். பில்டு குவாலிட்டியிலும் பஜாஜை விட யமஹா எப்போதுமே ஒரு படி மேல்தான். இந்த 20.8bhp கொண்ட இன்ஜின், சிட்டியில் ஓட்டுவதற்கு யமஹா FZ25 அற்புதமான ஆப்ஷன். 250 சிசிக்கு இந்த பவர் கொஞ்சம் குறைவுதான் என்பது ரைடர்களின் கருத்து. நீங்கள் ஸ்டைல் விரும்பி என்றால், இதிலுள்ள மோட்டோ ஜிபி எடிஷனைத் தேர்ந்தெடுங்கள். புளூ மற்றும் கறுப்பு நிறத்தில் தெறி காட்டுகிறது இதன் ரோடு பிரசன்ஸ். ஆனால், இதில் இருப்பது 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். விலையும் எப்போதுமே பஜாஜைவிட அதிகமாகவே இருக்கும். அண்மையில் பல ஆயிரங்கள் விலைக் குறைப்பு செய்திருப்பதால், பஜாஜின் NS200-க்கு நெருக்கமாகவே இருக்கிறது யமஹா.

NS200, ஓட்டுவதற்கு செம ஜாலியாக இருக்கிறது. இதில் யமஹாவைவிட 1 கியர் அதிகம். பவரும் 3bhp அதிகம். 23.8bhp. லாங் ரைடிங்கில் உங்களுக்கு ஆர்வம் என்றால், இந்த பல்ஸர் NS200 சூப்பராக இருக்கும். இந்த செக்மென்ட்டின் மற்ற பைக்குகள் ஆயில் கூல்டிலோ, ஏர்கூல்டிலோ இருக்க –இதில் இருப்பது லிக்விட் கூல்டு இன்ஜின். அதனால், இன்ஜின் பெர்ஃபாமன்ஸ் பற்றிக் கவலையே வேண்டாம்.

எக்ஸ்பல்ஸ் 200 - நேக்கட் பிரியர்களைத் தாண்டி, அட்வென்ச்சர் பிரியர்களுக்கான பைக். இன்ஜினைப் பொருத்தவரை அதே 199 சிசிதான் என்றாலும், பவர் கொஞ்சம் குறைவுதான். ஆனால், இதிலுள்ள சிங்கிள் சேனல் ஏபிஎஸ், ஹை புரொஃபைல் டயர்களும், அதிகமான கி.கிளியரன்ஸும் ஆஃப்ரோடு செய்வதற்கு ஏற்றவை. கொஞ்சம் தனித்துவத்துடன் இருக்க வேண்டுமென்றால், யோசிக்காமல் எக்ஸ்பல்ஸைத் தேர்ந்தெடுத்து விடுங்கள்.

200 சிசி செக்மென்ட்டில் அப்பாச்சியைத் தவிர்த்துவிட முடியாது. எதற்கும் அப்பாச்சியையும் ஒரு டெஸ்ட் ரைடு பார்த்து விடுங்களேன்!

ஸ்க்ராப்பேஜ் பாலிஸி
ஸ்க்ராப்பேஜ் பாலிஸி

நான் ஒரு பழைய ஹோண்டா சிட்டி வைத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு FC முடியப் போகிறது. 2022-ல் ஸ்க்ராப்பேஜ் பாலிஸி வரப்போவதால், என் காரை நான் ஸ்க்ராப்பில்தான் போட வேண்டுமா? இந்த நேரத்தில் பழைய கார் வாங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்கிறார்களே… இது உண்மையா?

– முகில்வண்ணன், திருச்சி.

ஸ்க்ராப்பேஜ் பாலிஸியைப் பற்றிப் பலருக்கும் பலவிதமான கேள்விகள் இருக்கின்றன. 2022–ல் இருந்து இது அமலுக்கு வருவதாகவும் சொல்கிறார்கள். இது 15 ஆண்டுகள் பழசான அரசாங்க வாகனங்களுக்கு மட்டும்தான். 2023–ம் ஆண்டுக்குப் பிறகு, ஹெவி கமர்ஷியல் வாகனங்களுக்கானது. ஓன் போர்டு கார் உரிமையாளர்களுக்கு 2024–ல்தான் இந்தச் சட்டம் வருகிறது. இதை ஒரு Volunteering Policy–யாகத்தான் அறிமுகப்படுத்தியுள்ளது அரசு. அதாவது, நீங்கள் விரும்பினால் மட்டும்தான் உங்கள் காரை ஸ்க்ராப்பில் போடலாம். ஆனால், ‘என் பழைய காரைத்தான் நான் ரோட்டில் ஓட்டுவேன்’ என்றால், நீங்கள் எக்ஸ்ட்ராவாகப் பல வரிகள் கட்ட வேண்டும்.

6,000 ரூபாய் வரை மறுபதிவுக் கட்டணம், FC தாமதமாகப் பண்ணினால் அதற்கு ஓர் அபராதக் கட்டணம், 25% எக்ஸ்ட்ரா சாலை வரி, சாலையைப் புகை மயமாக்குவதற்காகப் பசுமை வரி என்று பல வரிகள் உண்டு. அரசுக்குச் சொந்தமான Automated Fitness Center–களில் நடக்கும் இந்த ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் உங்கள் கார் பாஸ் ஆக வேண்டும். இதில் தோல்வியுறும் வாகனங்கள் ஆட்டோமேட்டிக்காக De-Register ஆகிவிடும். இந்தச் சமயத்தில் 1 கோடி கார்கள் டெஸ்ட்டுக்குக் காத்திருக்கும். ‘இந்த டெஸ்ட்டுக்குக் காத்திருந்து, எக்ஸ்ட்ரா வரி கட்டி, பாஸ் ஆவதற்குப் பதிலா நான் புது காரே வாங்கிடுவேன்’ என்று உங்களைச் சலிப்படைய வைத்து புது கார் வாங்க வைப்பதுதான் அரசாங்கத்தின் திட்டம் என்பதையும் நினைவில் கொள்க! அப்படி நீங்களாக முன் வந்து உங்கள் காரை ஸ்க்ராப்பில் போடும் பட்சத்தில், புது கார் வாங்கும்போது 4 – 6% வரை உங்களுக்குத் தள்ளுபடியும் உண்டு.

எனவே, நீங்கள் உங்கள் காரை வைத்திருப்பது உங்கள் இஷ்டம். அதேபோல், பழைய கார்கள் வாங்குவதிலும் பயம் தேவையில்லை. யூஸ்டு கார் மார்க்கெட் இப்போதும் களை கட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், டெஸ்ட்டுக்குத் தயாரா இருங்க! இதில் வின்டேஜ் கார் உரிமையாளர்கள் பயப்படத் தேவையில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அவர்களுக்கும் டேக்ஸ் இருக்கு பாஸ்!

Nissan Magnite
Nissan Magnite

காம்பேக்ட் எஸ்யூவிகளின் மேல் எனக்கு ஒரு பிரியம். எனது பழைய ஸ்விஃப்ட்டைக் கொடுத்துவிட்டு, ஒரு 4மீட்டர் எஸ்யூவி வாங்கலாம் என்றிருக்கிறேன். பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட், வென்யூ, சோனெட், நெக்ஸான் என்று பல கார்களை டெஸ்ட் டிரைவ் செய்தேன். இதில் நிஸான் மேக்னைட் எனக்குப் பிடித்திருக்கிறது. விலையும் நன்றாக இருக்கிறது. மேக்னைட் வாங்கலாம் என்றிருக்கிறேன். என் முடிவு சரியா? மேக்னைட்டின் ப்ளஸ்/மைனஸ் என்ன? Nissan Magnite Care Plan என்று ஷோரூமில் சொல்கிறார்கள். அந்தத் திட்டம் பற்றியும் விளக்குங்கள்.

– கிருஷ்ணகுமார், திருப்பூர்.

லாஞ்ச் ஆன கொஞ்ச மாதங்களிலேயே 50,000 புக்கிங்குகள் வந்துவிட்டன மேக்னைட்டுக்கு. முதலில் மேக்னைட்டின் ப்ளஸ் மைனஸ் பார்க்கலாம். க்ராஸ்ஓவர் அல்லது எஸ்யூவி டிசைன், மேக்னைட்டுக்குப் பெரிய பலம். லம்போகினி URUS காரில் இருப்பதைப் போன்று ஏசி வென்ட்களெல்லாம் வைத்து இன்டீரியரை ப்ரீமியம் ஆக்கியிருக்கிறார்கள். 2,500 மிமீ வீல்பேஸ் என்பதால், 5 பேருக்கான இடவசதி தாராளமாகவே இருக்கிறது. அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், ஆர்ம்ரெஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி வசதிகள், ரியர் ஏசி வென்ட், பிரெஸ்ஸாவைவிட அதிகமான பூட் ஸ்பேஸ்(334லிட்டர்), இந்த செக்மென்ட்டில் அதிகமான 10 லிட்டர் கொண்ட க்ளோவ் பாக்ஸ், Hill Start Assist, Anti Roll Bar, எஸ்யூவிக்குத் தேவையான 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என எக்கச்சக்க ப்ளஸ்கள் உண்டு.

மைனஸ்கள் என்றால், இதன் க்ளட்ச் ஹெவியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் சிட்டிக்குள் கார் ஓட்டும் டிரைவர்கள். ஆனால், இதன் டர்போ இன்ஜின் ஹைவேஸில் பக்காவாக இருக்கும். டீசல் இன்ஜின் இல்லை என்பதும் மேக்னைட்டில் மைனஸ். CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் வென்யூ போல் பேடில் ஷிஃப்ட்டர்கள் இல்லை என்பதும் குறை. சன்ரூஃப், பின் பக்கம் டிஸ்க் போன்றவற்றையும் மேக்னைட்டில் எதிர்பார்க்க முடியாது.

மேக்னைட் புக் செய்யும்போதே – Gold, Silver என இரண்டு ப்ளான்களோடு ஆன்ரோடு விலையைச் சொல்கிறார்கள். இது Annual Service Maintenance Package. 5 ஆண்டுகளுக்கு 17,000 ரூபாய் செலுத்தி விடுவீர்கள். இதில் ஆயில் சர்வீஸ் – ஏர்ஃபில்டர், ஆயில் ஃபில்ட்டர் போன்ற சமாச்சாரங்கள் லேபர் சார்ஜோடு இலவசம். Silver ப்ளானில் 10,000 ரூபாய் கட்டணம். இதில் லேபர் சார்ஜ் தனி. பேஸ் வேரியன்ட் ஆன்ரோடு விலை 6.55 லட்சத்தில் இருந்து டாப் மாடல் 10.15 லட்சம் வரை மேனுவல்/ஆட்டோமேட்டிக், டர்போ/NA இன்ஜினில் கிடைக்கிறது மேக்னைட்.

மேலும் மேக்னைட்டுக்கு 5 ஆண்டுகள் வாரன்ட்டியும் கொடுக்கிறார்கள். கூடவே, மாருதி போல கார் லீஸிங் ப்ளானும் உண்டு. இது இனிஷியல் தொகை இல்லாமல், தவணை மட்டும் செலுத்தி கார் வாங்கும் திட்டம். இதில் தவணை, பெட்ரோல் தவிர நமக்குச் செலவே இருக்காது. இதுவும் ஓர் அற்புதமான திட்டம்.