பிரீமியம் ஸ்டோரி

மைலேஜ் மன்னன்

ட்ரக், பஸ் மற்றும் கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்தச் சூழ்நிலையில் மஹிந்திராவின் ட்ரக் அண்ட் பஸ் பிரிவு, பண்டிகை மைண்ட் செட்டில் இருக்கிறது. மஹிந்திராவின் ப்ளாஸோ அறிமுகமாகி மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால் இந்த செக்மென்ட்டில் அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனம் எனும் பெருமிதத்தில் இருப்பதுதான் காரணம்.

மோட்டார் நியூஸ்

`‘பேலோடு விஷயத்திலும் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த செக்மென்ட்டில் இதுதான் டாப் என்பதால், ப்ரீமியம் விலை என்பதையும் மீறி இது வாடிக்கையாளர்களுக்கு லாபத்தைக் கொடுக்கும்’’ என்று ஆதாரத்தோடு சொல்கிறார்கள் மஹிந்திராவின் உயர் அதிகாரிகளான ராஜன் வதேராவும், வினோத் சஹாயும். 12 டன் மற்றும் 14 டன் செக்மென்ட்டில் மஹிந்திரா அறிமுகப் படுத்திய ஃப்யூரியோ நான்காம் இடத்தை பிடித்திருப்பதும், மஹிந்திராவின் கொண்டாட்டத்துக்குக் காரணம்.

இது புது 3 சீரிஸ்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 3 சீரிஸ் மாடலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது பிஎம்டபிள்யூ. இந்த 7-ம் தலைமுறை 3 சீரிஸில், புதிய எடை குறைவான மற்றும் வலுவான CLAR ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் அடிப்படையான தோற்றத்தில் மாற்றம் இல்லை என்றாலும், பாடி லைன்கள் ஷார்ப்பாக மாறிவிட்டன. முன் பக்கம் பெரிய கிரில் மற்றும் DRL இணையும் படியாக டிசைன் செய்துள்ளார்கள்.

மோட்டார் நியூஸ்

இன்டீரியர்கள், பிஎம்டபிள்யூ X5 மற்றும் X7 கார்களை ஞாபகப்படுத்துகின்றன. கேபின் ஸ்பேஸில் பெரிய மாற்றமில்லை என்றாலும், முன்பைவிட பிராக்டிக்கலாக இருக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் 258bhp பவரும், டீசல் இன்ஜின் 190bhp பவரும் கொடுக்கிறது. இரண்டுமே 2 லிட்டர், 40kgm டார்க்.

8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் மட்டுமே. அசிஸ்டன்ட் வசதியுடன் கூடிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டென்ட்டும் புதுவரவு. மூன்று வேரியன்ட்டுகளில் C-க்ளாஸுக்குப் போட்டியாக வரும் இது, ரூ.51.49 லட்சத்தில் இருந்து ரூ.59.29 லட்சம் வரை விற்பனையாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லோரையும் இணைக்கும் SAE க்ளப்!

வாகன வடிவமைப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களுக்கு இடையே அறிவுப் பரிமாற்றங்களுக்கான களமாகச் செயல்பட்டு வருகிறது SAE INDIA எனப்படும் Society of Automotive Engineers அமைப்பு. Automotive, Aerospace, Commercial வாகனங்கள் பற்றிய அனுபவ ரீதியான கல்வியும் அறிவுரைகளும் நிபுணர்களால் தொடர் செமினார்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்குவது, இந்த க்ளப்பின் முக்கிய செயல்பாடுகளுள் ஒன்று. தமிழகத்தில் கணிசமான கல்லூரிகளில் இந்த க்ளப் செயல்பட்டு வந்தாலும், தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இப்போது அதிகமாக இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

மோட்டார் நியூஸ்

அப்படி சமீபத்தில் இணைந்ததுதான் நாகர்கோவிலில் உள்ள பல்கலைக்கழகத் தொழில்நுட்பக் கல்லூரி. ரோட்டரி க்ளப் ஆஃப் நாகர்கோவில் ராயல்ஸ் குழுமம் கல்லூரியுடன் இணைந்து, இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். சூப்பர் பைக் க்ளப்பினரும் தங்கள் பைக்குகளுடன் வந்திருந்தனர். Mahindra & Mahindra Ltd சென்னைப் பிரிவின் Senior Lead Engineer ஹரிஹரசுதன் சிறப்பு விருந்தினராக வந்து SAE கிளப்பைத் தொடங்கி வைத்துள்ளார். புது ஆரம்பம்... மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

- கி.நிவேதிகா (மாணவப் பத்திரிகையாளர்)

மோட்டார் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு