Published:Updated:

பைக் ஆர்வலர்களுக்கான முழுமையான வொர்க்ஷாப்! எப்படி விண்ணப்பிப்பது? | Career in Motorsports

How to build racing machine?
How to build racing machine?

ரேஸிங் மட்டும் இல்லாமல், சாதாரணமாகவே ஒரு பைக்கை சுற்றி என்னென்ன கேரியர் வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றியும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

பைக் ரேசிங் போட்டிகளில் நொடிகளில் பல மீட்டர்களை 'வ்வ்வ்ரூரூம்ம்ம்' எனக் கடந்து செல்லும் பைக்குகளையும் ரேஸர்களையும் பார்க்கும் போது, நாமும் இது போல ரேஸர் ஆக வேண்டும் என்று எல்லோருக்குமே வாழ்வில் ஒரு முறையாவது தோன்றி இருக்கும். ஆனால், அதனைக் கொஞ்ச நேரத்திலேயே மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருப்போம். ஏனெனில், பைக் ரேஸிங்கில் நுழைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும், எங்கே கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த விபரமும் தெரியாமல் அந்த பல பேர் அந்த நினைப்பைக் கடந்து சென்றிருப்பார்கள்.

Racing Pi Crew
Racing Pi Crew
உங்களுக்கும் பைக் ரேஸிங்கில் ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதற்கான முயற்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியவில்லையா? அப்போ உங்களுக்குத்தான் இந்தச் செய்தி. மோட்டார் விகடன் மற்றும் சிஆர்ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்தும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வொர்க்ஷாப்.
2 Days Online Motorsports Workshop
2 Days Online Motorsports Workshop

'இந்த கொரோனா காலத்துல வெளிய எல்லாம் போக முடியாதே, லாக்டௌன் வேற இருக்கே' எனக் கவலைப்பட வேண்டும். இந்த வொர்க்ஷாப் முழுவதுமாக ஆன்லைனிலேயே நடைபெற இருக்கிறது. வரும் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்த வொர்க்ஷாப் நடைபெறும். சரி, பைக் ரேஸிங்கில் ஆர்வம் இருப்பவர்கள் மட்டும் தான் இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொள்ள வேண்டுமா என்றால், இல்லவே இல்லை. பைக்கின் மீது ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொள்ளலாம். பள்ளி மாணவரோ, கல்லூரி மாணவரோ, வேலைக்குச் செல்பவரோ, பைக்குகளின் மீது ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த வொர்க்ஷாப்பில் கலந்து கொள்ளலாம்.

என்னென்னவெல்லாம் இந்த வொர்க்ஷாப்பில் கற்றுக் கொள்ளலாம் என்ற கேள்வி உங்களுக்கு வரும். நாம் தினமும் நிறைய பைக்குகளை சாலையில் பார்ப்போம், அவற்றைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். பைக்கின் அடிப்பைட டிசைன், எந்த வகையான பைக்கை எப்படி டிசைன் செய்வார்கள். என்ன தேவைக்கு எப்படி டிசைன் செய்வார்கள் என்பது முதல் பைக் ரேஸிங்கில் கலந்து கொள்ளும் பைக்கை எப்படி தயார் செய்வார்கள், பைக் ரேஸிங்கை கேரியராக தேர்தெடுத்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது வரை அனைத்து தகவல்களையும் இந்த இரண்டு நாள் வொர்க்ஷாப்பில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். ரேஸிங் மட்டும் இல்லாமல், சாதாரணமாகவே ஒரு பைக்கை சுற்றி என்னென்ன கரியர் வாய்ப்புகள் இருக்கின்றன என்பது பற்றியும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

Racing Team
Racing Team

இந்த இரண்டு நாள் வொர்க்ஷாப்பில் சிஆர்ஏ மோட்டார் ஸ்போர்ட்ஸில் ட்ரெய்னரான தருண் குமார் உங்களுடன் கலந்துரையாட இருக்கிறார். இவர் இதற்கு முன் ஏகப்பட்ட ரேஸர்களை சிஆர்ஏ மூலம் உருவாக்கியிருக்கிறார். மேலும், சில மாதங்களுக்கு முன்புதான் கோவை கரி மோட்டார் ஸ்பீடுவே ரேஸ் ட்ராக்கை அதிவேகமாகக் கடந்து புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார் தருண்.

வொர்க்ஷாப்பில் கலந்துகொள்ள முன்பதிவு செய்வது அவசியம். ஜூன் 26 மற்றும் 27 காலை 8.00 முதல் 10.00 மணி வரை இந்த வொர்க்ஷாப் நடைபெறும்.

Motorsports workshop
Motorsports workshop

Motor Vikatan & CRA Motorsports Jointly present...

How to Build a Racing Machine?

2 Days Online Motorsports Workshop for these who are passionate about motorbikes. (In English)

Date: June 26th & 27th Time: 08.00 am - 10.00 am

Fee: Rs. 500/-

To register, visit: http://bit.ly/MV_CRA_Racing

For queries, call: 7338826999, 9790990404

அடுத்த கட்டுரைக்கு