காலம் கடந்து விடவில்லை. சென்ற வாரம் நடைபெற்ற அமர்வுகளின் காணோலிக்காட்சிகளை முழுமையாக பார்த்துவிட்டு, அதோடு சம்மந்தப்பட்ட Feedback படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப நீங்கள் தயார் என்றால் இன்னும்கூட நீங்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு கண்டேஷன். இனி வரும் அமர்வுகள் அனைத்திலும் தவறாது பங்குபெறுவதுடன் ஒவ்வொரு பயிலரங்கத்தின் இறுதியிலும் கொடுக்கப்படும் Feedback படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பினால்... இதற்கான சான்றிதழும் உங்களுக்குக் கிடைக்கும்.

சரி, இந்தப் பயிலரங்கம் யாருக்கு? இதில் என்னவெல்லாம் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றன...?
நீங்கள் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆர்வம் உடையவரா? ஆட்டோமோட்டிவ் அல்லது மெக்கானிக்கல் துறை சம்பந்தமான பொறியியல் படிப்பைப் படிப்பவரா? அப்போ உங்களுக்காகத்தான் இந்தப் பயிலரங்கு. ஆட்டோமோட்டிவ் துறை சார்ந்து பல படிப்புகள் இருக்கின்றன. அவற்றில் பல ஆயிரம் மாணவர்களும் வருடா வருடம் பயின்று பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அப்படி ஆட்டோமொபைல் அல்லது ஆட்டோமோட்டிவ் சம்பந்தமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் தியரியாக நல்ல அறிவுடன் இருந்தாலும், ப்ராக்டிகலாகப் பார்க்கும்போது அந்தத் துறை சார்ந்த அனுபவம் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் கல்லூரி மாணவர்களுக்கும் கார்-பைக்-டிரக்-டிராக்டர் கம்பெனிகளுக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம்.
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
நான்கு வருடங்கள் பொறியியல் படிக்கும் ஒரு மாணவர் எத்தனை முறை ஒரு தொழிற்சாலையை நேரில் சென்று பார்த்திருப்பார் எனத் தெரியாது. துறை சார்ந்த நிபுணர்களுடனான கலந்துரையாடும் வாய்ப்பு என்பதும் இன்றைய கல்விச்சூழலில் ஒரு கல்லூரி மாணவருக்கு அரிதுதான். இப்படிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்துறை, துறை நிபுணர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டும், துறை சார்ந்த களநிலவரம் குறித்து மாணவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் பொருட்டும் Automotive Design & Development என்ற பயிலரங்கை மஹிந்திராவின் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருக்கிறது.

எளிய ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த இணையவழிப் பயிலரங்கு 14 தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது. மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களுடன் கலந்துரையாடுகிறார்கள். 500 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்பவர்களுக்கு மோட்டார் விகடன் ஆங்கில மின் இதழின் ஒரு வருட சந்தா அளிக்கப்படும்.
பயிலரங்கு நடைபெறும் தேதிகள்: அக்டோபர் 22, 23, 24, 29, 30, 31, நவம்பர் 6, 7
பயிலரங்கு நடைபெறும் நேரம்: மதியம் 2 மணி முதல் 4 மணி வரை
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.