100 மாணவர்களின் கனவை நனவாக்கிய மோட்டார் விகடன்! மஹிந்திரா `R&D' விசிட்! | Motor Vikatan
ஆட்டோமொபைல் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களில் 100 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை மஹிந்திராவின் R&D (Research & Development) மையத்திற்கே அழைத்துச் சென்று பார்வையிட வைத்தது மோட்டார் விகடன்.
பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்து வேலைக்குச் சென்று சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஓர் ஆசை இருக்கும். ஆனால் அதில் சில மாணவர்களுக்கு மட்டும்தான் 'அந்தக் கார் எப்படித் தயாராகிறது, அதன் பின்னணியில் நடக்கும் வேலைப்பாடுகள் என்ன?', 'அதை நானே தயாரிக்க வேண்டும்' என்ற ஆர்வம் இருக்கும். அப்படி ஆட்டோ மொபைல் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்க எண்ணியது மோட்டார் விகடன். அதற்காக மோட்டார் விகடன் மற்றும் மஹிந்திரா இணைந்து முன்னெடுத்த திட்டம்தான் இந்த 'MRV Students Visit'.
இதன் மூலம் ஆட்டோமொபைல் மீது ஆர்வம் கொண்ட மாணவர்களில் 100 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களை மஹிந்திராவின் R&D (Research & Development) மையத்திற்கே அழைத்துச் சென்று பார்வையிட வைத்தது மோட்டார் விகடன். பொதுவாக எந்த ஒரு கார் நிறுவனமும் தங்கள் R&D மையத்தை எளிதில் பார்வையிட அனுமதிப்பதில்லை. ஏனெனில் அங்குதான் சுமார் அடுத்த 5 வருடங்களில் வெளியாக இருக்கும் கார்கள் தயாராகிக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் கார்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் மாணவர்கள் கற்றலைக் கருத்தில் கொண்டு மஹிந்திரா தங்கள் R&D மையத்தை பார்வையிட அனுமதி வழங்கியது. மேலும் அந்ததந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தாங்களே முன்வந்து அங்குள்ள தொழில்நுட்பங்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடினார்கள். மாணவர்கள் நேரில் பார்த்த இந்த 'MRV Students Visit'-டை நீங்கள் மேலுள்ள காணொலி மூலம் காணலாம்.