நீங்கள் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆர்வம் உடையவரா? ஆட்டோமோட்டிவ் அல்லது மெக்கானிக்கல் துறை சம்பந்தமான பொறியியல் படிப்பைப் படிப்பவரா? அப்போ உங்களுக்காகத்தான் இந்தப் பயிலரங்கு. ஆட்டோமோட்டிவ் துறை சார்ந்து பல படிப்புகள் இருக்கின்றன. அவற்றில் பல ஆயிரம் மாணவர்களும் வருடா வருடம் பயின்று பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அப்படி ஆட்டோமொபைல் அல்லது ஆட்டோமோட்டிவ் சம்பந்தமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் தியரியாக நல்ல அறிவுடன் இருந்தாலும், ப்ராடிகலாகப் பார்க்கும்போது அந்தத் துறை சார்ந்த அனுபவம் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் கல்லூரி மாணவர்களுக்கும் கார்-பைக்-டிரக்-டிராக்டர் கம்பெனிகளுக்கும் இருக்கும் இடைவெளிதான் காரணம்.

நான்கு வருடங்கள் பொறியியல் படிக்கும் ஒரு மாணவர் எத்தனை முறை ஒரு தொழிற்சாலையை நேரில் சென்று பார்த்திருப்பார் எனத் தெரியாது. துறை சார்ந்த நிபுணர்களுடனான கலந்துரையாடும் வாய்ப்பு என்பதும் இன்றைய கல்விச்சூழலில் ஒரு கல்லூரி மாணவருக்கு அரிது தான். இப்படிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்துறை, துறை நிபுணர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் பொருட்டும், துறை சார்ந்த களநிலவரம் குறித்து மாணவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் பொருட்டும் Automotive Design & Development என்ற பயிலரங்கை மஹிந்திராவின் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருக்கிறது
எளிய ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த இணையவழிப் பயிலரங்கு 14 தலைப்புகளின் கீழ் 8 நாள்கள் நடைபெறவிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த 20 நிபுணர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டி, அவர்களுடன் கலந்துரையாட இருக்கிறார்கள். 500 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த பயிலரங்கில் என்ன கற்றுக் கொள்ளலாம்?
ஒரு வாகனத்திற்கான அடிப்படையான யோசனையில் தொடங்கி, அதன் உள்கட்டமைப்பு, வெளிக்கட்டமைப்பு, வாகனத்தின் டிசைன் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, வாகனத்தின் தரம், இன்ஜின் மேம்பாடு மற்றும் ஒரு வாகனம் உருவாகி அதன் கையாளுமை வரை ஒரு வாகனம் உருவாவதற்கான A to Z தகவல்களை துறை நிபுணர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து வழங்கவிருக்கிறார்கள். என்னென்ன தலைப்புகளில் உரையாடப்படும் என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Product Development Overview- Structured way to Develop an Inspirational Product
Tough Yet Sophisticated Development of a Vehicle BIW & Suspension System
Creative Process behind Automotive Interior & Exterior Design
Engineering analysis and vehicle development (NVH And Crash)
Future Mobility & SCI-FI Technology
Vehicle Architecture & Advanced Engineering
Program Management in Automotive Industry & Role of the Program Manager
Impact of Perceived Quality in Vehicle design
Workshop on Powertrain Design & Development
Automotive Product Development through Platform, People, and Process
Fundamentals of Vehicle Ride & Handling and Validation
மஹிந்திரா XUV 700-ன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய, மஹிந்திரா நிறுனத்தின் Global Products Development துறையின் தலைமையான வேலுச்சாமி அவர்களுடன் உரையாடும் வாய்ப்பும் இந்தப் பயிலரங்கில் உங்களுக்குக் கிடைக்கும். அவரைத் தொடர்ந்து மஹிந்திரா வாகனங்களைத் தயாரிப்பதில் முக்கிய பங்காற்றும் பல துறை நிபுணர்களும் பேசவிருக்கிறார்கள்.
யாரெல்லாம் கலந்து கொள்ளலாம், எப்படிக் கலந்து கொள்வது?
கல்லூரி மாணவர்கள், பணிபுரிபவர்கள், ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருக்கும் அனைவரும் கலந்துகொள்ளலாம். கலந்து கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பயிலரங்கு நடைபெறும் தேதிகள்: அக்டோபர் 22, 23, 24, 29, 30, 31, நவம்பர் 6, 7
பயிலரங்கு நடைபெறும் நேரம்: மதியம் 2 மணி முதல் 4 மணி வரை
முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
மொத்தம் 8 நாள்கள் எளிய ஆங்கிலத்தில் இணைய வாயிலாக நடைபெறவிருக்கிறது. கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ் அளிக்கப்படும். அதோடு, பயிலரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு 500 ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய ஒரு வருடத்திற்கான மோட்டார் விகடன் ஆங்கில மின்னிதழுக்கான சந்தாவும் வழங்கப்படும். பயிலரங்கில் சந்திப்போம்.