அன்புள்ள பெற்றோர்களுக்கு…
நீங்கள் உங்கள் குழந்தைகளின் ஹோம் ஒர்க் நோட்டுகள், ப்ரோக்ரஸ் நோட்டுகளைத் திறந்து பார்த்திருப்பீர்கள். ஆனால், என்றைக்காவது உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைத் திறந்து பார்த்திருக்கிறீர்களா? அதில்தான் அவர்களின் உலகம் தெரியும்; அதில்தான் அவர்களின் எதிர்காலம் புரியும்.
‘என்னடா இப்படிக் கிறுக்கி வெச்சுருக்கே’ என்று அவர்களைத் திட்டாமல், அந்தக் கிறுக்கல்களைப் புரிந்து கொண்டாலே – அவர்களின் கனவை நீங்கள் அழகாகக் கணித்து விடலாம். அப்படி உங்கள் பிள்ளைகளின் ரஃப் நோட்களில் கார்களோ/பைக்குகளோ கிறுக்கல்களாகத் தெரிந்தால்… உங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டிய இடம் மோட்டார் விகடன் நடத்தும் இந்த ஒர்க்ஷாப்புக்குத்தான்.
ஆம்! உங்கள் குழந்தைகளின் கார்/பைக் கனவை நிறைவேற்றப் போகிறது மோட்டார் விகடன். வெறும் கார் வாங்கும் கனவை அல்ல; ஒரு காரை டிசைன் செய்து அதற்கு உயிர் கொடுக்கும் கனவையே நிறைவேற்றக் காத்திருக்கிறது. ஆம், டிசைன் துறைக்குள் உங்கள் குழந்தைகள் நுழைய பல நுணுக்கங்களை, வழிமுறைகளைக் கற்றுத் தரவிருக்கிறது. காரணம், கார்/பைக் டிசைன் பற்றிய அடிப்படை, கலைச்சொற்கள், படிநிலைகள், அதற்கான படிப்புகள், கல்லூரிகள், பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள நிறுவனங்கள்... என எல்லா தரவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஓர் அற்புதமான வாய்ப்பை உருவாக்க இருக்கிறது.

ஆயா அகாடமி எனும் டிசைன் அகாடமியுடன் இணைந்து மோட்டார் விகடன் இந்த கார் டிசைன் ஒர்க்ஷாப்பை நடத்த இருக்கிறது.
ஒரு காரை பேப்பரில் நுணுக்கமாக, அழகாக வரைவதில் ஆரம்பித்து, அந்தக் காருக்கு உயிர் கொடுத்து அதை சாலையில் உண்மையாக ஓட வைப்பது வரை… ஒரு காரை உருவாக்க தொழிற்சாலையில் என்ன ப்ராசஸ் நடக்கிறது என்பதைப் படிப்படியாகச் சொல்லும் ஒர்க்ஷாப் இது. இதை மாணவர்களுக்கு அவர்கள் மொழியில், கலகலப்பாக, குட்டிக் குட்டிக் கதைகளுடன், குட்டிக் குட்டி உதாரணங்களுடன் போர் அடிக்காமல் நடத்த இருப்பவர், ஆயா அகாடமி நிறுவனர் சத்தியசீலன்.
இவர், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைனிங் பிரிவின் தலைவர். நீங்கள் சாலையில் பார்க்கும் பேருந்துகள், ட்ரக்குகள், பல கார்கள், ஆட்டோக்கள் என்று ஏகப்பட்ட வாகனங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கும் ‘எந்திரன்’ வசீகரன் இவர். ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் என்று பல நிறுவனங்களி வாகனங்கள், இவரின் கைவண்ணத்தில் உருவானவையே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘இந்த அப்பாச்சி பைக் பார்க்கிறதுக்கு சுறா மீன் மாதிரியே இருக்குல்ல!’ என்று உங்களைவிட உங்கள் குழந்தைகள் மிகச் சரியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். நிஜம்தான்; ஒரு சுறா மீனை இன்ஸ்பிரேஷனாக எடுத்துத்தான் அப்பாச்சி ஆர்ஆர் பைக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படிப் பல சுவாரஸ்யங்களைச் சொல்லித் தரவிருக்கிறார் சத்தியசீலன். IIT, IISC மற்றும் NID எனப்படும் National Institute of Design போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர்.

இந்த மோட்டார் விகடன் ஒர்க்ஷாப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர், பல கார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்பது ஸ்பெஷல். கைக்கு வந்ததை எல்லாம் வரைந்து கொண்டிருந்த மாணவர் ஒருவர், இப்போது சீனாவில் எம்ஜி கார் நிறுவனத்தில், ஸ்டைஃபண்ட் தொகையுடன் இன்டர்ன்ஷிப் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் என்பது உங்களுக்கு நிச்சயம் ஊக்கம் தரும். இன்னொருவர், ஆடி டிசைன் டீமுடன் பணிபுரிந்து விட்டு வந்திருக்கிறார். மற்றும் பல மாணவர்கள் வெளிநாடுகளில் டிசைன் துறையில் படித்து வருகிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதாவது, இது வெறும் பயிலரங்கம் மட்டுமில்லை; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்ககூடியது. இது வரும் 28 – 29 தேதிகளில், சென்னையில் இருக்கும் விகடன் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இது பற்றிய விவரங்களுக்கு… https://bit.ly/37Yk3fi
ஓவியர், டிசைனர், ஆட்டோமொபைல் தொழில்நுட்ப வல்லுநர் என எல்லா ஏரியாக்களிலும் உங்கள் குழந்தைகளுக்கான எதிர்காலக் கதவு இங்கே திறக்கக் காத்திருக்கிறது.
DATE: மே 28 & 29 (சனி & ஞாயிறு)
TIME: காலை 09.00 - மாலை 06.00 மணி வரை
Registration Fee (பதிவு கட்டணம்): Rs. 2500/-
இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்/Register Here: