Published:Updated:

கார் டிசைனர் ஆகவேண்டுமா? - 5 நாள் ஆன்லைன் வொர்க்‌ஷாப்!

ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு
ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு

மோட்டார் விகடனின் `ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு!' டிசைன் பயிற்சிப் பட்டறை மீண்டும் வந்துவிட்டது. இம்முறை 5 நாள்... புதிய பரிமாணத்தில்.

கொரோனா லாக்டெளன் காரணமாக, இன்று எல்லோரும் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறோம். மாணவர்கள், பொறியாளர்கள், வரைகலை ஆர்வம் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தங்கள் கரியர் எப்படி இருக்கும் என்ற கேள்வி இருக்கிறது. இந்த லாக்டௌனில், சில பயனுள்ள புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. பல கேள்விகளுக்கு விடை சொல்வது மட்டுமில்லை, உங்கள் வடிவமைப்பு கரியரை உருவாக்கிக்கொள்ள மோட்டார் விகடனின் டிசைன் வொர்க்‌ஷாப் மீண்டும் வந்துவிட்டது.

கார் டிசைன் வொர்க்‌ஷாப்
கார் டிசைன் வொர்க்‌ஷாப்

நேரடியாக வரவேண்டிய அவசியமே இல்லை. உங்கள் கணினி அல்லது மொபைலில், இருக்கும் இடத்தில் இருந்தபடியே கற்றுக்கொள்ளலாம். மே 11 தொடங்கி 15-ம் தேதி வரை, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என நடத்தப்படும் இந்த வொர்க்‌ஷாப்பை வெப்பினார் போல வெறும் விவரிப்பாக மட்டும் இருக்காது. வண்ணமயமான பிரசன்டேஷன், வீடியோ, நேரடியாக வடிவமைத்துக் காட்டுதல், வடிவமைப்பு சாஃப்ட்வேர்கள், நீங்கள் ஏற்கெனவே டிசைன் செய்திருந்தால், அதை எப்படி முழுமையாக மாற்றுவது என்று உரையாடலோடுகூடிய நேரடி அனுபவத்தைத் தருவதே இந்த வொர்க்‌ஷாப்பின் நோக்கம்.

பயிற்சிக் கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைய, இங்கே க்ளிக் செய்யவும் bit.ly/mvcardesign

கார் டிசைனை அடிப்படையில் இருந்தே கற்றுக்கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் முதல் பொறியாளர்கள் வரை யார் வேண்டுமானாலும் இங்கே பங்கேற்கலாம். வயது வரம்பு கிடையாது. கலைச் சொற்கள், பாடி ஸ்டைல், ஸ்கெட்ச், மாடலிங் என்று ஏகப்பட்ட வரைபட உத்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள். `இப்படித்தான் ஒரு கார் உருவாகுகிறது' என்கிற ரகசியத்தை உடைக்கக் காத்திருக்கிறார், டிசைன் துறையில் பல ஆண்டு அனுபவம் கொண்ட, அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் க.சத்தியசீலன்.

பயிற்சிக் கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைய இங்கே க்ளிக் செய்யவும் http://bit.ly/mvcardesign
சந்தேகங்களுக்கு, மோட்டார் விகடனின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்புகொள்ளலாம் அல்லது இந்த எண்களை அணுகலாம். +91 7358056834 / +91 97909 90404.
அடுத்த கட்டுரைக்கு