Published:Updated:

"சினிமா போன்று போஸ்டர் டிசைனிங்கும் ஒரு கலையே..!"- மோட்டார் விகடன் போஸ்டர் மேக்கிங் பயிலரங்கு

அமெரிக்காவில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கட்டும், ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கட்டும், போஸ்டருக்கு அங்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்.

போஸ்டர் டிசைனிப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'ஆமா, நான் கூட காலேஜ்ல நிறைய போஸ்டர் ரெடி பண்ணிருக்கேனே' எனப் பலரும் பெருமையாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். இப்படி கேஷுவலாக நீங்கள் கடந்து சென்ற 'போஸ்டர் டிசைனிங்'கிற்கு பின்னால் அத்தனை விஷயங்கள் இருக்கிறது. எந்தவொரு நிறுவனமும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு போஸ்டர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் கண நேரத்தில் கடந்து செல்கிற ஒரு விஷயத்துக்குத் தான் பல நிறுவனங்கள் லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கின்றன. போஸ்டர் டிசைனிங் என்றால் என்ன? அது ஏன் நமக்கு முக்கியம் என்பதை நமக்கு கூறுகிறார் அசோக் லேலாண்டின் டிசைன் பிரிவின் தலைவரும், அந்நிறுவனத்தின் துணைத் தலைவருமான சத்தியசீலன்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

"இந்தியாவில் போஸ்டர் டிசைனிங் குறித்த தெளிவான புரிதல் நம்மிடையே இல்லை. அமெரிக்காவில் ஒரு திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமாக இருக்கட்டும், ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கட்டும், போஸ்டருக்கு அங்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கும். அந்த ஒரு போஸ்டர் மூலமாகவே மக்களின் மனதை நம்மால் ஈர்க்க முடியும். இந்தியாவில் போஸ்டர் டிசைனிங் என்றால் டெக்னிகலாக சாப்ட்வேரைத் தான் கற்றுக் கொடுக்கிறார்கள். போட்டோஷாப், கோரல் ட்ரா போன்றவற்றைத் கற்றுக் கொள்வதன் மூலமாக ஒரு போஸ்டர் மேக்கிங்குக்கான கருவியை என்படிக் கையாள்வது என்பதையே நாம் தெரிந்து கொள்கிறோம். போஸ்டர் மேக்கிங்கை அல்ல."

"ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால் கேமரா, லைட்டிங், எடிட்டிங் செட்-அப்களை உபயோகப்படுத்தத் தெரிந்திருந்தால் மட்டும் போதாதல்லவா?! அவையெல்லாம் திரைப்படம் எடுப்பதற்கு உதவக்கூடிய கருவிகள். திரைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை, அதற்கென சில வழிமுறைகள் விதிமுறைகள் இருப்பதைப் போன்று, போஸ்டர் டிசைனிங்கிற்கும் உண்டு. இதுவும் ஒரு கலையே!இந்தக் கலையை என்னென்ன அடிப்படை விதிகள் இருக்கின்றன என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு புகைப்படம் எடுப்பதில் ஒரு அழகியல் இருக்கிறதல்லவா, கேமராவைக் கிளிக் செய்தால் போட்டோ கிடைத்துவிடும். ஆனால், அந்தப் புகைப்படத்தில் நாம் என்ன சொல்ல வருகிறோம் என்று ஒரு அழகியல் இருக்கிறதல்லவா, அதே போன்று போஸ்டர் டிசைனிங்கிலும் ஒரு அழகியல் இருக்கிறது. அந்த அழகியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்."

Poster Design and Secrets Of Typography Workshop
Poster Design and Secrets Of Typography Workshop

போஸ்டர் மேக்கிங்கில் டைப்போகிராபியும் மிகவும் முக்கியம். எல்லா போஸ்டருக்கும், எல்லா விஷயத்துக்கும் அனைத்து ஃபான்ட்களையும் உபயோகப்படுத்தி விட முடியாது. உதாரணத்திற்கு அஞ்சலி படத்தை எடுத்துக் கொண்டால், அஞ்சலி என்ற டைட்டில் கார்டே ஒரு குழந்தையின் கையெழத்தைப் போலக் குழந்தைத்தனத்தைப் பிரதிபலிக்கும். நாம் சொல்ல வருகிற கருத்தின் கருவோடு நாம் பயன்படுத்தும் எழுத்துக்களும் ஒத்துப் போக வேண்டும். போஸ்டர் மேக்கிங்கில் டைப்போகிராபிக்கான அடிப்படை விதிகளையும் நாம் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும்." என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போஸ்டர் மேக்கிங் குறித்த இணையவழிப் பயிலரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறது மோட்டார் விகடன். அதில் சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி, போஸ்டர் டிசைனிங் குறித்துக் கற்றுத்தரவிருக்கிறார். முழுவதுமாக ஆங்கிலத்தில் நடைபெறும் இந்தப் பயிலரங்கு இந்த மாத இறுதியில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

பயிலரங்கு குறித்த மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் முன்பதிவு செய்வதற்கும் இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு: 9790990404 / 7338826999 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு