Published:Updated:

ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் குறித்து மோட்டார் விகடனின் ஆன்லைன் பயிலரங்கு - கலந்துகொள்வது எப்படி?

Online introductory Workshop
Online introductory Workshop

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவரான டாக்டர் சங்கர் வேணுகோபால் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா ஆகியோர் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள்.

ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் பல புதிய மாற்றங்களைக் கண்டு வருகிறது. வரும் காலம் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களின் காலமாகத்தான் இருக்கப்போகிறது. இது போல இன்னும் நிறைய மாற்றங்களுடன் ஆட்டோமொபைல் துறை தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

ஆட்டோமொபைல் துறையில் கால்பதிக்க விரும்பும் இளைஞர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களுக்கு ஆட்டோமொபைல் துறை சார்ந்த வழிகாட்டல்களை வழங்கவே மோட்டார் விகடன் ஒரு ஆன்லைன் பயிலரங்கை ஆகஸ்ட் மாதம் நடத்தவிருக்கிறது. ஆட்டோமொபைல் துறை என்னென்ன விதமான மாற்றங்களைக் கண்டு வருகிறது, அதற்கு என்ன விதமான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், வருங்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என உங்களின் பல்வேறு கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் வழிகாட்டியாக இந்தப் பயிலரங்கு இருக்கும்.

இந்தப் பயிலரங்கில் என்னென்ன கற்றுக் கொள்ளலாம்?
இந்தப் பயிலரங்கில் என்னென்ன கற்றுக் கொள்ளலாம்?

என்னவெல்லாம் இந்தப் பயிலரங்கில் தெரிந்து கொள்ளலாம்?

  • Future Market Needs - வருங்காலத்தில் ஆட்டோமொபைல் சந்தையின் தேவை என்ன?

  • Future Technology Trends - வருங்காலாத்தில் என்னென்ன விதமான தொழில்நுட்பங்களை ஆட்டோமொபைல் துறையில் எதிர்பார்க்கலாம்?

  • Future Jobs - வருங்காலாத்தில் வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும்?

  • Future Skills - என்னென்ன திறமைகளை வளர்த்துக் கொண்டால் வருங்காலாத்தில் எளிதில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்?

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவரான ஷங்கர் வேணுகோபால் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா ஆகியோர் ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்கள். பயிலரங்கு எளிய ஆங்கிலத்தில் நடைபெறும். முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
இணைய வழிப் பயிலரங்கு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 7, 2021
Motor vikatan workshop
Motor vikatan workshop
நேரம்; காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை
மேலும் தகவல்களுக்கு: 7338826999 | 9790990404
அடுத்த கட்டுரைக்கு