Published:Updated:

கோவையில் மோட்டார் விகடன் நடத்தும் 'ஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு...' கார் டிசைன் பயிலரங்கு!

கார் டிசைன்
News
கார் டிசைன்

கார் டிசைனிங் அடிப்படை, கலைச்சொற்கள், பாடி ஸ்டைல்கள், ப்ரப்போஷனஸ், க்ளே மாடலிங், மென்பொருட்கள், பெர்ஸ்பெக்டிவ் வரைபட உத்திகள் என அனைத்தைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கார் ஓடுவதற்கு இன்ஜின் எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு காரின் இன்ஜின் திறனையும் தாண்டி அது சிறப்பாகச் செயல்பட எவ்வளவு எடை குறைவாகத் தயாரிக்க வேண்டும், ஏரோடைனமிக்ஸ் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் நாம் பள்ளிப் பாடப் புத்தகத்திலேயே படித்திருப்போம். ஆனால், கார் டிசைன் பற்றி ஏதாவது ஒரு இடத்தில் நாம் படித்துண்டா எனக் கேட்டால், இல்லை என்பது தான் பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஒரு காருக்கு இன்ஜின் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த காரின் டிசைனும் முக்கியம். உதாரணத்திற்குச் சந்தையில் விற்பனையில் இருக்கும் கார்களில் ஒரே இன்ஜின் மற்றும் வெவ்வேறு டிசைன் கொண்ட இரண்டு கார்களை எடுத்துக் கொள்வோம். இரண்டில் ஒரு காருக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல மவுசு இருக்கிறது, மற்றொரு காருக்கு அது கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. ஏனென்று பார்த்தால், அதன் டிசைன். ஒரு கார் மிகச்சிறப்பாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு கார் அதனைவிடக் கொஞ்சம் சுமாராகவே டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

கார் டிசைன்
கார் டிசைன்

ஒரு காரை உருவாக்கத் தொடங்கும் போது அதன் செயல்திறன், இன்ஜின் அனைத்தையும் சிறப்பாகவே வடிவமைப்பார்கள். ஆனால், முடிவில் டிசைன் சிறப்பாக இல்லை என்றால் அது சந்தையில் தாக்குப்பிடிப்பது கொஞ்சம் கடினம் தான். ஏனெனில், டிசைன் தான் ஒரு காரின் அடையாளம். ஒரு காரைப் பற்றி நாம் பேசும் போது அதன் வடிவமைப்பு தான் முதலில் நம் மனதில் தோன்றும். அதன் இன்ஜின் அல்ல. நிறைய மாணவர்கள் கார் டிசைன் செய்வதற்கும் பொறியியல் துறையே போதும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், டிசைனுக்கென தனியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும். `கார் டிசைனிங் பற்றிப் படிக்க என்னத் தெரிந்திருக்க வேண்டும். என்ன தகுதிகள் வேண்டும். என்ன செலவாகும். எங்கே படிக்கலாம்.' என்பது போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரிய வேண்டுமா? இவற்றுக்கான விடையை நேரில் கேட்டு தெறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கார் டிசைன் பற்றித் தெரிந்து கொள்ள எங்கே செல்வது? உங்களுக்காகவே கார் டிசைன் பயிலரங்கை நேரடியாக நடத்தவிருக்கிறது மோட்டார் விகடன். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக நேரடியாகப் பயிலரங்குகளை மோட்டார் விகடனால் நடத்த இயலவில்லை. கடந்த இரு ஆண்டுகளுமே இணைய வழியிலேயே மோட்டார் விகடன் பயிலரங்கு நடைபெற்றுப் பல மாணவர்கள் இதன் மூலம் பலனடைந்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் 'கார் டிசைன் பயிலரங்குடன்' நேரடியாக உங்களைச் சந்திக்க வருகிறது மோட்டார் விகடன்.

எங்கு? எப்போது?

வரும் 2022, பிப்ரவரி 5-ஆம் தேதி கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் ஒரு நாள் பயிலரங்காக 'ஒரு நாள்.. ஒரு கார்.. ஒரு கனவு..' என்ற ஒரு நாள் கார் டிசைன் பயிலரங்கை நடத்தவிருக்கிறது மோட்டார் விகடன்.

இந்த மோட்டார் விகடன் பயிலரங்கில் உங்களுக்கு பயிற்சியளிக்க இருக்கிறார் சத்தியசீலன் அவர்கள். டாடா மோட்டார்ஸ், நிஸான் மற்றும் டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் இவர், தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். IIT, IISC, மற்றும் NIT எனப் பல கல்லூரிகளில் டிசைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இவர் புனே MIT-யின் கல்விக்குழு உறுப்பினரும் கூட

மோட்டார் விகடன் கார் டிசைன் பயிலரங்கு
மோட்டார் விகடன் கார் டிசைன் பயிலரங்கு

கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியுமா?

உங்களுக்குக் கார் என்றால் பிடிக்குமா? ஒரு காரின் டிசைனப் பார்த்துச் சிலாகிப்பவரா நீங்கள்? ஒரு காரின் வடிவமைப்பைப் பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பீர்களா? அப்படி என்றால் நீங்களும் கூடக் கலந்து கொள்ளலாம். இந்தப் பயிலரங்கின் நோக்கமே கார் டிசைனைப் பற்றிய முழுமையான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதும். அது குறித்த பயிற்சிகளை வழங்குவதும் தான்.

Golden Ratio, Rule of third, One point perspective, Two point perpective... என ஓவியங்களுக்கான அடிப்படைகளும் பயிற்றுவிக்கப்படும். கார் டிசைனிங் அடிப்படை, கலைச்சொற்கள், பாடி ஸ்டைல்கள், ப்ரப்போஷனஸ், க்ளே மாடலிங், மென்பொருட்கள், பெர்ஸ்பெக்டிவ் வரைபட உத்திகள் என அனைத்தைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஒரு நாள் முழுவதும் முழுமையான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது நீங்கள் பயன்படுத்துவதற்குத் தேவையான குறிப்பேடுகள் உள்ளிட்ட பொருட்களைப் பயிற்சியின் போது மோட்டார் விகடனே வழங்கும். பயிற்சியின் நாளன்று தேநீர் மற்றும் மதிய உணவும் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் 2,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.
மேலும் விபரங்களுக்கு 97909 90404 / 73388 26999 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.