Published:Updated:

ஆட்டோமோட்டிவ் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கான `Innovation & Design Thinking' பயிலரங்கம்!

ஆட்டோமோட்டிவ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்காகவே ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது மோட்டார் விகடன். Design Thinking and Innovation for Mobility Engineers இலவச ஆன்லைன் பயிலரங்கு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆட்டோமோட்டிவ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்காகவே ஓர் அரிய வாய்ப்பை வழங்குகிறது மோட்டார் விகடன். Design Thinking and Innovation for Mobility Engineers என்று மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஷங்கர் வேணுகோபால் மற்றும் National Institute of Innovation and Entrepreneurship Management நிறுவனத்தின் இயக்குநர் சயந்தன் முகர்ஜி ஆகியோர் பேச இருக்கிறார்கள். இந்த இலவச ஆன்லைன் பயிலரங்கு, ஆங்கிலத்தில் நடைபெறும்.

என்னென்ன தலைப்புகளில் உரையாடப்படும்?

  • How to use Empathy to understand what customers need?

  • How to define the right problems from a customer perspective?

  • How to create innovative ideas that really work?

  • How to build prototype to test and improve the idea?

மேற்கூறிய நான்கு நிலைகளின் கீழ் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாட இருக்கிறார்கள்.

Mobility Engineering
Mobility Engineering

இன்றைய ஆட்டோமொபைல் துறை நிலையற்ற தன்மையுடன் இருக்கிறது. இந்த நிலையற்ற தன்மைக்குப் பல காரணிகளைக் கூறலாம். இந்த நிலையற்ற தன்மையிலும் ஒரு நிறுவனம் நிலைத்து நிற்க வேண்டுமானால் அது வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்வதன் மூலமே சாத்தியம். நிலையான வாடிக்கையாளர்களைப் பெறும் எந்த நிறுவனத்தாலும் எந்த நிலையையும் கடந்து வர முடியும். ஆனால், வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்வது என்பது எளிதல்ல. அவர்களுடைய தேவை என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே, அவர்களுடைய தேவை நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.

ஒரே கோணத்தில் இருந்து மட்டும் சிந்திக்காமல், பல்வேறு கோணத்தில் இருந்தும் சிந்திக்க வேண்டும். முக்கியமாக நம்முடைய பார்வையில் இருந்து பார்க்காமல், ஒரு வாடிக்கையாளரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும், அறிந்து கொள்ள முடியும். பிரச்னையைக் கண்டறிந்தவுடன் அதற்கான தீர்வை கண்டறிய வேண்டும். நாம் கண்டறியக்கூடிய தீர்வு அந்தப் பிரச்னைக்கு உரியதாக மட்டும் இல்லாமல், வரும் காலத்தில் இதே போன்று பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் வழிவகை செய்ய வேண்டும். அது வெறும் பிரச்சினைக்குரிய தீர்வாக மட்டும் இல்லாமல் ஒரு புதுமையைப் புகுத்தும் முயற்சியாகவும் இருக்க வேண்டும். கடைசியாக நாம் கண்டறிந்த தீர்வு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருக்குமா எனச் சோதனை செய்து பார்க்க வேண்டும்.

Future skills for automotive industry
Future skills for automotive industry

இவை அனைத்தும் சரியாகச் செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய, புதுமைகளைக் கொண்ட சரியான பொருளை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். மேற்கூறியவை குறித்த விரிவான வழிகாட்டல்களை துறை நிபுணர்கள் வழங்கவிருக்கிறார்கள்.

முன்பதிவு செய்து பயிலரங்கில் கலந்து கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மோட்டார் விகடன் வழங்கும் இலவச ஆன்லைன் பயிலரங்கு (ஆங்கிலத்தில்)
மோட்டார் விகடன் வழங்கும் இலவச ஆன்லைன் பயிலரங்கு (ஆங்கிலத்தில்)
முன்பதிவு இலவசம்.
பயிலரங்கு முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெறும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு