Published:Updated:

கார் டிசைனர் ஆக எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது?- மோட்டார் விகடனின்`ஒரு கார், ஒரு கனவு’ கடைசிநாள்

`ஒரு கார், ஒரு கனவு’
News
`ஒரு கார், ஒரு கனவு’

மோட்டார் விகடன் சார்பாக 5 நாள்கள் நடக்கும்`ஒரு கார், ஒரு கனவு’ ஆன்லைன் கார் டிசைனிங் பற்றிய வொர்க் ஷாப்பின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்.

மே 11-ம் தொடங்கி 15-ம் தேதி வரை, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என நடத்தப்படும் இந்த வொர்க்‌ஷாப்பை வெப்பினார் போல வெறும் விவரிப்பாக மட்டும் இருக்காது. வண்ணமயமான பிரசன்டேஷன், வீடியோ, நேரடியாக வடிவமைத்துக் காட்டுதல், வடிவமைப்பு சாஃப்ட்வேர்கள், நீங்கள் ஏற்கெனவே டிசைன் செய்திருந்தால், அதை எப்படி முழுமையாக மாற்றுவது என்று உரையாடலோடுகூடிய நேரடி அனுபவத்தைத் தருவதே இந்த வொர்க்‌ஷாப்பின் நோக்கம். நேரடியாக வர வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் கணினி அல்லது மொபைலில், இருக்கும் இடத்தில் இருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு
ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடுத்த ஆன்லைன் வொர்க்‌ஷாப்பில் இணைய உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை cardesign@vikatan.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.

முதல் நாள்

மோட்டார் விகடனின் ஒரு கார் ஒரு கனவு ஆன்லைன் பயிலரங்கத்தின் முதல் நாள் நிறைவடைந்தது. இந்த 5 நாள் பயிற்சி வகுப்பின் முதல் நாளில் டிசைன் என்றால் என்ன, டிசைன் என்பது எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது. எந்த ஒரு வடிவமைப்பையும் முழுமையாக்கும் விஷயம் என்ன என்பதை முதல் 15 நிமிடங்களில் புரிய வைத்துவிட்டார் அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் வடிவமைப்புத்துறைத் தலைவர் சத்தியசீலன்.

ஒரு மணி நேர வகுப்பில் மீதி 45 நிமிடங்கள் வரைவதற்கு எந்தக் காகிதம் பயன்படுத்த வேண்டும், எந்த பென்சில் மற்றும் பேனாவை உபயோகிக்க வேண்டும், பென்சிலை எப்படிப் பிடிப்பது என்பதில் தொடங்கி பல வகையான தோற்றங்கள், பெர்ஸ்பெக்ட்டிவ் ஸ்கெட்ச் எப்படிச் செய்வது என்று நேடியாக வரைந்து காட்டப்பட்டன. வீடியோ மூலமாகவும் ஏற்கெனவே செய்யப்பட்ட கார் வடிவமைப்புகள் மூலமாகவும் டிசைன் பற்றிய பல தகவல்கள் பரிமாறப்பட்டன. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட்கள் நாளை சரிபார்க்கப்படும். நம்மால் டிசைனர் ஆக முடியுமா என்று உங்களுக்குள் ஒரு சந்தேகம் இருந்தால் நீங்கள் பிடிக்க வேண்டிய முதல் பஸ் இதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாம் நாள்

ஒரு கார் ஒரு கனவு, டிசைன் பயிற்சியின் இரண்டாவது நாள் தங்க விகிதத்தின் ரகசியங்களையும், அமெரிக்க மஸில் கார் வரைதலின் அடிப்படைகளையும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக்கொண்டார்கள். தினமும் ஒரு மணி நேரம் என்று முடிவு செய்யப்பட்ட பயிற்சி, மாணவர்களின் பேரார்வத்தால் இரண்டரை மணி நேரம் வரை தொடர்ந்தது.

ஒரு காரின் கான்செப்ட் என்றால் என்ன என்று முதலில் காட்சி செய்யப்பட்டது. அங்கிருந்து ஒரு காரை எப்படிக் காட்சிப்படுத்த வேண்டும் என்று உதாரணங்களோடு புரிய வைக்கப்பட்டன. நேற்று கற்றுக்கொடுக்கப்பட்ட பர்ஸ்பெக்டிவ் படங்களை எப்படி காராக மாற்றுவது என்பது இன்றைய வகுப்பின் ஹைலைட். ஒரு புள்ளி, இரண்டு புள்ளி என்று ஆரம்பித்து சிறிய வட்டங்களையும் சதுரங்களையும் நொடிப் பொழுதில் கார்களாக மாற்றினார் சத்தியசீலன். இவை எல்லாமே தங்க விகிதத்தின் அடிப்படையில் என்பதையும் வீடியோ மற்றும் பிரசன்டேஷன் மூலமாக உணர்த்தினார். தங்க விகிதத்தின் தொடர்ச்சியாக அமெரிக்க மஸில் கார்கள் என்றால் என்ன அதன் டிசைன் அடிப்படை எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றிய முன்னோட்டமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளை ஃபோர்டு மஸ்டாங் மற்றும் செவர்லே கமேரோ கார்களின் வடிவமைப்புகளைக் கற்றுக்கொள்ளப்போகிறார்கள் மாணவர்கள்.

2020-ன் சிறந்த கான்செப்ட் கார்களும், ஒன்று மற்றும் இரண்டு புள்ளி பெர்ஸ்பெக்டிவில் பொருள்களைக் காட்சிப்படுத்துவதும் இன்றைய பயிற்சிக்கான பாடங்களாகக் கொடுக்கப்பட்டது.

மூன்றாம் நாள்

ஒரு காரின் வடிவமைப்பு என்பது ஒரு தலைமுறையோடு நின்று விடுவதில்லை. அது ஒவ்வொரு தலைமுறை கடந்தும் ஒவ்வொரு விதமாக மாறுகிறது. அப்படித்தான் ஃபோர்டு மஸ்டாங் பல முறை கடந்து வந்திருக்கிறது. இந்த ஐகானிக் அமெரிக்கன் கார் 4 சீட் செடான், கூபே, ஷார்க் நோஸ், புல்லிட் கார், ஜப்பான் டிசைன், பின்டோ சேஸி என எத்தனை டிசைன் மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்ற விளக்கத்தோடு ஆரம்பித்தது இன்றைய டிசைன் வொர்க் ஷாப்.

1962-லிருந்து இனி வரப்போகும் டிசைன் வரை மஸ்டாங்கில் மாறிய அம்சங்கள் என்ன, மாறாத அம்சங்கள் என்ன. அடிப்படை டிசைன் என்பது 55 ஆண்டுகளாக எப்படி இருந்திருக்கிறது போன்றவற்றை வீடியோ மற்றும் ஸ்லைடு மூலம் எடுத்து வைக்கப்பட்டது. ஒரு மஸ்டாங்கை வடிவமைக்க வேண்டும் என்றால் எந்தெந்த விஷயங்களை மாற்றக்கூடாது எதை மாற்ற வேண்டும் என்றும் கற்றுத்தரப்பட்டது.

பிறகு கற்பனையான ஒரு காரை வரைந்த சத்தியசீலன் அதை மொபைலில் இருக்கும் கூகுள் லென்ஸில் காட்டியபோது மஸ்டாங் என்று சொன்னது, அனைவருக்குமே வாவ் மொமன்ட். அடிப்படை அம்சங்களை மாற்றாமல் இருந்ததால் வரையப்பட்ட காரை கூகுள் மஸ்டாங் என்று எடுத்துக்கொண்டதாகத் தெளிவுபடுத்தினார். தன்னுடைய டிசைனை சரிபார்த்துக்கொள்ள ஒரு சிம்பிளான வழி மாணவர்களுக்குக் கிடைத்தது. காரின் சைடு ப்ரொஃபைல் மற்றும் வீல் இரண்டையும் வரைந்து வர வேண்டும் என்று மாணவர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது.

நான்காவது நாள்

ஒரு கார் ஒரு கனவு பயிற்சியின் 4-ம் நாள் முடிந்துவிட்டது.  கான்செப்ட் காரில் என்ன இருக்க வேண்டும், புரொடக்‌ஷன் காரில் என்ன இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த வொர்க் ஷாப் சில கான்செப்ட் கார் வீடியோக்கள் மூலம் வித்தியாசங்கள் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டது. Clay model என்றால் என்ன என்று அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றது பயிற்சி.

Clay model எப்படிச் செய்வது, எத்தனை விதங்களாகச் செய்ய முடியும் என்பதெல்லாம் பிரசன்டேஷன் மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டது. பேப்பரில் வரையப்பட்ட கனவுக்கு உருவம் கிடைப்பதுதான் இந்த கிளே மாடல். இதை முழுவதுமாக ஆராய்ந்த பிறகே புரொடக்‌ஷன் கார் எப்படி இருக்கும் என்று முடிவுசெய்யப்படுகிறது. ஆனால், இதை எப்படி ஆராய்வர்கள், என்னவெல்லாம் இதில் செய்வார்கள் என்பது வீடியோ காட்சிகள் மூலம் புரிய வைக்கப்பட்டன.

சரி clay model முடிந்துவிட்டது அடுத்த என்ன என்று ஆர்வமாக இருந்த மூளைகளுக்கெல்லாம் கிடைத்த தீனிதான் சர்ஃபேஸ். Alias எனும் மென்பொருள் மூலமாக கார்களின் சர்ஃபேஸ் உருவாக்கப்படுகிறதாம். சர்ஃபேஸ் என்றால் இவ்வளவு சிக்கலா என்று கேட்கும் அளவுக்கு செம பெரிய கான்செப்ட் அது. சர்ஃபேஸ் பாக்கெட்ஸ் என்றால் என்ன அதை எப்படி உருவாக்குவது என்பது தியரியாகவே கற்றுத்தரப்பட்டது. ஒரு பொருளை உருவாக்கும்போது அதை ஏன் டாக்குமென்ட் செய்ய வேண்டும் என்ற விஷயத்தையும் ஆழமாகப் பதியவைத்தார் சத்தியசீலன். நேற்று சைடு வியூ எப்படி வரைவது என்று கற்றுக்கொடுத்தது போலவே இன்று ரியர் பெர்ஸ்பெக்டிவ் எப்படி வரைவது என்பது கற்றுக்கொடுக்கப்பட்டது.

Digital sculpting
Digital sculpting

ஒவ்வொரு படியாக எப்படி வரைவது என்று சொல்லித் தரப்பட்டதோடு நேரடியாகப் பயிற்சியின்போதே வரைந்தும் காட்டப்பட்டது. இந்த முறையும் மஸ்டாங்தான் பாடமாக எடுக்கப்பட்டது. மஸ்டாங்கின் பின்பக்க விகிதத்தை எப்படி வரைவது என்று கற்றுக்கொடுக்கப்பட்டது. வீல் முதல் ரூஃப் வரை காரின் தோற்றத்தை வரைந்த பிறகு அதில் அலாய் டிசைன், பின்பக்க கண்ணாடி, ஜன்னல்கள், டெயில் லைட் போன்ற முக்கியமான அம்சங்களை எப்படி நேர்த்தியாகப் படத்தில் கொண்டுவருவது என்பது கற்றுக்கொடுக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு நான்காம் நாள் பயிற்சிக்கு எண்டு கார்டு போட்டாச்சு.

கார் டிசைன் வொர்க்‌ஷாப்
கார் டிசைன் வொர்க்‌ஷாப்

கடைசி நாள்

மோட்டார் விகடனின் 5 நாள் கார் டிசைன் வொர்க்‌ஷாப் கடைசி நாளான நேற்று மானவர்களின் நெகிழ்ச்சி பகிர்தல்களோடு முடிவடைந்தது. முழுமையான கார் டிசைனராக என்ன கடைசியாக இருக்கும் 5 ரகசியங்களையும் முன்வைத்தார் சத்தியசீலன்.

மனத் தடைகள்தான் நம் டிசைனர் ஆவதற்கு நமக்கு இருக்கும் முதல் எதிரி. டிசைனர்களுக்கு படைப்பாற்றல் முக்கியம். மனத் தடைகள் இருக்கும்போது அங்குப் படைப்பாற்றல் முழுமை பெறாது என்றவர் வரைதல் நுட்பங்களோடு சில வாழ்வியல் நுட்பங்களையும் மானவர்களோடு பகிர்ந்துகொண்டார். மென்பொருள் முதல் பென்சில் வரை சுலபமாக டிசைன் செய்வதற்கு எந்த விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும். நம்முடைய டிசைனுக்கு டீடெயிலிங் கொடுக்க எதைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். கடைசி நாள் என்பதால் கிட்டத்தட்ட 3 மணிநேரம் சென்றது வகுப்பு.

மாணவர்கள் பலருக்கு தங்களுடைய கேள்விகளை கேட்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பள்ளி மாணவர் முதல் கல்லூரி பேராசிரியர், டிசைனர் வரை எல்லோருமே கேள்வி கேட்டார்கள். கேள்விகேட்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு மெயில் ஐடி கொடுக்கப்பட்டு அதில் கேள்விகளைப் பதிவு செய்தால் பதில் அளிக்கிறோம் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. கடைசியாக டிசைனர் ஆகும் ஆர்வம் இருப்பவர்கள் எந்தெந்த வடிவமைப்பு கல்லூரிகளில் சேர்ந்து பயிலலாம். எப்படிச் சேர்வது, எவ்வளவு செலவாகும். வடிவமைப்பு கல்லூரியில் பயிற்சிபெறாமல் எப்படி டிசைனர் ஆவது. அதற்கு தகுதியான ஆட்கள் யார் என்பது போன்ற பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. மீண்டும் இன்னொரு புதிய பாடத்திட்டத்துடன், அதிக நாள்கள் அல்லது குறைவான நாள்களில் அதிக விஷயங்கள் கற்றுத்தரும்படியான வொர்க்‌ஷாப் உடன் வருவோம் என்பதே விகடன் தனது வாசகர்களுக்குக் கொடுக்கும் நம்பிக்கை.