ரேசிங் என்றாலே பலருக்கும் கிரேஸ்தான். ரேசிங் என்ற கனவு பலருக்கு சைக்கிள் ஓட்ட பழகும்போதே முளைக்கத் தொடங்கிவிடுகிறது. பள்ளி கல்லூரி பருவத்தில் இப்படி இயற்கையாக எழும் ஆர்வம் நாளடைவில் பைக் ரேசிங் மீது திரும்புகிறது. இந்த ஆர்வத்தை சரியாக மடைமாற்றினால், ஆட்டோமொபைல் சார்ந்த அறிவியலில் ஆர்வம் மேலோங்குவது உறுதி.
பைக் ரேஸையோ அல்லது கார் ரேஸையோ வெறுமனே மோட்டார் ஸ்போர்ட்ஸாக பார்த்தாலும் சரிதான். அதற்கும் நல்ல எதிர்காலம் உண்டு.

ஆனால், இதை எல்லாம் எங்கே ஆரம்பிப்பது? இந்தத் துறையின் அகல நீளம் என்ன? இதை எந்த வயதில் ஆரம்பிப்பது? எங்கே பயிற்சி எடுப்பது? யார் பயிற்சி கொடுப்பார்கள்? மோட்டார் ஸ்போட்ஸ் சார்ந்த வேறு வேலைகள் என்னென்ன? இந்த வேலை வாய்ப்புகள் எல்லாம் முழு நேர வேலை வாய்ப்பா அல்லது பகுதி நேர வேலை வாய்ப்பா?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லவும், வழிக்காட்டவும் CRA Motor Sports உடன் இணைந்து மோட்டார் விகடன் ஆன்லைன் வாயிலாக ஒரு பயிலரங்கை நடத்த இருக்கிறது. இதில் Design concepts of Design Concepts of motorcycles, Preparing racing machines, Careers in motorsports ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்குக்கு முன்பதிவு செய்ய - https://bit.ly/3K7ufk2
பயிலரங்கு எப்படிப் பயன்படும்?
இந்தப் பயிலரங்கில் மோட்டார் சைக்கிள் மற்றும் அதனது தொழில்நுட்பங்கள் பற்றித் தெளிவாகப் பயிற்றுவிக்கப்படும். தொழில்நுட்பங்கள் மற்றும் மோட்டார் பற்றி அறியாத ரேஸரைவிட அதைப்பற்றி தெரிந்த ரேஸர்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸில் அழுந்த கால் ஊன்றமுடியும். மேலும் எந்த இடத்தில், தருணத்தில் எப்படி ஓட்டினால் வெற்றிபெறலாம் என்பதை எளிதாகக் கணித்து வெற்றியை நோக்கி முன்னேற முடியும்.
மேலும் பயிலரங்கில் கலந்துகொள்வோருக்குக் கொடுக்கப்படும் சான்றிதழ் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் கைகொடுக்கும் என்பது உறுதி.
எங்கு? எப்பொழுது?
இந்தப் பயிலரங்கம் இணைய வழியில்தான் நடக்கவுள்ளது. பிப்ரவரி 12, மாலை 5 மணி முதல் 7 மணி வரையும், பிப்ரவரி 13, ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நடக்கவுள்ளது.

இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்குக்கு முன்பதிவு செய்ய - https://bit.ly/3K7ufk2
பயிற்சி அளிப்பவர் யார்?
கோவை CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் கோச் தருண்குமார் இந்தப் பயிலரங்கில் பயிற்சி அளிக்கவுள்ளார்.
யார் கலந்துகொள்ளலாம்?
வயது வரம்பின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றித் தெரிந்தவர்கள்தான் கலந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் உள்ளவர்கள், ஆனால் அதை பற்றி தெரியாதவர்களும் கலந்து கொள்ளலாம்.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிலரங்குக்கு முன்பதிவு செய்ய - https://bit.ly/3K7ufk2
இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸில் நீங்கள் பட்டையைக் கிளப்ப எங்களது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மக்களே!