ஸ்கார்பியோ துவங்கி, ஆல் நியூ தார் வரை... பல வாகனங்களை வடிவமைத்த விஞ்ஞானியோடு ஒரு நாள்!

Mahindra Research Valley ஆளுகையின் கீழ் இப்போது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் செயல்பட்டுவரும் ரிசர்ச் மையம் துவங்கி, இத்தாலியின் பினின்ஃபெரினாவரை பல ஆராய்ச்சி மையங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகின்றன.
நவம்பர் மாதம் நிவர் புயலுக்கு நடுவே, 2020ம் ஆண்டில் நாம் இருக்கிறோம். ஆனால், சென்னையிலிருந்து சுமார் ஐம்பது கி.மீட்டர் தள்ளியிருக்கும் சிறு மலையை ஒட்டியப் பிரதேசம் மட்டும் 2025ம் ஆண்டுக்கு போய்விட்டது. அங்கே இருக்கும் சுமார் 2,500 பேரும் நம்மைவிட்டு ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்து சாலையைப் பார்த்தால் நம் கண்களுக்கு தெரியும் காட்சிகள் எதுவுமே அவர்கள் கண்களுக்கு புலப்படுவது இல்லை. இப்போது நாம் பார்க்கும் கார்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிலாக... நாம் இதுவரை பார்த்திராத புதிய தோற்றங்கள் கொண்ட கார்களும், பைக்குகளும்... அவர்கள் பார்க்கும் உலகில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மனிதர்களின் மனமும், ரசனையும், தேவையும் முற்றிலுமாக மாறியிருக்கிறது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் அறிவியலும் தொழில் நுட்பமும் மொபைல் போன் துவங்கி, லேப்டாப் வரை அனைத்தையும் மாற்றியிருக்கின்றன. அந்த, நாளைய மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுத்தான், அந்த புதிய பூமியில் இருக்கும் 2400 விஞ்ஞானிகளும் ஐந்து வருடம் முன்கூட்டியே காலசக்கரத்தில் ஏறி 2025க்கு போயிருக்கிறார்கள்.
நாம் பூமி... என்று குறிப்பிடுவது உண்மையிலேயே ஒரு தனி உலகம். 125 ஏக்கருக்கு பரந்து விரிந்திருக்கும் மஹிந்திரா ரிசர்ச் வேளியைத்தான்! (MRV) கோவில் கருவறைக்குள் போகும் தண்ணீர், தீர்த்தமாக மாறும் என்பதுபோல மஹிந்திரா ரிசர்ச் வேளிக்கு பார்வையாளனாக போகும் ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட அறிவியல் செல்கள் ஆக்டிவேட் ஆகும்.
ஆம். மஹிந்திரா ரிசர்ச் வேளியை சுற்றிப்பார்க்க சென்றாலே ஐம்புலன்களும் விழித்துக்கொள்ளும். புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான சார்லஸ் கொரியாவின் கைவண்ணத்தில் உருவான அந்த ஆராய்ச்சி மையத்தில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியுமே ஒரு புதிய உலகத்திற்கு நம்மை கொண்டுபோகும்.

சாதாரண மக்களுக்கான கார், செல்வந்தர்களுக்கான கார்... என்று விதவிதமான கார்களை ஐரோப்பிய நாடுகள் வடிவமைத்து முன்னேற்றம் கண்டிருந்த காலத்தில், அடிமை தேசமாக இருந்த நமது நாட்டினர் மாட்டுவண்டிகளில்தான் பயணம் மேற்கொண்டிருந்தனர். இந்த மாட்டுவண்டி தேசத்திலிருந்து, முன்னேறிய இந்த நாடுகளுக்கு இப்போது நமது நாடு பல கார்களை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது. அதில் கணிசமான கார்கள்... இந்த மஹிந்திரா ரிசர்ச் வேளியில் இருக்கும் டிசைன் செண்டரிலும் 32 பரிசோதனை சாலைகளிலும் சூல் கொண்டவை. அதில் நம் நாட்டைச் சேந்த குப்பனும் சுப்பனும் ஆற்றிய பங்கு அதிகம்.

மஹிந்திரா ரிசர்வ் வேளியின் ஆளுகையின் கீழ் இப்போது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் செயல்பட்டுவரும் ரிசர்ச் மையம் துவங்கி, இத்தாலியின் பினின்ஃபெரினாவரை பல ஆராய்ச்சி மையங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகின்றன.
சரி, ஏன் மஹிந்திரா ரிசர்வ் வேளியின் மஹாத்மியங்கள் இப்போது..?
ஸ்கார்பியோ துவங்கி, ஆல் நியூ தார்வரை தரமான பல வாகனங்களை வடிவமைத்த Mahindra Research Valley-யின் விஞ்ஞானிகள் பட்டாளத்தின் தளபதி வேலுசாமி மோட்டார் விகடன் ஏற்பாடு செய்திருக்கும் பயிலரங்கத்தில் கலந்து கொண்டு... ஆல் நியூ தார் பாதுகாப்புக்கான குலோபல் என்கேப் ரேட்டிங்கில், 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது துவங்கி... வாகன கட்டுமானத்தின் ஒவ்வொரு படிநிலையையும் பரவசத்துடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த பயிலரங்கத்தில் அவர் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கும் காணொளிக் காட்சிகளும், பவர் பாய்ண்ட் விளக்கங்களும்... ஆட்டோமொபைல் உலகின் அதிசயங்களை உங்களுக்கு சொல்லவிருக்கின்றன.
Click Here to register https://bit.ly/3nwAkKB
Free Introductory Online workshop on Automotive Design & Development
Date: Saturday, 28th November 2020
Time: 10:00 AM to 12 Noon