Published:Updated:

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

பிஎம்டபிள்யூ
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ

‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு’ என்கிற ரீதியில் ‘தேவர்மகன்’ கமல்ஹாசன் ஸ்டைலில், கண்கள் பனிக்க பிஎம்டபிள்யூவின் ரியர் சீட்டை ஆக்கிரமித்தார் வாசகர் தருண். மொத்தம் 3 பேர். சிட்டாகப் பறந்தது பிஎம்டபிள்யூ X1.

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு’ என்கிற ரீதியில் ‘தேவர்மகன்’ கமல்ஹாசன் ஸ்டைலில், கண்கள் பனிக்க பிஎம்டபிள்யூவின் ரியர் சீட்டை ஆக்கிரமித்தார் வாசகர் தருண். மொத்தம் 3 பேர். சிட்டாகப் பறந்தது பிஎம்டபிள்யூ X1.

Published:Updated:
பிஎம்டபிள்யூ
பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ

பென்ஸ் கார்கள் என்றால் க்ளாஸ்! ஆனால் பிஎம்டபிள்யூவை மாஸ் – க்ளாஸ் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். புரொஃபஷனலாக பிளேஸர், டை, ஷூ எல்லாம் கட்டி, செம ஃபார்மலாக பிஎம்டபிள்யூவில் போனாலும் மரியாதை கிடைக்கும். சும்மா ஒரு ட்ராக் பேன்ட், டீ–ஷர்ட் மாட்டி கேஷுவலாக ஒரு வீக் எண்ட் காஸ்ட்யூமில் பிஎம்டபிள்யூவில் இருந்து இறங்கினாலும்… நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும்!

அப்படித்தான் நமக்கு வீக் எண்ட் டிராவலுக்காக ஒரு பிஎம்டபிள்யூ கிடைத்திருந்தது. ‘எனக்கு மரியாதையெல்லாம் தேவையில்லை; பிஎம்டபிள்யூ போதும்!’ இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்க முடியும்! சட்டுபுட்டுனு ஒரு ஜீன்ஸ் பேன்ட்டையும் ஷூவையும் ரேபான் கூலர்ஸையும் (ஒரிஜினல் மக்களே!) மாட்டிக் கொண்டு, ‘டேய் தம்பி, கேமரா – லென்ஸ் – ட்ரோன்னு நம்ம சமாச்சாரங்களோடு, தாம்பரம் பக்கத்துல வந்துடுறா… பிஎம்டபிள்யூவுல மைசூர் போறோம்’ என்று போட்டோகிராபரை அதிகாலையில் உசுப்பிவிட்டு செம ஜாலியாகக் கிளம்பினேன். அப்போதுதான் வாட்ஸ் அப்பில் அந்த Unread மெசேஜ் நினைவுக்கு வந்தது. ‘‘பாஸ், மோ.வி டிரைவ் போனா நிச்சயம் நானும் வருவேன்’’ என்று ஏற்கெனவே அவர் அடம்பிடித்து அனுப்பிய மெசேஜை அன்ரெட்டில் வைத்திருந்தேன். ‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு’ என்கிற ரீதியில் ‘தேவர்மகன்’ கமல்ஹாசன் ஸ்டைலில், கண்கள் பனிக்க பிஎம்டபிள்யூவின் ரியர் சீட்டை ஆக்கிரமித்தார் வாசகர் தருண். மொத்தம் 3 பேர். சிட்டாகப் பறந்தது பிஎம்டபிள்யூ X1. உண்மையில் நாங்கள்தான் தருணுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தோம். (காரணம், அடுத்த 3–வது பாராவில்!)

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

BMW கார்களில் செடான் கார்கள்தான் சொகுசு என்று யார் சொன்னது… எஸ்யூவிகளின் சொகுசை அனுபவித்ததுண்டா…! இனிமேல் என்னைக் கேட்டால்… எஸ்யூவிகள்தான் சொகுசு என்பேன்.

நாங்கள் கிளம்பியது பிஎம்டபிள்யூ X1 எனும் குட்டி எஸ்யூவி. பிஎம்டபிள்யூவின் ஆரம்ப நிலை விலை குறைந்த எஸ்யூவி. ஜஸ்ட் 38 லட்சம்தான். அதற்காக இதை காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் ஒதுக்கிவிட முடியாது. இது ஒரு செமையான மிட்சைஸ் எஸ்யூவி. எக்ஸ்டிரைவின் கீழ் வரும் X1, X3, X5, X7 என அனைத்து எஸ்யூவிகளும் ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டது. ஆனால் X1-ல் மட்டும் ஆல் வீல் டிரைவ் இல்லை. 2001-ல் தான் BMW, X1 காரை ஃப்ரன்ட் வீல் டிரைவாக மாற்றி விட்டது.

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

அதற்கு முன்பு வரை X1 காரும் ஆல்வீல் டிரைவாகத்தான் இருந்தது. ‘பரவாயில்லை; நாங்கள் ஆஃப்ரோடு போகவில்லையே… ஹைவேஸில்தான் பறக்கப் போகிறோம்’ என்று சமாதானப்படுத்திக் கொண்டோம். உலகம் முழுவதும் 7,30,000 X1 கார்களை விற்றுத் தீர்த்திருக்கிறதாம் பிஎம்டபிள்யூ. இதில் 4 வீல் டிரைவும் அடக்கம்.

‘‘அண்ணே, பிஎம்டபிள்யூ புராணம் போதும்… மைசூர்ல எங்க போறோம்’’ என்றார் கேமரா கலைஞன் சதீஷ். ‘X1 வரப் போகுது’ என்கிற தகவல் கிடைத்தவுடனே கூகுளை ஒரு வழி பண்ணியிருந்தேன். கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் இருக்கும் ஒரு பிரத்யேகமான அட்வென்ச்சர் வாட்டர் ஸ்போர்ட்டை அனுபவிக்க முடிவு செய்திருந்ததைப் பகிர்ந்தேன். அந்த இடத்தின் பெயர் வருணா போட்டிங் பார்க். கயாக் பெடல் போட், சோஃபா ரைடு, ராஃப்ட்டிங், ஜெட்ஸ்க்கி, பம்ப்பர் ரைடு, வாட்டர் ட்ராம்போலின், ஸ்பீடு போட் என ஏகப்பட்ட வாட்டர் ஸ்போர்ட் விளையாட்டுகளைப் பற்றிச் சொன்னதும் உற்சாகமானார்கள் தருணும் சதீஷும். மூன்று பேரும் ஹைஃபைவ் செய்து கொண்டோம்.

இந்த இடத்தில் தருணின் தன்னடகத்தைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர் CRA மோட்டார் ஸ்போர்ட்ஸின் நிறுவனர் மற்றும் புரொஃபஷனல் கார் ரேஸர் என்பது மோ.வி வாசகர்களுக்கு ஏற்கெனவே நன்கு தெரியும். ஆனால், அவர் ஒரு அட்வென்ச்சர் விரும்பி. மைசூரில் இந்த வருணா போட்டிங் பார்க்கை ரெக்கமண்ட் செய்ததே அவர்தான். இந்தப் பயிற்சிகளையெல்லாம் ஏற்கெனவே தருண் எடுத்திருந்ததால், அவருக்கு இது ஒன்றும் புதுசில்லை!

பிஎம்டபிள்யூ X1 Xdrive 20d Xline காரின் 2 லிட்டர் டீசல் இன்ஜினின் சத்தத்தை ரொம்பவே அனுபவித்தார் தருண். ரேஸராச்சே! 190 bhp பவர் மற்றும் 400 nm டார்க்னா இப்படித்தான் இருக்கும் என்று காட்டினார். இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நெடுஞ்சாலை, நகரம் என எல்லா ஏரியாக்களிலும் சட் சட் என வேலை பார்க்கிறது. மூன்று டிரைவ் மோட்கள் (ecopro, comport, sport) கொடுத்து நம் டிரைவிங் அனுபவத்தை வேற லெவலில் வைத்துக் கொண்டது X1.

பயணத்தின்போது திடீரென வந்த மழை, ஆட்டோ வைப்பர் சென்சிங்கை ஆன் செய்தது மட்டுமல்லாமல், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி எங்களை காருக்குள் இதமாக வைத்திருந்தது. மிக அருமையாக இருந்த ஸ்டீயரிங் கன்ட்ரோல் வாகனத்தைச் செலுத்த இலகுவாக இருந்தது. மாலை நேரங்களில் இதன் எல்இடி ஹெட்லைட்டுகள் பளிச் பவர்… அடடா! குண்டு குழிகளில் எல்லாம் ஏறிப் பறந்தது X1. செம கம்ஃபர்ட். மைசூர் போகும் வரை மிதமான வெயிலில் பனோரமிக் சன்ரூஃபைத் திறந்து வேடிக்கை பார்த்து… கடுமையான வெயில் என்றால் சில் ஏசி காற்றை வாங்கி… என்று குறும்புத்தனமாக இருந்தது பயணம். ஆனாலும் சாதாரண கியா, ஹூண்டாய் கார்களிலேயே வந்துவிட்ட ஒயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்கள் இவற்றையெல்லாம் அடுத்த அப்கிரேடில் எதிர்பார்க்கலாமா பிஎம்டபிள்யூ?

Outback varuna என்ற இடத்தைச் சென்றடைந்தவுடன் வாட்டர் ஸ்போர்ட் போட்டிகள் எங்களுக்காகக் காத்திருந்தன. மடமடவென லைஃப் ஜாக்கெட்டைப் போட்டுக் கொண்டு ஏரியை நோக்கி விரைந்து நடந்தோம். முதலில் காயாகிங் எனும் துடுப்புப் படகு. பிறகு ஸ்பீடு போட். அதன் பிறகு வாட்டர் trampoline ஏரியில் குதித்து நீச்சலடித்த அனுபவம்தான் இந்த ட்ரிப்பின் ஹைலைட். பெரும்பாலும் ஏரிகளில் குளிக்க அனுமதியே இருக்காது. ஆனால் இந்த வருணா லேக்கில் நீங்கள் குதித்து நீச்சல் அடிக்கலாம். இது நீச்சல் தெரியாதவர்களுக்கும் இந்த ஏரி ஒரு சொர்க்க பூமியாக இருக்கும் என்பதுதான் இதன் ஆகப்பெரிய ஹைலைட். காரணம், நம்மைச் சுற்றி எப்போதுமே பயிற்சி பெற்ற கார்டுகள் இருப்பார்கள்.

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

இதன் இன்னொரு சிறப்பு, coastal guard களுக்குப் பயிற்சி அளிக்கும் இடம் இந்த வருணா லேக். ஏன், நீங்கள்கூட ஒரு கோஸ்டல் கார்டு ஆகப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம் என்றார்கள். அப்படி முறையான பயிற்சி எடுத்தவர்தான் தருண். தருணிடம் ஸ்பீடு போட் லைசென்ஸெல்லாம் உண்டு. இதில் வேலைவாய்ப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன என்றார்கள். இதில் முறையான பயிற்சி எடுத்து அவுட்ஸ்டேண்டிங் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தால்… கோஸ்டல் கார்டில் வேலை வாய்ப்பும் பெறலாம். கடல் பிரியர்கள் நோட் செய்து கொள்ளுங்கள். இதற்கென பிரத்தியேக வகுப்புகளும் இங்கு நடைபெறுகின்றனவாம்.

இரண்டு மணிநேரத்துக்கும் மேல் தண்ணீரில் ஊறியபடி, பல விளையாட்டுகளை விளையாடியாச்சு! அதை சோர்வு என்று சொல்லக் கூடாது; பசி என்று சொல்லலாம். தண்ணீரை விட்டு எழுந்திருக்க மனசே இல்லை. இன்னும் ஊறலாம் போல் இருந்தது. ஆனால், மதிய உணவுக்கான அலார்ம் அடித்தது எங்கள் அடி வயிறுகளில்.

மைசூரில் Poojari’s Fishland எனும் ஒரு ரெஸ்டாரன்ட்டை ரெக்கமண்ட் செய்தார் தருண். உண்மையில் ஒரு கோவில் போல் காட்சியளித்தது இந்த ரெஸ்டாரன்ட். ஈரம் சொட்டச் சொட்ட அந்த ரெஸ்டாரன்ட்டுக்குள் நுழைந்தால்… எங்களுக்குப் பிடித்த மாதிரியே எல்லாமே இருந்தது. நுழையும்போது வரிசையாக ஆறு வின்டேஜ் கார்களை நிறுத்தியிருந்தார்கள். ஃபியட், ஆஸ்டன் மார்ட்டின் என பல கார்களும் சில வின்டேஜ் பைக்குகளும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அட! சாப்பாடும் எங்களுக்குச் செம திருப்தி. நீந்துவனவற்றில் எதையும் விடவில்லை. எல்லாவற்றையும் ஒரு பிடிபிடித்துவிட்டு மறுபடியும் எக்ஸ்1 காரின் ஸ்டீயரிங்கைப் பிடித்தோம்.

நீரோடு விளையாடு! மைசூர் வரை... பிஎம்டபிள்யூவில் ஜாலியான டிரைவ்!

பெங்களூருவுக்கு ரூட் மேப்! மறுபடியும் சொல்கிறேன்; இதை சோர்வு என்று சொல்ல முடியவில்லை. ஆனால், மைசூரின் வருணா ஏரியை விட்டுப் பிரிய மனமே இல்லை. வீக் எண்டை செம ஜாலியாக்கிய பிஎம்டபிள்யூவுக்கும், இப்படிப்பட்ட அற்புதமான இடத்தைப் பரிந்துரைத்த தருணுக்கும் மானசீக நன்றியைத் தெரிவித்தபடி 190bhp பவரையும் தெறிக்க விட்டேன்.

சென்னை வந்த பிறகும் வருணா ஏரியில் குளித்த ஈரமும், எக்ஸ்1 கொடுத்த நினைவுகளும் முழுதாக எங்களைவிட்டுப் போகவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism