டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மட்டும் இல்லாமல், எலெக்ட்ரிக் கார்களிலும் கவனம் செலுத்தி வருகிறது டாடா. அந்த வகையில் டாடாவின் நெக்ஸான், டிகோர் போன்றவற்றுக்குச் செம வரவேற்பு!
உங்களுக்கு ஞாபகம் இருக்கும்... ஏற்கெனவே உலகிலேயே விலை குறைவான ஒரு லட்ச ரூபாய் டாடா நானோ, 2000–ங்களில் செம ட்ரெண்டிங்காக இருந்தாலும், பல விமர்சனங்களையும் பெற்றது. அந்த நானோ காரை எலெக்ட்ரிக் வடிவில் இப்போது கொண்டு வரவிருக்கிறது டாடா.

நான்கு இருக்கைகளைக் கொண்ட இந்த ‘டாடா நானோ EV’ காரில் சூப்பர் பாலிமர் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 12V கொண்ட இந்த கார், பத்து விநாடிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும் என்றும், இதன் அதிகபட்ச வேகம் 120 கிலோமீட்டருக்கு மேல் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையொட்டி, ரத்தன் டாடா மற்றும் அவரது 28 வயதான உதவியாளர் சாந்தனு நாயுடுவும் சேர்ந்து டாடா நானோ எலெக்ட்ரா காருடன் நிற்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறது எலெக்ட்ரா EV நிறுவனம். இந்த டாடா நானோ EV காரின் பிரத்யேகத் தயாரிப்பை ரத்தன் டாடா பெற்றுக் கொண்டு சோதனை முறையில் பயணம் செய்து பார்த்ததாகவும், இந்தக் கார் பற்றி அவர் நல்ல கருத்துகளைத் தெரிவித்ததாகவும், இது அவர்களுக்குப் பெருமை அளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பல நல்ல கார்களை வெளியிட்டு இந்தியர்களின் மத்தியிலும் உலகளவிலும் நல்ல பெயர் பெற்றிருக்கும் டாடா கார்களின் வரிசையில், இந்த நானோ எலெக்ட்ரிக்கும் நல்ல பெயரையும் வரவேற்பையும் பெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது.