Published:Updated:

ரேஸர்களையும் கேமர்களையும் இணைக்கும் விர்ச்சுவல் ரேஸ்... களத்தில் இறங்கும் நரேன் கார்த்திகேயன்!

நரேன் கார்த்திகேயன்
நரேன் கார்த்திகேயன்

இந்தியாவின் வேகமான கேமர்களுக்கு ரேஸ் பயிற்சி தருகிறார் நரேன் கார்த்திகேயன்.

இந்தியாவின் வேகமான கார் ரேஸர் நரேன் கார்த்திகேயன், 2006-ல் தொடங்கிய ரேஸ் பயிற்சி பள்ளி NK ரேஸிங் அகாடமி. டிராக் டிரைவிங், கோ கார்ட், MRF சாம்பியன்ஷிப் போன்ற அனுபவங்கள் மூலம் இந்தியாவில் F1 ரேஸர்களை உருவாக்கும் முனைப்பில் தொடங்கப்பட்ட அகாடமி இது. இங்கிருந்து ஆதித்யா பட்டேல் போன்ற வெற்றிகரமான இன்டர்நேஷனல் டிரைவர்களை உருவாக்கியுள்ளார்கள். தற்போது, காலம் போகும் வேகத்துக்கு ஏற்ப 2020-ல் புது தொழில்நுட்பங்களுடனும், புது யுக்திகளுடனும் இன்னும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளார் நரேன் கார்த்திகேயன். இந்த முறை NK ரேஸிங் அகாடமி தேடுவதெல்லாம் டிரைவர்களை இல்லை... வேகமான வீடியோ கேம் ரேஸர்களை.

ஆதித்யா பட்டேல்
ஆதித்யா பட்டேல்

Esports என்பது உலகம் முழுவதும் வரவேற்கப்படும் ஒரு கான்செப்ட். நிஜ விளையாட்டை வீடியோ கேம் மூலம் விர்ச்சுவல் முறையில் வீட்டுக்குள் கொண்டுவருவதுதான் esports. இந்தக் கொரோனா லாக்டௌன் வேளையில், விளையாட்டுகள் எல்லாமே முடங்கியதால் கால்பந்து முதல் கார் ரேஸ் வரை எல்லாமே esports ஆக வந்துவிட்டது. இந்தியாவில் esports நிகழ்ச்சிகளை நடத்தவும், விர்ச்சுவல் வீரர்களை ஊக்குவிக்கவும் அர்மான் இப்ராஹிம் மற்றும் ஆதித்தியா படேல் இணைந்து உருவாக்கிய நிறுவனம் Ultimate E.

ரேஸர்களும் இப்போது வொர்க் ஃபிரம் ஹோம்... உலகின் முதல் விர்ச்சுவல் மோட்டோ ஜிபி ரேஸ்!

இதன் இன்னொரு நோக்கம் அமெச்சுர் கேமர்கள் முதல் ப்ரொஃபஷனல் ரேஸர்கள் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்தியாவின் வேகமான கேமர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது.

தற்போது Ultimate E மற்றும் NK ரேஸிங் இரண்டும் இணைந்து, தேர்வு செய்யப்படும் கேமர்கள் NK ரேஸிங் அகடமிக்குத் தகுதிபெற்று அங்கு நரேன் கார்த்திகேயனின் நேரடிக் கண்காணிப்பில் நிஜ ரேஸர்களாக மாற்றப்படவுள்ளார்கள்.

இந்தப் பயிற்சிகளைப் பற்றி நரேன் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ``இவர்களுக்கு டிரைவிங் நுட்பங்கள், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்றவற்றுக்கான வழிமுறைகள் மற்றும் மீடியா பயிற்சி போன்றவை தரப்படும். அகாடமியில் சிறந்த டிரைவராக தேர்வு செய்யப்படுபவருக்கு ஸ்பான்சர்ஷிப் உதவிகளும் செய்து தரப்படும்" என்றார். இதற்காக ஏற்கெனவே ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்றும் சொல்கிறார் நரேன்.

நரேன் கார்த்திகேயன்
நரேன் கார்த்திகேயன்
``இந்தியாவில் வேகமாகச்  செல்லும் கார், பைக் வந்துடுச்சு. ஆனா...." நரேன் கார்த்திகேயனின் ஆதங்கம்!

"Ultimate E போட்டிகளின் மூலம் இந்தியாவின் வேகமான கேமர் என்று தகுதி பெற்றிருக்கிறார் அமித் குட்டி. இந்த லாக்டௌன் முடிந்த பிறகு அவர் திறமைகளை NK ரேஸிங் அகாடமி மூலம் மதிப்பிட உள்ளோம். பிறகு அவரை Rotax Max நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ்க்குத் தயார் செய்யப்போகிறோம்" என்றார்.

அமித் குட்டி
அமித் குட்டி

சில மாதங்களுக்கு முன்பு நரேன் கார்த்திகேயனைச் சந்தித்தபோது 2020 வரை இந்தியாவின் வேகமான ரேஸராக இருக்கிறீர்களே... இது சந்தோஷமாக இருக்கிறதா என்று கேட்டேன்.

``இதுவரைக்கும் எனக்குப் பிறகு யாருமே இல்லையேனு நினைக்கிறப்போ, வருத்தமாதான் இருக்கு. ஒரு சில இளம் டிரைவர்கள் திறமையானவர்களா இருக்காங்க. ஆனா, ஃபார்முலா ஒன் அளவுக்கு இல்லை. அதனால நான் ஒரு அகாடமியைத் தொடங்கலாம்னு இருக்கேன். என்னுடைய திட்டத்தை இன்னும் முறைப்படுத்திட்டு முழு விவரத்தையும் சொல்றேன்" என்றார்.

இப்போது, நரேனின் அகாடமி புது வடிவத்தில் வந்துவிட்டது. ரேஸ் டிராக்கில் கார் ஓட்ட இளைஞர்கள் தயாரா!

அடுத்த கட்டுரைக்கு