Published:Updated:

`மணிக்கு 150 கிலோமீட்டர் ஸ்பீடு!' - சென்னை டிராஃபிக் போலீஸாருக்கு அதிநவீன பைக்

போக்குவரத்து காவலர்களின் சுஸூகி ஜிக்ஸர் SF 250 பைக்
போக்குவரத்து காவலர்களின் சுஸூகி ஜிக்ஸர் SF 250 பைக்

போக்குவரத்துத் துறைக்குப் புதிதாக கொடுக்கப்பட்டிருக்கும் 5 சுஸூகி இதுவரை தமிழ்நாடு காவல் துறைக்கு கொடுக்கப்பட்டதிலேயே வேகமாகச் செல்லக்கூடிய பைக் இதுதான்.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, காவல்துறையின் வாகனங்களும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். போக்குவரத்து துறையின் ரோந்து பைக்குகள் புல்லட்டிலிருந்து பல்ஸர், அப்பாச்சி என அப்கிரேட் ஆகி இப்போது அதிநவீன BS-6 சுஸூகி வரை அப்டேட் ஆகிவிட்டன.

போக்குவரத்து போலீஸுக்கு புது பைக்
போக்குவரத்து போலீஸுக்கு புது பைக்

நேற்று சென்னையில் காவல்துறை ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில், போக்குவரத்துத் துறைக்கு சுஸூகியின் புதிய நவீன பைக்கான ஜிக்ஸர் SF 250 வழங்கப்பட்டது. முதல் சுற்றாக, தற்போது 5 பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 250சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக் ஒன்றின் விலை, 2.10 லட்சம் ரூபாய்.

Vikatan

போக்குவரத்துக் காவல் துறைக்காகச் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக்கில், சைரன், ஃபிளாஷ் லைட், ஒலிப்பெருக்கி, ஜிபிஎஸ் டிராக்கிங் கருவி, உயரமான விண்ட் ஷீல்டு, பைக்கின் இரண்டு பக்கமும் பேனியர்ஸ் (பெட்டி) எனக் காவலர்களுக்குத் தேவையான ஆக்ஸசரீஸ் அனைத்தும் பொருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாங்கும்போது கறுப்பு மற்றும் சில்வர் நிறத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மாடல், போக்குவரத்துத் துறைக்காக ஸ்பெஷலாக வெள்ளை நிற பெயின்ட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதன் விலை 2.50 லட்சம்.

சுஸூகி ஜிக்ஸர் 250
சுஸூகி ஜிக்ஸர் 250

நெடுஞ்சாலைகளில் அதிக தொலைவு பயணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் பைக் இந்த ஜிக்ஸர் SF 250. கடந்த ஆண்டு புதிதாக விற்பனைக்கு வந்த இது, 26bhp பவர் வெளிப்படுத்தக்கூடியது. அதிகபட்சம் 150 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. இதுவரை தமிழ்நாடு காவல் துறைக்கு கொடுக்கப்பட்டதிலேயே வேகமாகச் செல்லக்கூடிய பைக் இதுதான்.

அடுத்த கட்டுரைக்கு