Published:Updated:

`இந்தியாவில் 2020 ஏப்ரல் மாத கார் விற்பனை!' - அதிர்ச்சி கொடுத்த கொரோனா

ஏப்ரல் 2020
ஏப்ரல் 2020 ( Autocar India )

ஏப்ரல் 2020 மாதத்தில், வாகன விற்பனை பூஜ்யம் என்றளவில் உள்ளது. மாருதி சுஸூகி - மஹிந்திரா - ஹூண்டாய் - டொயோட்டா - எம்ஜி - டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள், தமது டீலர்களுக்கு எந்த வாகனங்களையும் கடந்த மாதம் அனுப்பவில்லை.

கொரோனா... இந்தத் தொற்று நோயால், கடந்த 6 வாரங்களாக இந்தியாவே ஊடரங்கில் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, தொழிற்சாலைகள் - டீலர்கள் - சர்வீஸ் சென்டர்கள் - லாஜிஸ்டிக்ஸ் - உதிரிபாக உற்பத்தியாளர்கள் என எல்லாருமே மூடுவிழா கண்டிருக்கிறார்கள். எனவே, ஏப்ரல் 2020 மாதத்தில், வாகன விற்பனை பூஜ்யம் என்றளவில் இருக்கிறது.

World Car Sales
World Car Sales
Autocar India

மாருதி சுஸூகி - மஹிந்திரா - ஹூண்டாய் - டொயோட்டா - எம்ஜி - டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள், தமது டீலர்களுக்கு எந்த வாகனங்களையும் கடந்த மாதம் அனுப்பவில்லை. எனவே COVID-19 ஆல் ஏற்பட்டிருக்கும் சரிவைச் சமாளிக்க, ஆன்லைன் விற்பனையை வாகன உற்பத்தியாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த வழிமுறையை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக, ஆன்லைனில் புக் செய்யப்படும் வாகனங்களுக்குத் தள்ளுபடிகளையும் வழங்கிவருகிறார்கள்.

உலகளவில் ஐந்தாவது பெரிய கார் சந்தை என்ற பெருமையைக் கொண்ட இந்தியா, மார்ச் 23 முதலாகவே லாக் டெளனில் இருக்கிறது. இதன் வெளிப்பாடாக, புதிய வாகன விற்பனை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 2.92 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், மார்ச் 2020-ல் 1.43 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

April 2020 Sales
April 2020 Sales
Autocar India

இதற்குக் கொரோனாவைத் தவிர பொருளாதார நெருக்கடி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, இன்ஷூரன்ஸ் விலை உயர்வு, ஏபிஎஸ் & க்ராஷ் டெஸ்ட் விதிகள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வந்ததால், கடைசி நேரத்தில் BS-4 வாகனங்களைப் பெரும் தள்ளுபடிகளுடன் வாங்குவதற்குப் பலர் ஆர்வமாக இருந்திருப்பார்கள். ஆனால், அதேநேரத்தில், உலகளவில் இதே மாதத்தில் வாகன விற்பனை 39% சரிவைக் கண்டிருக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில், வாகன ஏற்றுமதி மட்டுமே ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான ஒரே ஆறுதல். சென்னையில் உள்ள துறைமுகத்திலிருந்து 1,341 கார்களை ஹூண்டாயும் குஜராத்தில் உள்ள Mundra Port-ல் இருந்து 632 கார்களை மாருதி சுஸூகியும் - மஹிந்திரா 733 கார்களையும் 8,134 டூ-வீலர்கள் மற்றும் 1,506 ஆட்டோக்களை சென்னைத் துறைமுகத்திலிருந்து டிவிஎஸ்ஸும் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்.

Maruti Suzuki Export
Maruti Suzuki Export
Autocar India

இவை எல்லாமே மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்! கொரோனா பாதிக்கப்படாத அல்லது தாக்கம் குறைந்த பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் - துறைமுகங்கள் இயங்க அனுமதி கிடைத்திருப்பதால், இந்தச் சூழல் கொஞ்சம் சீராவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு