Published:Updated:

சமயநல்லூர் டு கன்னியாகுமரி: ஸ்பெஷல் கேமராக்கள்; ஹைவேஸில் வாகனம் ஓட்டும்போது கவனமா இருங்க!

திறப்பு விழா

சமயநல்லூரிலிருந்து கன்னியாகுமரி வரை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 248 கிலோமீட்டர் வரை தேசிய நெடுஞ்சாலையில் 591 அதிநவீன கேமராக்கள் கண்காணிப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ளன.

சமயநல்லூர் டு கன்னியாகுமரி: ஸ்பெஷல் கேமராக்கள்; ஹைவேஸில் வாகனம் ஓட்டும்போது கவனமா இருங்க!

சமயநல்லூரிலிருந்து கன்னியாகுமரி வரை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 248 கிலோமீட்டர் வரை தேசிய நெடுஞ்சாலையில் 591 அதிநவீன கேமராக்கள் கண்காணிப்புக்காகப் பொருத்தப்பட்டுள்ளன.

Published:Updated:
திறப்பு விழா

தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளைக் குறைக்கவும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் வாகனங்களில் தப்பிச் சென்றால் அவர்களை அடையாளம் காண்பதற்கும் உதவிடும் வகையில்... கடந்த சில மாதங்களாக அதிநவீன கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், சாத்தூர் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கலந்து கொண்டு கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தார்.

கட்டுபாட்டு அறை
கட்டுபாட்டு அறை

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "சமயநல்லூரிலிருந்து கன்னியாகுமரி வரை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 248 கிலோமீட்டர் வரை தேசிய நெடுஞ்சாலையில் 591 அதிநவீன கேமராக்கள் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ளன.இவற்றில் வாகனங்களின் வேகங்களைக் கண்காணிக்கும் மீட்டர்கள் 210 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன கேமராக்கள் இரவு நேரங்களிலும், மழை நேரங்களிலும்கூடத் துல்லியமாக வாகனங்களை அடையாளம் காட்டும். சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பிக்கும் வகையில் தொழில்நுட்பம் வாய்ந்தது. மேலும் தவறான வழியில் நேரெதிராகச் செல்லும் வாகனங்களைச் சிவப்புக் குறியிட்டு அடையாளப்படுத்தக் கூடிய திறன் கொண்டது. இந்த கேமராக்களில் இருக்கும் தொழில்நுட்ப வசதியால் விபத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். எனவே, குற்றச்சம்பவங்களைக் குறைக்க இவை பெரிதும் உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அதிநவீன கண்காணிப்பு கேமரா திட்ட அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.