Published:Updated:

என்னது... ஸ்கூட்டரே இன்னும் டெலிவரி முடிக்கல! அதுக்குள்ள ஓலா எலெக்ட்ரிக் கார் வரப் போகுதா?

ஓலா எலெக்ட்ரிக் கார்

ஓலாவில் இருந்து அடுத்து எலெக்ட்ரிக் காரைத் தயாரிக்கப் போவதாகத் தகவல். டெஸ்லாவைத் தழுவியிருக்கிறதா… நிஸானைக் காப்பி அடித்திருக்கிறதா ஓலா?

என்னது... ஸ்கூட்டரே இன்னும் டெலிவரி முடிக்கல! அதுக்குள்ள ஓலா எலெக்ட்ரிக் கார் வரப் போகுதா?

ஓலாவில் இருந்து அடுத்து எலெக்ட்ரிக் காரைத் தயாரிக்கப் போவதாகத் தகவல். டெஸ்லாவைத் தழுவியிருக்கிறதா… நிஸானைக் காப்பி அடித்திருக்கிறதா ஓலா?

Published:Updated:
ஓலா எலெக்ட்ரிக் கார்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் பற்றிக் கலவையாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. "இன்னும் டெலிவரி டிலே ஆகுது… தரம் சரியில்லை… க்ளெய்ம் செய்கிற மைலேஜ் கிடைக்கவில்லை… ஓலா என் புது நண்பன்... அட, அராய் மைலேஜையே மிஞ்சிடும் போலயே என் ஓலா ஸ்கூட்டரோட மைலேஜ்" என்று மாறி மாறி ஓலாவைத் திட்டுவதும், கொஞ்சுவதுமாய் இருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

இந்த நேரத்தில் ஓலாவில் இருந்து புதுத் தகவல் சொல்லியிருக்கிறார் ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால். பதற்றப்படாதீங்க… நல்ல செய்திதான். ஆம், ஓலாவில் இருந்து புதிதாக எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும், அதற்கு ஆவன செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கென ஒரு எலெக்ட்ரிக் டிசைன் சென்டரை நிறுவ இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் பவிஷ் அகர்வால்.
Ola Retweet
Ola Retweet

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓலா கார் பற்றிய விஷயம் எப்படி வெளி உலகுக்கு வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஆகாஷ் திவாரி என்பவர் எலெக்ட்ரிக் வாகனப் பிரியர். அதுவும் கறுப்புதான் இவருக்குப் பிடிச்ச கலரு. ஏற்கெனவே எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸானில் ஒரு கறுப்பு காரைப் பயன்படுத்தி வருகிறார் இவர். அப்படியே ஒரு கறுப்பு கலர் ஓலா ஸ்கூட்டரையும் புக் பண்ணி அதையும் டெலிவரி எடுத்தவர், தன்னுடைய இரண்டு வாகனங்களையும் புகைப்படம் எடுத்து, ‘‘அப்பாடா… என்னுடைய கறுப்பு எலெக்ட்ரிக் ஃபேமிலி கம்ப்ளீட் ஆகிவிட்டது!’’ என்று ட்விட்டரில் ஓலாவுக்கு டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ஓலா ஓனர் பவிஷ் அகர்வால், ‘‘அப்படியே ஓலா எலெக்ட்ரிக் காருக்கும் இடம் ஒதுக்கி வெச்சுக்கோங்க’’ எனும் ரீதியில் ஒரு ரீ–ட்வீட் செய்ய, இப்படித்தான் ட்ரெண்டானது ஓலா எலெக்ட்ரிக் கார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தற்போதுள்ள ஓசூர் ஓலா தொழிற்சாலையில் பைக்குகள் தயாரிக்க மட்டும்தான் கட்டமைப்பு இருக்கிறது. எனவே, கார் தயாரிப்பதற்கென்று தனி தொழிற்சாலை நிறுவும் ஐடியாவும் இருக்கிறதாம் ஓலாவுக்கு. இதற்கென 100 மில்லியன் டாலர்களை… அதாவது இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறது ஓலா. இதற்காகவே ஒரு டிசைன் நிறுவனத்தையும் நிறுவ இருக்கிறது. அதன் பெயர் Ola Future Foundry.

இதில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிசைனிங் மற்றும் இன்ஜீனியரிங் சம்பந்தமான பணிகள் நடக்கும். இதில் 200–க்கும் மேற்பட்ட ஆட்டோமோட்டிவ் இன்ஜீனியர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கப் போகிறதாம். இந்த Ola Future foundry–யின் மூலமே வாகனங்களுக்கான R&D (Research and Development)–லும் கவனம் செலுத்த இருக்கிறது. அதாவது, பேட்டரி தயாரிப்பும் இங்கேயே நடந்தால்... வாகனங்களின் விலை கணிசமாகக் குறையும். பெங்களூருவில் ஒரு ஓலா கேம்பஸ் இருக்கிறது. இங்கே இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

டெலிவரிக்குக் காத்திருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள்
டெலிவரிக்குக் காத்திருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள்

சரி... அந்த கான்செப்ட் காரைப் பற்றிப் பார்க்கலாம். ஓலாவின் முதல் கார், 5 பேர் பயணிக்கும் ஒரு எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்காகத்தான் இருக்கும். நிஸானில் லீஃப் (Leaf) என்றொரு எலெக்ட்ரிக் கார் இருக்கிறது. அதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் இதை டிசைன் செய்திருக்கிறது ஓலா என்கிறார்கள் சிலர். இது டிக்கியோடு சேர்த்து 5 கதவுகள் கொண்ட மாடலாக இருக்கும். ஆனால், இந்த கான்செப்ட் காரில் கதவுக் கைப்பிடிகள் எதுவும் தெரியவில்லை. எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் ஸ்லீக்கான டெயில் லைட்ஸ், காரின் பெரும்பாலான பகுதிகள் கிளாஸ் பேனல்களாலேயே வடிவமைக்கப்பட இருக்கிறதாம். காரணம், உள்ளே இருந்து வெளியே என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பதற்காக! அதாவது வெளி உலக டச்சோடு பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஐடியா. ஆனால், நம் ஊரில் இது எந்தளவு எடுபடும் என்று தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொரு சங்கதியும் உலவுகிறது இந்த ஓலா கார் பற்றி. அதாவது, இது அமெரிக்காவில் உள்ள டெஸ்லா மாடல் காரைத் தழுவியும் டிசைன் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் இன்னும் சிலர். இப்போதைக்கு டெஸ்லா நிறுவனத்தில் விலை குறைந்த ஹேட்ச்பேக்குகள் எதுவும் இல்லை. அந்த வகையில் மிட் பட்ஜெட் வாடிக்கையாளர்களும் வாங்கும் அளவுக்கு விலை மலிவாக ஒரு ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக்கை ரெடி செய்து கொண்டிருக்கிறது டெஸ்லா. அதன் பெயர் டெஸ்லா மாடல் 3. அப்படி ரெண்டரிங் ஆன டெஸ்லா 3 மாடலின் தொழில்நுட்பங்களையும் டிசைனையும் இந்த ஓலா கார் தழுவியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

மேலும் இந்த கான்செப்ட்டின் இன்டீரியர் டிசைனைக் காட்டவில்லை ஓலா. ஆனால், இதில் செம ப்ரீமியமான இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்க்ரீன் கொண்ட சிஸ்டம் வரும். காரின் பிரேக்குகளுக்கு வித்தியாசமாக பிரேக் கேலிப்பர்களை மஞ்சள் நிறத்தில் கொடுத்திருக்கிறார்கள். இது ஸ்போர்ட்ஸ் கார்களில் இருக்கும் டிசைன்.

ஓலா
ஓலா
Twitter Photo:// @bhash

எல்லாம் ஓகே… ‘எப்போ இந்த கார் ரெடியாகும்’ என்கிறீர்களா? 2023–ல் இந்த கார் தயாரிப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருக்கிறது ஓலா. ஓலா ஸ்கூட்டர்களே இன்னும் டெலிவரி முடிந்தபாடில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் கார்களில் கவனம் செலுத்துவதில் ஓலா கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

‘‘ஊருக்குப் போயிட்டு நிச்சயம் உடனே திரும்பிடுவேன்’’ என்று ‘ஷ்யாம் சிங்காராய்’ எனும் படத்தில் மனைவி சாய் பல்லவியிடம் வாக்குக் கொடுப்பார் ஹீரோ நானி. கொஞ்சம் லேட்டாக, 45 ஆண்டுகள் கழித்துத்தான் திரும்ப மனைவியைப் பார்க்க வருவார். அது மாதிரி கொஞ்சம் லேட்டாகாமல் இருந்தால் ஓகே ஓலா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism