Published:Updated:

BS-6 கிக்ஸ் மைலேஜ் & ரெடி-கோ கேபின்.... நிஸானின் அப்டேட்ஸ்!

கிக்ஸ் BS-6
கிக்ஸ் BS-6 ( Nissan India )

XL, XV, XV Premium, XV Premium (O) எனும் 4 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த நிஸான் எஸ்யூவி, 3 விதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் களமிறங்குகிறது. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் & சில்வர் ஃபினிஷ் உடனான புதிய டேஷ்போர்டு, ரெடி-கோவில் கவனத்தை ஈர்க்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில், தனது மிட்சைஸ் எஸ்யூவியான கிக்ஸின் BS-6 வெர்ஷன் குறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது நிஸான். பெட்ரோல் இன்ஜின்களுடன் மட்டுமே வரப்போகும் இந்த கார், தனது வகையிலே பவர்ஃபுல் மாடலாகப் பெயர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கிக்ஸின் அராய் மைலேஜ் மற்றும் வேரியன்ட் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

106bhp பவரையும் - 14.1கிமீ அராய் மைலேஜையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே 156bhp பவர் மற்றும் 16.3கிமீ அராய் மைலேஜையும் தரும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இதே 4 சிலிண்டர் இன்ஜினுக்கு, மேனுவல் மோடுடன் கூடிய 8 Step CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ரெடி-கோ BS-6
ரெடி-கோ BS-6
Autocar India

ஆனால், இதன் அராய் மைலேஜ் இன்னும் வெளியாகவில்லை. மற்றபடி XL, XV, XV Premium, XV Premium (O) எனும் 4 வேரியன்ட்களில் கிடைக்கும் இந்த நிஸான் எஸ்யூவி, 3 விதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் களமிறங்குகிறது. இதில் XL, XV ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே, 1.5 லிட்டர் NA இன்ஜின் கொண்ட மாடலை வாங்கமுடியும். XV மற்றும் XV Premium ஆகிய வேரியன்ட்களில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலை, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களுடன் வாங்கலாம். டாப் வேரியன்ட்டான XV Premium (O), 1.3 லிட்டர் டர்போ - 6 ஸ்பீடு மேனுவல் காம்போவுடன் மட்டுமே கிடைக்கும். உத்தேசமாக 10-15 லட்ச ரூபாயில் வரப்போகும் கிக்ஸ், செல்ட்டோஸ் - க்ரெட்டா - ஹெக்டர் ஆகியவற்றின் பெட்ரோல் வெர்ஷன்களுடன் போட்டிபோடுகிறது.

5.25 லட்சத்துக்கு காம்பேக்ட் எஸ்யூவி - நிஸானின் மாஸ்டர் பிளான்!
Redi-Go BS-6
Redi-Go BS-6
Autocar India

அதே ஏப்ரலின் முடிவில், தன் விலைகுறைந்த ஹேட்ச்பேக்கான ரெடி-கோவின் BS-6 வெர்ஷன் பற்றிய செய்திகளை வெளியிட்டது டட்ஸன். டீசர் படங்களில் காரின் வெளிப்புற மாற்றங்களை மட்டுமே பார்க்கமுடிந்தது. LED பனி விளக்குகள், LED வேலைப்பாடுடன் கூடிய டெயில் லைட், ரூஃப் ரெயில், Internal Adjustment உடனான மிரர்கள் ஆகியவை அதற்கான உதாரணம். முந்தைய 4 நிறங்களுடன், பிரவுன் & ப்ளூ எனும் புதிய கலர் ஆப்ஷன்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. இதன் கேபின் படங்கள், இணைய உலகில் லீக் ஆகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போது, 8 இன்ச் டச் ஸ்க்ரீன் & சில்வர் ஃபினிஷ் உடனான புதிய டேஷ்போர்டு கவனத்தை ஈர்க்கிறது.

Redi-Go BS-6 Cabin
Redi-Go BS-6 Cabin
Autocar India

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி மற்றும் ரிவர்ஸ் கேமரா உண்டு. சீட்கள் மற்றும் டோர் பேடுகளில், புதிய டூயல் டோன் ஃபேப்ரிக் ஃபினிஷ் இடம்பிடித்துள்ளது.

கிளாஸிக் கார் பிரியர்களைக் கவர்ந்த டொயோட்டா 
கொரோனா! ஏன் நின்றது?
Redi-Go Cabin
Redi-Go Cabin
Autocar India

பின்பக்க Static Reel சீட் பெல்ட்களுக்குப் பதிலாக, Retractable சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடியே Passenger காற்றுப்பை வழங்கப்பட்டுள்ளது. D, A, T, T(O) ஆகிய வேரியன்ட்களில் 800சிசி மாடலும், டாப் வேரியன்ட்டான T(O)-ல் 1000சிசி மாடலும் கிடைக்கும். ஆனால் 1.0 லிட்டர் இன்ஜினில் மட்டுமே, 5 ஸ்பீடு AMT ஆப்ஷன் வரும். மைலேஜ், விலை ஆகியவை இனிமேல் வரலாம்.

அடுத்த கட்டுரைக்கு